India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேசிய மேம்பாட்டு நிறுவனம் மூலம் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி செப். 21, 26-28 ஆகிய 4 நாட்கள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நெல்லை ஸ்ரீபுரம் ரோகிணி கோல்ட் அகாடமியில் நடக்கிறது. தகுதி தேவையில்லை. பயிற்சி முடித்தவர்களுக்கு இந்திய அரசு அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும். கட்டணம் ரூ.8,200. விவரங்களுக்கு www.rohinigoldacademy.com இல் தொடர்பு கொள்ளவும்.
திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [செப்.16] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் கணேசன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.
திருநெல்வேலி மாவட்ட தோட்டக்கலை மலைப் பயிர்கள் துறை சார்பில் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி, தென்காசி, தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஒரு லட்சம் பனை விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து இன்று (செப்.16) நடைபெற்றது. நெல்லை பயிற்சி ஆட்சியர் நவலேந்து ஐஏஎஸ் கலந்து கொண்டு பனை விதைகள் நிரப்பப்பட்ட மூன்று வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தசரா, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி வழியாக சென்னை சென்ட்ரல் செங்கோட்டை இடையே ஏசி பெட்டிகளை கொண்ட சிறப்பு ரயிலை தென்னக ரயில்வே இயக்குகிறது. செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் அக்டோபர் 23ஆம் தேதி வரை இந்த சிறப்பு ரயில் இரு மார்க்கத்திலும் (06121/06122) இயக்கப்பட உள்ளன. அனைத்து பெட்டிகளும் ஏசி பெட்டியாக இணைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி, ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த மின் பொறியாளர் கவின் கடந்த ஜூலை மாதம் கேடிசி நகரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் அவரது மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந்நிலையில் ஜாமின் மனு கோரி உதவி ஆய்வாளர் சரவணன் மனுதாக்கல் செய்திருந்தார். நேற்று மற்றும் இன்று அந்த மனு மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகர பகுதிகளில் ஏராளமான மாணவர்கள் ஆட்டோக்களில் பயணம் செய்து பள்ளிக்கு சென்று வருகின்றனர். ஆட்டோக்களின் அளவுக்கு மீறி மாணவர்களை ஏற்றி செல்வதாக தொடர்ந்து புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமணி போக்குவரத்து காவலர்கள் மூலம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார். குறிப்பிட்ட அளவிலேயே ஆட்டோகளில் குழந்தைகளை ஏற்றி செல்ல வேண்டும் என அறிவுரை.
நெல்லை அரசு போக்குவரத்துக் கழகம் புரட்டாசி சனிக்கிழமைகளான செப். 20, 27, அக். 4, 11 ஆகிய நாட்களில் நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பஸ் சேவை இயக்குகிறது. காலை 6 மணிக்கு நெல்லை புதிய பஸ் நிலையத்திலிருந்து புறப்படும். இந்த பஸ்கள் 9 கோயில்களை தரிசித்து இரவு திரும்பும். (கட்டணம் நபருக்கு ரூ.500) முன்பதிவு காலை 8 முதல் இரவு 8 மணி வரை. விவரங்களுக்கு 7904906730, 9994462713 (or) www.tnstc.in காணவும்.
நெல்லை: திருமால்நகர் பகுதியில் இன்று (செப் 16) அதிகாலை அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு வீட்டில் 3 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், பித்தளை பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை திருடி சென்று விட்டனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின்படி பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அம்பாசமுத்திரம் பொத்தையை சேர்ந்த பாலசுப்பிரமணியம் கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த மனநல பாதித்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். போக்சோ சட்டத்தில் பாலசுப்ரமணியன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்தது. நீதிபதி சுரேஷ்குமார் நேற்று (செப் 15) வழக்கை விசாரித்து பாலசுப்பிரமணியனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் நெல்லையில் அக்டோபர் 11ஆம் தேதி சுற்று பயணம் மேற்கொள்கிறார்.நெல்லை டவுன், வாகையடி முனை, வண்ணார்பேட்டை, பாளை மார்க்கெட், சமாதானபுரத்தில் விஜய் பேசுவதற்கு கட்சியினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். பிரச்சார பயணத்திற்கு அனுமதி கேட்டு தவெக நிர்வாகிகள் ஜாகிர் உசேன், மரிய ஜான், ராஜகோபால், ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.