Tirunelveli

News September 15, 2024

குவாரியில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழப்பு

image

திருநெல்வேலி மாவட்டம் திடியூரில் உள்ள குவாரியில் குளிக்கச் சென்ற பிளஸ் டூ மாணவர்களான அருண்குமார், நிகில், ஆண்ட்ரூஸ் ஆகியோர் நீரில் மூழ்கியாதாக பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் 2 பேரின் உடலை சடலமாக மீட்டனர். மேலும் ஒரு மாணவனை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

News September 15, 2024

மாணவியிடம் அநாகரிகமாக பேசிய பேராசிரியர்கள் பணி நீக்கம்

image

பாளையில் உள்ள பிரபல கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவியிடம் அதே கல்லூரி பேராசிரியர்கள் செபாஸ்டின்(40), பால்ராஜ்(40) ஆகியோர் செல்போனில் தொடர்பு கொண்டு அநாகரிகமாக பேசியுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து செபஸ்டியனை கைது செய்தனர். பால்ராஜை தேடி வருகின்றனர். இதனிடையே இந்த விவகாரம் குறித்து கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி இரு பேராசிரியர்களையும் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.

News September 15, 2024

பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியர் பணி

image

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இயற்பியல் துறையில் நடத்தப்படும் படிப்புகளுக்கு பயிற்றுவிக்க ஏதுவாக தற்காலிக உதவி பேராசிரியர் நியமிக்கப்பட உள்ளனர். இப்பணிக்கு கல்வித் தகுதி உள்ளிட்ட விபரங்கள் பல்கலைக்கழக இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் தெரிவித்துள்ளார்.

News September 14, 2024

மக்கள் நீதிமன்றத்தில் 3512 வழக்குகள் முடித்து வைப்பு

image

நெல்லை, தென்காசி மாவட்ட தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று நீதிமன்றங்களில் நடைபெற்றது. இதில் 6807 வழக்குகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 3512 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.23 கோடியே 30 லட்சத்து 89 ஆயிரத்து 853 சமரசத் தொகைக்கு முடிக்கப்பட்டது. வரா கடன் வழக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டது. ஏற்பாடுகளை மாவட்ட சட்டப் பணி ஆனை குழு செயலாளர் சார்பு நீதிபதி இசக்கியப்பன் செய்திருந்தார்.

News September 14, 2024

நெல்லையில் 5,627 தேர்வு எழுதவில்லை

image

TNPSC குரூப் 2 குரூப் 2a தேர்வுகள் இன்று நெல்லை மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த தேர்வுக்கு 20,223 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 14,596 பேர் தேர்வு எழுத வந்தனர். 5,627 பேர் தேர்வு எழுத வரவில்லை, மொத்தம் விண்ணப்பித்த நபர்களில் 72.5% பேர் மட்டுமே தேர்வு எழுதினர். அதிகபட்சமாக அம்பை, சேரன்மகாதேவி வட்டாரத்தில் 75% பேர் தேர்வு எழுதினர்.

News September 14, 2024

நெல்லை ஜான்ஸ் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

image

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியில் வருகின்ற 21ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் 200க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு தேர்வு செய்ய உள்ளனர். முகாமில் கலந்துகொள்ள tnprivatejobs.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது‌‌.

News September 14, 2024

மக்கள் நீதிமன்றத்தில் 2000 வழக்குகள் விசாரணை

image

2024 ஆம் ஆண்டின் 3வது தேசிய மக்கள் நீதிமன்றம் திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவால் இன்று(செப்.14) நடைபெற்றது. முதன்மை மாவட்ட நீதிபதி சாய் சரவணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள் குடும்ப நல வழக்குகள் உரிமையியல் வழக்குகள் உட்பட 2000 வழக்குகள் விசாரிக்கப்பட்டு சமரசமாக பேசி தீர்வாக காசோலைகள் வழங்கப்பட்டன.

News September 14, 2024

ஓணம் பண்டிகை: நெல்லை ரயில்களில் கூட்டம்

image

கேரளாவில் நாளை பாரம்பரியமிக்க ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வசிக்கும் கேரள மாநிலத்தினர் நேற்று மாலை முதல் தங்கள் சொந்த ஊர்களுக்கு பஸ், ரயில்களில் புறப்பட்டு சென்றனர். நேற்று இரவு நெல்லையில் இருந்து சென்ற குருவாயூர் விரைவு ரயில், இன்று காலை சென்ற அனந்தபுரி ரயில் உள்ளிட்ட கேரள மார்க்க ரயில்களில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

News September 14, 2024

வீடுகளில் SOLAR கூறை: மின்வாரியம் அழைப்பு

image

நெல்லை மின்வாரியத்தினர் இன்று(செப்.,14) விடுத்துள்ள செய்தி குறிப்பில், பொதுமக்கள் SOLAR ROOF TOP திட்ட சூரிய ஆற்றலுக்கு மாறி மின் சேமிப்பு செய்யலாம். விருப்பம் உள்ளவர்கள் pmsuryaghar.gov.in, tnebltd.gov.in/usrp/applycfa என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அரசின் மானியப் பயன்கள், குறைந்த ஆற்றல் பில்கள், அதிக சேமிப்பு, மலிவு பராமரிப்பு, சுற்றுச்சூழலுக்கு ஏற்றது என தெரிவித்துள்ளனர்.

News September 14, 2024

மாணவியிடம் ஆபாச பேச்சு; சேவியர் கல்லூரி பேராசிரியர் கைது

image

பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய கல்லூரி பேராசிரியர் ஜெபாஸ்டின் மீது புகார் செய்யப்பட்டது. தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் ஆபாசமாக பேசிய கல்லூரி பேராசிரியர் நேற்று(செப்13) இரவில் கைது செய்யப்பட்டார். மற்றோரு பேராசிரியர் தலைமறைவானார். இச்சம்பவம் பாளை., பகுதியில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!