Tirunelveli

News September 20, 2024

நெல்லையில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று பகல் 11 மணிக்கு ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்க உள்ளனர். எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பங்கேற்குமாறு ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

News September 20, 2024

நெல்லையில் 5 கோடி வரை மானியத்துடன் கடன் ஆட்சியர் அறிவிப்பு

image

நெல்லை மாவட்டத்தில் புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் (NEEDS) கீழ் தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்கு ரூ.5 கோடி வரை மானியத்துடன் கூடிய தொழில் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் தொழில் முனைவோர்கள் www.msme.online.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

News September 19, 2024

நெல்லை: அரசு தற்காலிக பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்

image

நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்காலிக பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

News September 19, 2024

பாளையில் செப்டம்பர் 21 ல் வேலை வாய்ப்பு முகாம்

image

திருநெல்வேலி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் இளைஞர்களுக்கான மாவட்ட அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற செப்டம்பர் 21ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பாளை தூய யோவான் கல்லூரியில் வைத்து நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்ளுமாறு இன்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

News September 19, 2024

கல்லிடை – தாம்பரம் ரயில் முன்பதிவு இன்று ஆரம்பம்

image

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை முடிந்து ஜனவரி 17ஆம் தேதி கல்லிடைக்குறிச்சியில் இருந்து நேரடியாக தாம்பரம் செல்லும் (வண்டி எண் 20684) அதிவேக விரைவு ரயிலின் முன்பதிவு இன்று (செப்.19) காலை 8 மணிக்கு ஆரம்பமாகின்றது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நல சங்கம் தெரிவித்துள்ளது.

News September 18, 2024

கொலை வழக்கில் பெண் ஒருவர் குண்டாஸில் கைது

image

திசையன்விளை கக்கன் நகரை சேர்ந்த மதிராஜன், மதியழகன் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 17ல் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக ராஜ்குமார், வெவின்குமார், அருண்குமார் என்ற பருண் குமார் ஆகிய 3 பேர் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக திவ்யா என்பவர் எஸ்பி வேண்டுதலின்படி கலெக்டர் உத்தரவை அடுத்து இன்று (செப்.18) குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை தனி சிறையில் அடைக்கப்பட்டார்.

News September 18, 2024

மாஞ்சோலை விவகாரம்: 4 நாள் விசாரணை

image

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த நெல்லையில் தேசிய மனித உரிமை ஆணையக் குழு முகாமிட்டுள்ளது. இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள டிஎஸ்பி ரவி சிங் கூறுகையில், இன்று முதல் 21 ஆம் தேதி வரை தொழிலாளர்களிடம் நான்கு நாட்கள் விசாரணை நடத்தப்படும். உரிமை மீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

News September 18, 2024

நெல்லையில் பிரதான அணைகளின் நிலவரம்

image

அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற அணையான 143 அடி முழு கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு நீர்வரத்து ஆனது வினாடிக்கு 371 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 904 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 107.45 அடியாக உள்ளது. 118 அடி முடி கொள்ளை கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 66.40 கனஅடியாக உள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.

News September 18, 2024

நெல்லையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு

image

நெல்லை கங்கைகொண்டான் சிப்காட்டில் செயல்பட்டு வரும் டாடா பவர் சோலார் நிறுவனத்தில் மாற்றுத்திறனாளிகள் பணிகள் நிரப்பப்பட உள்ளன. வருகிற 21ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாளை தூய யோவான் கல்லூரியில் நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாமில் 18 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்ட மாற்று திறனாளிகள் குறிப்பாக காது கேட்காத வாய்பேச முடியாதவர் கலந்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் இன்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

News September 18, 2024

வருவாய் பின் தொடர் பணிக்கு தனி தாசில்தார்

image

நெல்லை நகர பகுதிக்கு வருவாய் பின் தொடர் பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி முதல் தனி தாசில்தார் மூலம் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் 3 இடங்களில் வருவாய் பின் தொடர் பணிகள் தாசில்தார் தலைமையில் நடைபெறுகின்றது. இதில் பட்டா பெயர் மாற்ற விசாரணைக்கு நலத்திட்ட தனி தாசில்தார் அலுவலகத்தில் நேரில் ஆஜர் ஆஜராகி மாற்றத்திற்கான உத்தரவுகளை பெற்று பயனடையலாம் என ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!