India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங்(60) கடந்த மே மாதம் 4ம் தேதி வீட்டு தோட்டத்தில் பாதி உடல் எரிந்த நிலையில், இறந்து கிடந்தார். அவர் இறப்புக்கான காரணம் குறித்து சிபிசிஐடி போலீஸ் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று 3 பெண்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், இவ்வழக்கில் இதுவரை 140 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலி மாவட்ட விவசாயிகளுக்கு செப்டம்பர் மாதத்திற்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 20ஆம் தேதி பகல் 11 மணிக்கு நெல்லை கலெக்டர் அலுவலக இரண்டாவது தளத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெறும். இதில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்பதால் விவசாயிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் நேற்று(செப்.16) தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் 24 ஊராட்சிகளில் உள்ள ஊராட்சி சேவை மையத்தில் 18 முதல் 20ஆம் தேதி வரை மகளிர் சுய உதவி குழுக்களுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் பரிசு ரூ. 300, 2ம் பரிசு 200, 3ம் பரிசு 100ம் வழங்கப்படும். வட்டாரப் போட்டிகளில் ரூ.2500 முதல் பரிசு வழங்கப்படும். மாவட்ட போட்டிகளில் ரூ.5000 முதல் பரிசு வழங்கப்படும் என கலெக்டர் கார்த்திகேயன் இன்று தெரிவித்துள்ளார்.
மிலாடி நபியை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் உள்ளிட்ட அனைத்து வகை பார்களையும் நாளை (செப்.17) மூடுவதற்கு திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். விதிகளை மீறி கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மிலாடி நபி பண்டிகை நாளை(செப்.17) கொண்டாடப்பட உள்ளது. இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட அரசு ஹாஜி கே. முகமது கஸ்ஸாஸி வெளியிட்ட செய்தி குறிப்பில் இஸ்லாமியர்களின் புனித நாட்களில் ஒன்றான மிலாது நபி (முகமது நபி பிறந்தநாள்) நாளை(செப்.17) கொண்டாடப்படுகிறது என அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் பகுதிகளில் தற்போது மழைப்பொழிவு இல்லாததால் அணைகளுக்கு வரும் நீர்வரத்து கடுமையாக சரிந்துள்ளது. பாபநாசம் அணைக்கு நீர்வரத்து ஆனது வினாடிக்கு 487 கன அடியாகவும்,மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 8 கன அடியாகவும் நீர்வரத்து உள்ளது. சேர்வலாறு, கொடுமுடி ஆறு, நம்பியார், வடக்கு பச்சை யாறுஆகிய அணைகளுக்கு நீர்வரத்து முற்றிலுமாக தடை செய்யபட்டதாக இன்று மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் நாள்தோறும் ஏராளமான வெளியூர் மற்றும் வெளி மாநிலத்திலிருந்து சுற்றுலா பயணிகள் குளித்து செல்கின்றனர். இவர்களுக்கு அந்த பகுதியில் உள்ள ஆபத்தான இடம் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர். இதனை தடுக்கும் வகையில் சமூக ஆர்வலர் கிரிக்கெட் மூர்த்தி, பாபநாசம் வரும் பக்தர்கள் சுற்றுலா பயணிகளிடம் நோட்டீஸ் வழங்கியும் பதாகைகள் மூலம் விழிப்புணர்வும் நேற்று ஏற்படுத்தப்பட்டது.
நெல்லை, தூத்துக்குடியை உள்ளடக்கிய மதுரை கோட்ட ரயில்வேயில் ஒன்றிய அரசு அறிமுகம் செய்துள்ள புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் 6664 ரயில்வே ஊழியர்கள் பயனடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் அரசின் பங்களிப்பு 14 சதவீதத்திலிருந்து 18.5% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஊழியர்களின் பங்களிப்பு உயராது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
நெல்லை பேட்டை, அம்பை உள்ளிட்ட ஐடிஐ பயிற்சி மையங்களில் நடப்பு கல்வி ஆண்டிற்கு ஏராளமான மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை வழங்கப்பட்டிருந்தது. தற்போது மாணவர்களின் நலன் கருதி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை வரும் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளனர். விருப்பமுள்ள மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
பாளையங்கோட்டையில் உள்ள பிரபல கலை கல்லூரியின் பேராசிரியர்கள் செபஸ்தியார், பால்ராஜ் ஆகியோர் அதே கல்லூரி மாணவியிடம் அநாகரிகமாக பேசிய சம்பவத்தில் செபஸ்டியான் கைது செய்யப்பட்டார். பேராசிரியர் பால்ராஜ் தலை மறைவாக உள்ளார். இதையடுத்து அவரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.