India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்ட ஆட்சியரை நாளை (அக்.7) பிரபல நடிகரும் தேமுதிக தலைமை செய்தி தொடர்பாளருமான ராஜேந்திரநாத் சந்தித்து மனு அளிக்க உள்ளார். இதில் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு, தென்காசி தெற்கு மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் சுடலைமுத்து தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகில் உள்ள ஓடைக்கரை துலுக்கப்பட்டி கிராமத்தில் கல் குவாரியில் வைக்கப்படும் வெடியால் வீடுகளில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த வீடுகளை தேமுதிக நிர்வாகிகள் கண்டறிந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் கையெழுத்தை வாங்கி உள்ளனர். இந்த கையெழுத்துடன் உள்ள மனுவை நாளை (அக்.7) காலை 10 மணியளவில் நெல்லை மாவட்ட ஆட்சியரை நடிகர் ராஜேந்திரநாத் சந்தித்து மனு அளிக்க உள்ளார்.
நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (அக்.7) மதியம் 3 மணிக்கு அரசு துறையில் பணிபுரியும் அனைத்து துறை பணியாளர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் பதவி உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகள் இருந்தால் அரசுத்துறை ஊழியர்கள் மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் விடுத்துள்ள அறிக்கையில்; தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் விற்பனை செய்ய விரும்புபவர்கள் அதற்கான உரிமம் பெற அக்.19ஆம் தேதி வரை http://tnesevai.tn.gov.in என்ற இணையத்தில் இ-சேவை மையத்தில் உரிய ஆவணங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட தேதிக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே தருவையில் பிரபல மென்பொருள் ZOHO நிறுவனத்தின் மென்பொருள் நிறுவனம் புதிதாக செயல்பட உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை நாளை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் ஆய்வு செய்ய உள்ளார் என ஜோகோ மென்பொருள் நிறுவனம் சார்பில் இன்று(அக்.05) அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உவரி புனித செல்வம் மாதா திருக்கோயில் 50வது வருட பொன்விழா நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இன்று மாபெரும் தேர் பவனி நடைபெற உள்ளது. தேர் பவனியை தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்து தொடங்கி வைக்க உள்ளார். அனைவரும் கலந்து கொள்ளுமாறு நேற்று(அக்.05) கேட்டுக் கொள்ளப்பட்டது.
சேரன்மகாதேவி, நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம் உள்ளிட்ட 6 ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 831 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்குவதற்கான பணிகளையும் களக்காடு நகராட்சி மற்றும் பணகுடி, திசையன்விளை, வள்ளியூர், திருக்குறுங்குடி, ஏர்வாடி, நான்குனேரி, மூலைக்கரைப்பட்டி பேரூராட்சிகளுக்கும் ரூ.423 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் குடிநீர் திட்ட பணிகளை சபாநாயகர் அப்பாவு இன்று(அக்.05) ஆய்வு செய்தார்.
வனவிலங்குகளை பாதுகாக்க வலியுறுத்தி சிவராம் கலைக்கூடம் சார்பில் மாணவ மாணவிகள் பாளை சின்மயா பள்ளி எதிரே உள்ள வனத்துறை அலுவலக சுவரில் வண்ணம் தீட்டும் பணியில் இன்று(அக்.05) காலை ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை மாவட்ட வனத்துறை சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. வனவிலங்குகளின் அறிய தத்துவமான காட்சிகளை மாணவ மாணவிகள் ஓவியமாக வரைந்து வருகின்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கஸ்தூரி ரங்கபுரத்தில் நேற்று செய்தியாளரிடம் கூறியதாவது, தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டதால் 2 ஆம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை அரசு தரும் என நாங்கள் நம்புகிறோம். ஆசிரியர்களுக்கு ஒருபோதும் சம்பளம் குறைபாடு இருக்காது என்றார்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் வேறு மாநிலத்தில் இருந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்தில் மின்னணு குடும்ப அட்டை இல்லை எனில் இ-ஷ்ராம் https://esharam.gov.inஎன்ற இணைய தளத்தில் பதிவு செய்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டை பெற்றுக்கொள்ளலாம். ஏற்கனவே ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்கள் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.