Tirunelveli

News October 8, 2024

14 பேர் வீடியோ காலில் ஆஜர்

image

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைகுளம் பகுதியை சேர்ந்தவர் தீபக் ராஜன். இவரை வெட்டிக் கொன்ற வழக்கு நெல்லை நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக வீடியோ கால் மூலம் விசாரணை நடைபெற்றது. இதில் 14 பேர் ஆஜரான நிலையில் ஆஜராகாத நான்கு பேருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிக்கபட்டது.

News October 8, 2024

அரசு பொருட்காட்சிக்கு இதுவரை 25,000 பேர் வருகை

image

பாளையங்கோட்டை மத்திய சிறை எதிரே உள்ள காது கேளாதார் பள்ளி மைதானத்தில், பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்த பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு இதுவரை 25 ஆயிரம் பேர் வருகை தந்துதுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். நவம்பர் 11 வரை பொருட்காட்சி நடைபெறுகிறது. நீங்க பொருட்காட்சி பார்த்த அனுபவம் உண்டா? SHARE IT.

News October 8, 2024

நெல்லை எஸ்பி தலைமையில் ஆய்வுக் கூட்டம்

image

நெல்லை மாவட்டத்தில் உள்ள உதவி காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்பி சிலம்பரசன் தலைமையில் நேற்று(அக்.,7) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் போதைப்பொருட்கள் கடத்தல் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.

News October 8, 2024

சுத்தமல்லி அருகே கோயிலுக்கு சென்றவருக்கு வெட்டு!

image

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே உள்ள தெற்கு விளாசம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன்(56) நேற்று முன்தினம் இரவு முப்புடாதியம்மன் கோயிலுக்கு வழிபட சென்றுள்ளார். அப்போது வேறொரு பிரிவை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பாலகிருஷ்ணனை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லட்சுமணன், அவரது மகன் ஹரி(19) & 17 வயது சிறுவன் 3 பேரை கைதாகியுள்ளனர்.

News October 8, 2024

நெல்லை: சிறந்த பணியாளர்களை பாராட்டிய எஸ்.பி

image

நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று (அக்.7) நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளினர்கள், அரசு வழக்கறிஞர்கள், பணியாளர்கள் மற்றும் முதல்வர் கோப்பையில் பதக்கம் வென்ற 90 பேரை எஸ்.பி சிலம்பரசன் நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் காவல் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News October 8, 2024

கலெக்டரிடம் குவிந்த புகார் மனுக்கள்

image

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார். இதற்காக துறைவாரியாக அமைக்கப்பட்ட கவுண்டர்களில் பொதுமக்கள் மனுக்கள் பதிவு செய்யப்பட்டன. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

News October 8, 2024

சுய உதவிக் குழு கடன் தர மதிப்பீட்டு முகாம்

image

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு வழங்க ஏதுவாக சிறப்பு கடன் தர மதிப்பீட்டு முகாம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 8ஆம் தேதி நடைபெற உள்ளது. முற்பகல் 10 மணி முதல் 1 மணி வரை அம்பை பகுதியில் உள்ளவர்களுக்கும், 2 மணி முதல் 5 மணி வரை பாப்பாக்குடி பகுதியினருக்கும் நடைபெறும். தொடர்ந்து 9, 10, 16, 17ஆம் தேதிகளிலும் நடைபெறுவதாக நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

News October 7, 2024

திமுக செயற்குழு கூட்டம் – மா.செ அழைப்பு

image

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நாளை (அக்.8) காலை 11 மணிக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட அவைத் தலைவர் ம.கிரகாம்பெல் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள், மாநில அணி நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் தவறாமல் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்குமாறு மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News October 7, 2024

பிசான பருவ ரசாயன உரங்கள் நெல்லை வருகை

image

நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கிருஷ்ணகுமார் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்; நெல்லை மாவட்டத்திற்கு பிசான பருவ சாகுபடிக்கு தேவையான ரசாயன உரங்கள் போதுமான அளவு இன்று (அக்.7) ரயிலில் வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. கங்கைகொண்டான் ரயில் நிலையத்திலிருந்து கூட்டுறவு சங்கங்களுக்கு சாலை மார்க்கமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தேவையான உரங்களை பெறலாம் என தெரிவித்துள்ளார்.

News October 7, 2024

நெல்லை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை

image

நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று(அக்.,7) கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்த்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் அவ்வப்போது மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் வெளியில் செல்வோர் முன்னெசரிக்கையாக குடையுடன் செல்வது நல்லது.

error: Content is protected !!