Tirunelveli

News October 12, 2024

நெல்லை மாவட்ட காவல்துறை வலியுறுத்தல்

image

Telegram App-ல் வரும் Part time job, Online job, Work from Home போன்ற விளம்பரங்களின் உண்மை தன்மையை அறியாமல் நம்பி ஏமாறாதீர்கள். சிறிய வேலைகளுக்கு பணம் கொடுப்பது போல் நடித்து பெரிய டாஸ்க் உள்ளதாகவும், அதற்கு பெரிய தொகையை முதலீடு செய்யுமாறு கூறி பண மோசடியில் ஈடுபடுகின்றனர். நீங்கள் பாதிக்கப்பட்டால் https://cybercrime.gov.in/ ல் புகார் அளிக்கலாம் என நெல்லை மாவட்ட காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

News October 11, 2024

திருநெல்வேலி எஸ்பி எச்சரிக்கை

image

வீட்டின் உரிமையாளரிடமிருந்து வீட்டை வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ பெற்று மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News October 11, 2024

அருங்காட்சியகத்தில் போட்டிகள் அறிவிப்பு

image

அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான திறன் திருவிழா வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் கவியரங்கம், நடனம், பேச்சு ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளன. ஒருவர் ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள முடியும். விருப்பமுள்ளவர்கள் 11ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என அரசு அருங்காட்சியக அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

News October 11, 2024

நெல்லையில் மிக கனமழைக்கு வாய்ப்பு

image

நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை(ஆரஞ்ச் அலெர்ட்) பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் இன்று முதல் 6 நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியே செல்லும் மக்கள் முன் பாதுகாப்புடன் செல்வது நல்லது. SHARE IT.

News October 11, 2024

மானூர் அருகே தம்பி வீட்டில் 25 பவுன் திருடிய அக்கா!

image

நெல்லை மானூர் அருகே சுப்பையாபுரத்தை சேர்ந்தவர் பத்மகுமார். இவரது மூத்த சகோதரி அனிதா(40). தம்பியிடம் சொத்தில் அனிதா பங்கு கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி சுப்பையாபுரத்தில் உள்ள தம்பி வீட்டுக்கு வந்த அனிதா, யாரும் இல்லாத நேரத்தில் பீரோவில் இருந்த 25 பவுன் நகையை திருடியுள்ளார். இது குறித்த புகாரின்பேரில் போலீசார் நேற்று(அக்.,10) வழக்குப் பதிந்து அனிதாவை கைது செய்தனர்.

News October 11, 2024

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்

image

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இணைந்து மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் 15 ஆம் தேதி தொடங்கி மாவட்டத்தின் 11 வட்டாரங்களிலும் நடத்துகிறது. முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறன் குழந்தைகள் தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படம் கொண்டு வரவேண்டும் என கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

News October 11, 2024

ஒரே நாளில் 54 கல்லூரிகளில் விழிப்புணர்வு

image

நெல்லை மாவட்ட எஸ்.பி சிலம்பரசன் உத்தரவின் படி காவல்துறை சார்பில் போலீஸ் அக்கா திட்டத்தின் கீழ் இன்று ஒரே நாளில் 54 கல்லூரிகளுக்கு காவல்துறை பெண் அதிகாரிகள் நேரில் சென்று மாணவிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஆலோசனைகளை வழங்கினர். கலந்துரையாடலின் போது எந்தவித பிரச்சனையும் இருந்தாலும் தயக்கம் இன்றி தொலைபேசியில் தெரிவிக்கலாம் என கூறினர்.

News October 10, 2024

மாநகரில் 15 நாள் தடை உத்தரவு அமல்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ் குமார் மீனா எடுத்துள்ள உத்தரவு அறிக்கையில், நெல்லை மாநகரில் முன் அனுமதி இல்லாமல் ஊர்வலம், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், தர்ணா, போராட்டங்கள் நடத்தவும் முன் அனுமதியின்றி பொது இடத்தில் கூடவும் இன்று நள்ளிரவு முதல் 15 தினங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

News October 10, 2024

நெல்லை – திருச்செந்துார் ரயில்சேவை ரத்து

image

நெல்லை ரயில் நிலையத்தில் ரயில் பாதை மின் தடம் மாற்றி அமைக்கும் பணி நடப்பதால் திருச்செந்தூரில் இருந்து மாலை 04.25 மணிக்கு புறப்படும் திருச்செந்தூர் – நெல்லை முன்பதிவில்லாத ரயில் (06676) அக். 15 முதல் நவ. 22 வரை, திங்கட்கிழமைகள் மற்றும் தீபாவளி (அக்.31) தவிர மற்ற நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

News October 10, 2024

6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

image

நெல்லை மாவட்டம் தாழையூத்து முன்னாள் பஞ்சாயத்து தலைவரான கிருஷ்ணவேணியை கொலை செய்ய முயன்ற வழக்கில் ஆறு குற்றவாளிகளும் குற்றவாளிகள் என ஏற்கெனவே நீதிமன்றம் அறிவித்திருந்தது. இன்று அவர்களுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டதில், குற்றவாளிகள் அனைவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.7.6 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!