India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் மறைவை அடுத்து, நெல்லை மாவட்ட பேரவை சார்பில் நாளை(செப்.,12) கடையடைப்பு நடத்த முடிவு செய்துள்ளனர். பாளை., மார்க்கெட் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வணிகர் சங்க பேரவையினர் இந்த கடையடைப்பில் பங்கேற்கின்றனர். மேலும் 12 ஆம் தேதி நடைபெறும் வெள்ளையன் இறுதிச் சடங்கிலும் பங்கேற்பதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று(செப்.,10) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்திலும் இரவு 10 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வரும் 13ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று நேற்று(செப்.10) நீதிபதி ஜெயவேல் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் நெல்லையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அப்பாவு, “நான் கண்டிப்பாக 13ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராவேன்” என கூறினார்
எர்ணாகுளம் – ஆலப்புழா இடையே பணிகள் நடைபெறுவதால் குருவாயூரில் இருந்து சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ்செப்.,10(இன்று), 11, 12, 18, 19, 20 ஆகிய தேதிகளில் கோட்டயம் வழியாக இயக்கப்படும். எர்ணாகுளம் சந்திப்பு, சிறுதாலா, ஆலப்புழா ஆகிய இடங்களுக்கு செல்லாது. இந்த ரயிலுக்கு கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கானூர் உள்ளிட்ட கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
108 ஆம்புலன்சில் ஓட்டுனர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் 12ஆம் தேதி காலை 9 மணி முதல் 2 மணி வரை திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ஓட்டுனருக்கான அடிப்படை தகுதியாக 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பங்கேற்பவர்கள் அனைவரும் அசல் சான்றிதழ்களை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிட்டோ ஜாக் அமைப்பு சார்பில் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்துள்ளனர். நெல்லை மாவட்ட ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால் பள்ளிகளில் வகுப்புகள் பாதிக்காமல் இருக்க மாவட்ட கல்வித்துறை தேவையான முன் ஏற்பாடுகளை செய்துள்ளது. பள்ளிகளுக்கு தேவையான அளவு ஆசிரியர்கள் செயல்பட ஏற்பாடு செய்துள்ளனர்.
அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் அக்.19ம் தேதி தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு நடைபெற உள்ளது. இதில் அனைத்து வகை பள்ளிகளிலும் பிளஸ் 1 பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம். தேர்ச்சி பெறும் 1500 பேருக்கு கல்வித்துறை சார்பில் 2 ஆண்டுக்கு ரூ.1,500 வழங்கப்படும். விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். நெல்லை மாவட்ட பிளஸ் 1 மாணவர்கள் இந்த வாய்ப்பை விட்டுவிட வேண்டாம்.
ராதாபுரம் ஆத்துகுறிச்சி பகுதியில் நேற்று(செப்.09) காலை 3 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டு, சாக்கு மூட்டையில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக பாளை., அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், குற்றவாளியை கைது செய்ய SP சிலம்பரசன் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டதில் தங்கம் என்ற பெண்ணை போலீசார் நேற்று கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாலை நேருஜி கலையரங்கத்தில் வைத்து தமிழ் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.54.28 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தமிழக சபாநாயகர் அப்பாவு மற்றும் கலெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு காசோலைகளை வழங்கினர். நிகழ்ச்சியில் எம்எல்ஏ, மேயர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி – தூத்துக்குடி இடையே இயங்கிய பயணிகள் ரயில் கடந்த மாதம் 19ஆம் தேதி நிறுத்தப்பட்டது. இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என இரு மாவட்ட ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை யடுத்து நேற்று(செப்.09) முதல் இந்த ரயில் இருமாக்கத்திலும் இயங்கத் தொடங்கியது. நேற்று நெல்லையில் இருந்து தூத்துக்குடி சென்ற இந்த ரயிலுக்கு முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகள் வரவேற்பு அளித்தனர்.
Sorry, no posts matched your criteria.