Tirunelveli

News October 15, 2024

நெல்லை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மனு

image

திருநெல்வேலி மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு கேட்டு பல்வேறு கட்டங்களாக போராடி வருகின்றனர். ஆனாலும் கோரிக்கைகள் நிறைவேறாத நிலையில் இன்று (அக்.14) தூய்மை பணியாளர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் தங்களுக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்க மாநகராட்சி நிர்வாகத்திடம் அறிவுறுத்தும்படி கேட்டுக் கொண்டனர்.

News October 14, 2024

கல்வி உதவித்தொகை குறித்து ஆட்சியர் அறிக்கை

image

இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (அக்.14) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://scholarships.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

News October 14, 2024

நெல்லை: மாநில விருதுக்காக விண்ணப்பிக்கலாம்

image

டிசம்பர் 3 ஆம் தேதி உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தன்று மாற்றுத் திறனாளிகளின் நலன் சார் விருதுகள் தமிழ்நாடு முதல்வரால் வழங்கப்பட உள்ளது. இதற்காக சிறந்த பணியாளர் சுய தொழில் புரிவோருக்கு 10 விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுகளுக்கு விண்ணப்பிப்போர் வரும் 30ஆம் தேதிக்குள் மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்குமாறு இன்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News October 14, 2024

பாளை., தசரா விழாவில் நெல்லை எம்பி பங்கேற்பு

image

பாளையங்கோட்டையில் நடைபெற்று வரும் தசரா திருவிழாவில் முன்னிட்டு 12 சக்கரங்கள் நேற்று அணிவகுத்து நின்றன. இதில் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், பாளை., வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் துரைராஜ், முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் பலர் கலந்து கொண்டனர்.

News October 14, 2024

பருவமழை: தண்ணீர் தேங்கும் 72 இடங்கள் கண்டுபிடிப்பு!

image

நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று(அக்.,13) வெளியிட்ட அறிக்கையில், தண்ணீர் அதிகமாக தேங்கும் 72 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சிறப்பான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் வஉசி திடலில் மாநில மீட்பு குழு வீரர்கள் பங்கேற்கும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்றார்.

News October 14, 2024

நாகர்கோவில் – கச்சுகுடா ரயில் 10 மணி நேரம் தாமதம்

image

நாகர்கோவிலில் இருந்து கச்சுகுடாவிற்கு நேற்று(அக்.,13) அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 10 மணி நேரம் தாமதமாக காலை 10:25 மணிக்கு புறப்பட்டு வந்தது. இணை ரயில் வருகை தாமதம் காரணமாக இந்த ரயில் நேற்று தாமதமாக இயக்கப்பட்டது. இதனால் நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பயணிகள் வெகு நேரம் ரயில் நிலையங்களில் காத்துக் கிடந்தனர்.

News October 14, 2024

திருநெல்வேலியில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் இன்று(அக்.,14) 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்திலும் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 6 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் பல மாவட்டங்களில் கனமழை கொட்டி சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பது குறிப்பிடத்தக்கது. SHARE IT.

News October 14, 2024

கே.என்.நேருவை சந்தித்த பேட்டை பகுதி நிர்வாகிகள்

image

தமிழக அமைச்சர் கே.என்.நேரு திருநெல்வேலிக்கு முதல்முறையாக வந்ததால் பேட்டை பகுதி திமுக நிர்வாகிகள் திருநெல்வேலி பொறுப்பு அமைச்சரை சந்தித்து பொன்னாடை வழங்கினர். பேட்டை பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் எஸ்.ராஜகனி வழங்கினார். வர்த்தக அணி செயலாளர் முன்னாள் எம்எல்ஏ மாலை ராஜா மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News October 13, 2024

நெல்லை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நெல்லை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே பகிரவும்.

News October 13, 2024

நெல்லை – சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

image

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகை என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை முன்னிட்டு சொந்த ஊர் சென்ற மக்களுக்காக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நெல்லையில் இருந்து செங்கல்பட்டிற்கு இன்று (அக்.13) மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு நாளை அதிகாலை 3.30 மணிக்கு செங்கல்பட்டை அடையும். மறுமார்க்கமாக இதே ரயில் 14ஆம் தேதி புறப்பட்டு 15ஆம் தேதி நெல்லையை வந்தடையும் என தெற்கு ரயில்வே நேற்று (அக்.12) அறிவித்துள்ளது.

error: Content is protected !!