India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக நெல்லை வழியாக சென்னைக்கு இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 22, 24, 26 ஆகிய தேதிகளிலும் அக்.1ம் தேதியும் திருச்செந்தூரிலிருந்து 2 மணி நேரம் 10 நிமிடம் தாமதமாக புறப்படும். அதாவது இரவு 10:35 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் இந்த ரயிலில் செல்லும் பயணிகள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பாளை ஜான்ஸ் பள்ளியில் ஆசிரியர் நெல்சன், ராபர்ட் ஆகியோர் 7 வகுப்பு பயிலும் மாணவர்களை அடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் சாத்ராக் ஞானதாசனிடம் நேற்று புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் ராபர்ட் என்ற ஆசிரியரை டிஸ்மிஸ் செய்தும், நெல்சன் என்ற ஆசிரியரை சஸ்பெண்ட செய்தும் தலைமை ஆசிரியர் இன்று உத்தரவிட்டார். இதனால் கல்வி வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.
இன்று(செப்.11) காலை நிலவரப்படி நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 108.45 அடியாகவும் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 66.87 அடியாகவும் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 119. 36 அடியாகவும் உள்ளது. பாபநாசம் அணை பகுதியில் 14 மி.மீ., மழையும் சேர்வலாறு அணை பகுதியில் 4 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது.
நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி திரும்ப வர வழைக்கும் சுகன்யா திட்டத்திற்கு ராக்கெட் இன்ஜின் ஆறாம் கட்ட சோதனை நேற்று(செப்.10) நடைபெற்றது. இந்த சோதனையில் 1900 வினாடிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக இஸ்ரோ மையத்தினர் தெரிவித்தனர். இந்த சோதனையை இயக்குனர் ஆசிர் பாக்யராஜ் நேரில் பார்வையிட்டார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ ஜாக் சார்பில் ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நேற்று(செப்.10) செய்த நிலையில், தொடக்க கல்வி ஆசிரியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் நெல்லை மாவட்டத்தில் கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படவில்லை. சில இடங்களில் ஆசிரியர்கள் வராத பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் மாற்றுப் பணி ஆசிரியர்களை கொண்டு கற்பித்த பணிகள் நடந்தது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் கூறினார்.
திருநெல்வேலி வழியாக நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரை செல்லும் சூப்பர் பாஸ்ட் விரைவு ரயில் வருகிற 22ஆம் தேதி மட்டும் நாகர்கோவிலில் இருந்து இரவு 11:15 மணிக்கு பதிலாக ஒரு மணி நேரம் 15 நிமிடம் தாமதமாக இரவு 12:30 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் என தென்னக ரயில்வே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் பயணிக்க நெல்லையில் முன்பதிவு செய்தவர்கள் இந்த நேரத்தை கணக்கில் கொள்ள வேண்டும்.
ராதாபுரம் அருகே ஆத்து குறிச்சி கிராமத்தில் சஞ்சீவ் சுஜித்(3) என்ற சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான தங்கம்மாள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், சிறுவன் சஞ்சீவை வீட்டுக்கு அழைத்து வந்து கை கால்களை கட்டி வீட்டு பின்னால் இருந்த வாளி நீரில் மூழ்கடித்துக் கொன்றேன். பின்னர் சாக்கு பையில் கட்டி வாஷிங் மிஷினில் மறைத்து வைத்தேன். தோட்டத்தில் புதைக்க நினைத்தபோது போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் மறைவை அடுத்து, நெல்லை மாவட்ட பேரவை சார்பில் நாளை(செப்.,12) கடையடைப்பு நடத்த முடிவு செய்துள்ளனர். பாளை., மார்க்கெட் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வணிகர் சங்க பேரவையினர் இந்த கடையடைப்பில் பங்கேற்கின்றனர். மேலும் 12 ஆம் தேதி நடைபெறும் வெள்ளையன் இறுதிச் சடங்கிலும் பங்கேற்பதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று(செப்.,10) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்திலும் இரவு 10 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வரும் 13ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று நேற்று(செப்.10) நீதிபதி ஜெயவேல் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் நெல்லையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அப்பாவு, “நான் கண்டிப்பாக 13ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராவேன்” என கூறினார்
Sorry, no posts matched your criteria.