Tirunelveli

News January 9, 2025

மாற்று பாதையில் ரயில்கள் இயக்கம்

image

ரயில் பயணிகள் கவனத்திற்கு பராமரிப்பு பணிகள் காரணமாக
இன்று ( ஜன.9 ) வியாழன் & சனிக்கிழமை ஆகிய 2 நாட்களும் நெல்லை வழியாக செல்லும் ரயில் வண்டி எண்: 16321 / 16322,
கோயம்புத்தூர் – நாகர்கோவில்
நாகர்கோவில் – கோயம்புத்தூர் 2
மார்க்கத்திலும் கரூர் – விருதுநகர்
இடையே மாற்று பாதையில் இயக்க படுகிறது.
கரூர் – திருச்சி – காரைக்குடி- மானாமதுரை – விருதுநகர் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. *ஷேர்

News January 9, 2025

விமான படையில் சேர மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு 

image

2025 ஆம் ஆண்டிற்கு இந்திய விமானப்படையில் ஆட்சேர்ப்புக்கான அக்னி வீர் வாயு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்த ஆட்சேர்ப்பு கொச்சியில் உள்ள 14வது ஏர் மேன் தேர்வு மையத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வரும் 29ஆம் தேதி தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுக்கு வரும் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள நெல்லை வேலைவாய்ப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

News January 9, 2025

நெல்லை மாவட்டத்தில் இன்றைய நிகழ்ச்சி

image

1.இன்று காலை 9.15 மணிக்கு மகாராஜாநகர் அரசு அலுவலர் வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியில் உள்ள நியாயவிலை கடையில் திருநெல்வேலி மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைக்க உள்ளார்கள்.  2. நெல்லை சரக டிஐஜி மூர்த்தி காலை 10 மணியளவில் தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார். 

News January 9, 2025

நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் 

image

பேட்டை ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் செய்யது அப்துல் ரகுமான். இவர் இன்று (ஜன.09) காலை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியுள்ளார். பின்னர் போனை துண்டிப்பு செய்துள்ளார்.இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News January 9, 2025

அவதூறு பரப்பிய 103 பேர் கைது – எஸ்பி தகவல்

image

நெல்லை மாவட்ட சமூக வலைதளங்களில் பொது அமைதிக்கும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையிலும் அவதூறு கருத்துக்களை பரப்பிய கடந்த இரு ஆண்டுகளில் 82 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 103 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் நேற்று தெரிவித்துள்ளார்.

News January 9, 2025

கரும்பினாலான திருவள்ளுவர் சிலை

image

பாளையங்கோட்டை அடுத்த உத்தம பாண்டியன் குளத்தில் உள்ள தேவேந்திரர் பிசியோதெரபி கல்லூரியில் இன்று பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவை தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியன், கல்லூரியின் தாளாளர் பிரிசில்லா பாண்டியன் ஆகியோர் துவக்கி வைத்தனர். பொங்கல் நிகழ்ச்சியில்  கரும்பினால் செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலை அனைவரையும் கவர்ந்தது.

News January 8, 2025

மாநகரக் கிழக்கு புதிய துணை ஆணையர் பொறுப்பேற்பு

image

திருநெல்வேலி மாநகர (கிழக்கு) காவல் துணை ஆணையராக வினோத் சாந்தாராம் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அவர் இன்று (08.01.2025)பொறுப்பேற்று கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் பல்வேறு முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அவருக்கு காவல்துறை பல்வேறு அலுவலர்கள் அதிகாரிகள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

News January 8, 2025

களக்காடு வனப்பகுதியில் 280 கேமராக்கள்

image

களக்காடு வனப்பகுதியில் ஆண்டு தோறும் வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு கணக்கெடுப்பு பணியை முன்னிட்டு நேற்று வனப்பணியாளர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது .இந்த ஆண்டில் களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட களக்காடு திருகுறுங்குடி கோதையாறு வனப்பகுதியில் 140 இடங்களில் 280 கேமராக்கள் பொருத்தப்படுகிறது. 130 வனத்துறை ஊழியர்கள் இதில் ஈடுபட உள்ளனர்.

News January 8, 2025

நெல்லை: கலைத் திருவிழா போட்டியில் 83 மாணவர்கள் சாதனை

image

பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட கலைத் திருவிழா போட்டியில் மாநில அளவில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 83 மாணவ மாணவிகள் மாநில பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ளனர் என முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார். 14 போட்டிகளில் முதலிடம் 7 போட்டிகளில் இரண்டாம் இடம், 9 போட்டிகளில் மூன்றாம் இடத்தில் வந்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.

News January 8, 2025

நெல்லையில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(ஜன.8) காலை 10:30 மணிக்கு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் மாவட்ட போலீஸ் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. #காலை 10 மணிக்கு பாளையங்கோட்டை சதக்கத்துல்லா கல்லூரியில் பொங்கல் விழா பட்டிமன்றம் நடைபெறுகிறது.#மாலை 6 மணிக்கு டைம்ஸ் நாளிதழ் அலுவலகத்தில் முன்னாள் எம்எல்ஏ வாழை ராஜா பிறந்தநாள் வாழ்த்து அரங்கம் நடக்கிறது.

error: Content is protected !!