Tirunelveli

News September 5, 2024

நெல்லை, பாளையில் பலத்த பாதுகாப்பு

image

செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளை முன்னிட்டு மாநகராட்சியில் உள்ள மணிமண்டபம் மற்றும் பாளை., வ.உ.சி. மைதானம் பகுதியில் உள்ள சிதம்பரனார் சிலைக்கு இன்று(செப்.,5) காலை முதல் மாலை வரை பல்வேறு கட்சி பிரமுகர்கள், பல்வேறு அமைப்பை சார்ந்தவர்கள் மரியாதை செய்யவுள்ளனர். இதை முன்னிட்டு மாநகர போலீசார் இந்த பகுதிகளில் அதிகளவில் காலை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News September 5, 2024

கூடங்குளம் கொலை வழக்கில் மேலும் 8 பேர் கைது

image

நெல்லை மாவட்டம் கூத்தங்குடியைச் சேர்ந்த அஜித்(32) என்பவர் கடந்த 2ஆம் தேதி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தர் வழக்கு பதிந்து ஏற்கனவே 5 பேரை நேற்று கைது செய்தார். இதைத் தொடர்ந்து இன்று ரகுமான், அஞ்சிலோ, ஜூலியஸ், அஜய், ரோஜன், செல்வா கில்பர்ட், பார்த்திபன் ஆகிய 8 பேரை கைது செய்தார்.

News September 5, 2024

மூலைக்கரைப்பட்டி: ரூ.50 கோடியில் புறவழிச்சாலை

image

திருநெல்வேலி மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை விரிவாக்கம் சீரமைப்பு போன்ற பணிகள் நடைபெறும் நிலையில், நாங்குநேரி வட்டாரம் மூலைக்கரைப்பட்டியில் ரூ.50 கோடி மதிப்பில் புதிய புறவழிச்சாலை அமைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் காந்தி ராஜன் நெல்லையில் இன்று செய்தியாளர்கள் மத்தியில் கூறினார்.

News September 4, 2024

கொலை குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

image

மானூர் அருகே குறிச்சி குளத்தில் தாய் மகனை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2010ம் ஆண்டு சுப்பிரமணி மற்றும் அவரது தாயார் கோமதி அம்மாள் ஆகியோரை கொலை செய்த வழக்கில் வழங்கப்பட்டுள்ளது. சிராஜ், நாகூர் மீரன் ஆகிய 2 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி ரூ.1000 அபராதம் விதித்து நெல்லை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

News September 4, 2024

நெல்லை மாவட்டத்தில் 8 நல்லாசிரியர்கள் தேர்வு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் 8 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். தொடக்க கல்வித் துறையில் லிசி, கித்தேரி, உஷா மாலதி, ஜூடி ஆகிய நான்கு பேருக்கும், பள்ளிக் கல்வித் துறையில் லலிதா ரமோணா, ஸ்ரீரேணுகா, லீமா ரோஸ், சாந்தி ஆகிய நான்கு பேருக்கும் நல்லாசிரியர் விருது நாளை சென்னையில்  வழங்கப்படவுள்ளது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் இன்று (செப்.3) தெரிவித்துள்ளார்.

News September 4, 2024

நெல்லை: 7ஆம் தேதி 2 ரயில்கள் ரத்து

image

ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சில இடங்களில் ரயில்வே தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதன் காரணமாக வரும் 7ம் தேதி நெல்லை வழியாக செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அன்றைய தினத்தில் நெல்லையிலிருந்து அதிகாலை புறப்பட்டு செல்ல வேண்டிய புருலியா எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது.

News September 4, 2024

9 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் – டிஐஜி அதிரடி

image

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை சரகத்தில் பணியாற்றும் 9 இன்ஸ்பெக்டர்கள்  இடமாற்றம் செய்து டிஐஜி மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். நெல்லையில் குழந்தை தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆக்னஸ் பொன்மணி காத்திருப்போர் பட்டியலுக்கும், நெல்லை சரகத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் கனகராஜ் கொல்லங்கோடு ஸ்டேஷனுக்கும்  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News September 4, 2024

நடிகர் தாடி பாலாஜி இன்று மாநகராட்சி பள்ளிக்கு வருகிறார்

image

நெல்லை டவுன் மாநகராட்சி கல்லணை அரசு பெண்கள் பள்ளியில் படித்து இந்த வருடம் நீட் தேர்வு எழுதி 6 மாணவிகள் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த மாணவிகளை பாராட்டி பரிசு வழங்குவதற்காக நடிகர் தாடி பாலாஜி நாளை (செப்.4) கல்லணை பள்ளிக்கு வருகிறார். காலை 11 மணியளவில் கல்லணை பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

News September 4, 2024

முக்கிய ரயில் சேவை மூன்று மாதம் நீட்டிப்பு

image

நெல்லை – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் சேவை மேலும் 3 மாதத்திற்கு  நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நெல்லையில் இருந்து இரவு 06.45 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06070) செப்டம்பர் 12, 19, 26, அக்டோபர் 3, 10, 17, 24, 31, நவம்பர் 7, 14, 21, 28 ஆகிய வியாழக்கிழமைகளில் இயக்கப்பட்டு மறுநாள் காலை 08.30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இதற்கு முன்பதிவு நடைபெறுகிறது.

News September 4, 2024

எம்பிபிஎஸ்: இதுவரை 85 பேர் சேர்ந்துள்ளனர்

image

எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு முதற்கட்ட கலந்தாய்வு நடந்துள்ளது. இதில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான ஒதுக்கீடு உள்ளிட்ட இடங்களை பெற்ற மாணவர்கள் தங்களுக்குரிய கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர். நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் இதுவரை 85 பேர் சேர்ந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. வாய்ப்பு பெற்றவர்கள் 5ஆம் தேதிக்குள் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!