Tirunelveli

News October 8, 2024

தமிழ் தொண்டர்கள் உதவி தொகை பெற வாய்ப்பு

image

நெல்லை மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள செய்தி குறிப்பு: முதுமை காலத்திலும் பொருள் வறுமை எதிர்கொள்வதற்காக தமிழ் தொண்டர்களுக்கு மாதம் ரூ. 3500, மருத்துவத்திற்கு 500 என 4000 ரூபாய் வழங்கப்படுகிறது. தமிழ் பணி ஆற்றிய விவரங்கள், பரிந்துரை சான்றிதழ், ஆதார் குடும்ப அட்டை ஆகிய நகல்களுடன் 58 வயது நிறைவடைந்தவர்கள் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் இம்மாதம் 31ம் தேதிக்குள் விண்ணப்பத்தை பெறலாம்.

News October 8, 2024

நெல்லை மாவட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

image

அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று (அக்.8) நடைபெற்றது.14 புதிய முதலீட்டு திட்டங்களுக்காக ரூ.38,698 கோடி முதலீட்டுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும், புதிய முதலீட்டு திட்டங்கள் மூலம் நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட 4 மாவட்ட இளைஞர்கள் 46,931 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

News October 8, 2024

நெல்லை பொறுப்பு அமைச்சராக கே.என்.நேரு நியமனம்

image

திருநெல்வேலி மாவட்ட வளர்ச்சி பணி பொறுப்பு அமைச்சராக கே.என் நேரு இன்று(அக்.,8) நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் நெல்லை சட்டமன்ற தொகுதி திமுக பொறுப்பாளராக சங்கரன்கோவில் முன்னாள் எம்.எல்.ஏ முத்துச்செல்வியும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி திமுக பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து புதிய நிர்வாகிகளுக்கு திமுகவினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News October 8, 2024

நெல்லை தொகுதி திமுக பொறுப்பாளருக்கு பாராட்டு

image

நெல்லை சட்டமன்ற தொகுதி தேர்தல் திமுக பொறுப்பாளராக சங்கரன்கோவில் முன்னாள் எம்எல்ஏவும், மாநில வர்த்தக அணி இணைச் செயலாளருமான முத்து செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். புதிய திமுக பொறுப்பாளருக்கு நெல்லை திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் அவருக்கு பாராட்டுகளை திமுகவினர் தெரிவித்து வருகின்றனர்.

News October 8, 2024

14 பேர் வீடியோ காலில் ஆஜர்

image

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைகுளம் பகுதியை சேர்ந்தவர் தீபக் ராஜன். இவரை வெட்டிக் கொன்ற வழக்கு நெல்லை நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக வீடியோ கால் மூலம் விசாரணை நடைபெற்றது. இதில் 14 பேர் ஆஜரான நிலையில் ஆஜராகாத நான்கு பேருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிக்கபட்டது.

News October 8, 2024

அரசு பொருட்காட்சிக்கு இதுவரை 25,000 பேர் வருகை

image

பாளையங்கோட்டை மத்திய சிறை எதிரே உள்ள காது கேளாதார் பள்ளி மைதானத்தில், பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்த பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு இதுவரை 25 ஆயிரம் பேர் வருகை தந்துதுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். நவம்பர் 11 வரை பொருட்காட்சி நடைபெறுகிறது. நீங்க பொருட்காட்சி பார்த்த அனுபவம் உண்டா? SHARE IT.

News October 8, 2024

நெல்லை எஸ்பி தலைமையில் ஆய்வுக் கூட்டம்

image

நெல்லை மாவட்டத்தில் உள்ள உதவி காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்பி சிலம்பரசன் தலைமையில் நேற்று(அக்.,7) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் போதைப்பொருட்கள் கடத்தல் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.

News October 8, 2024

சுத்தமல்லி அருகே கோயிலுக்கு சென்றவருக்கு வெட்டு!

image

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே உள்ள தெற்கு விளாசம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன்(56) நேற்று முன்தினம் இரவு முப்புடாதியம்மன் கோயிலுக்கு வழிபட சென்றுள்ளார். அப்போது வேறொரு பிரிவை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பாலகிருஷ்ணனை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லட்சுமணன், அவரது மகன் ஹரி(19) & 17 வயது சிறுவன் 3 பேரை கைதாகியுள்ளனர்.

News October 8, 2024

நெல்லை: சிறந்த பணியாளர்களை பாராட்டிய எஸ்.பி

image

நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று (அக்.7) நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளினர்கள், அரசு வழக்கறிஞர்கள், பணியாளர்கள் மற்றும் முதல்வர் கோப்பையில் பதக்கம் வென்ற 90 பேரை எஸ்.பி சிலம்பரசன் நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் காவல் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News October 8, 2024

கலெக்டரிடம் குவிந்த புகார் மனுக்கள்

image

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார். இதற்காக துறைவாரியாக அமைக்கப்பட்ட கவுண்டர்களில் பொதுமக்கள் மனுக்கள் பதிவு செய்யப்பட்டன. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

error: Content is protected !!