India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒன்றிய அமைச்சர் மன்ஷுக் மாண்டவியாவை நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் புதுடெல்லியில் இன்று(அக்.16) சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் நெல்லை, தென்காசி மாவட்டத்தை உள்ளடக்கிய பகுதியில் உள்ள லட்சக்கணக்கான பீடி தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை ரூ.800ல் இருந்து ரூ.6000 ஆக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தினார். நிச்சயம் ஆவன செய்வதாக அமைச்சர் உறுதி அளித்தார்.
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் வருகின்ற 19ஆம் தேதி தீந்தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை இணைந்து நடத்தும் மாணவர்களின் திறன் விழா நடைபெற உள்ளது. இதில் கவியரங்கம், நடனம், கட்டுரை, பேச்சு போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாட்டினை தீத்தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை நிறுவனர் நெல்லை அருள் செய்து வருகிறார். இதில் அனைவரும் கலந்துகொள்ள அருங்காட்சியக காப்பாட்சியர் சிவகுமார் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
மாஞ்சோலையை சேர்ந்த அமுதா, ஜான் கென்னடி, ரோஸ்மேரி, ராஜன் உள்ளிட்ட தொழிலாளர்கள் வீட்டுமனை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை ஹைகோர்ட் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நேற்று(அக்.,15) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுக்கள் மீதான இறுதி விசாரணைக்காக அக்.,23 ஆம் தேதிக்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
நெல்லையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று சிறந்த ஆசிரியர்களுக்கு பொன்னாடை போற்றி சபாநாயகர் அப்பாவு பேசுகையில், நாங்கள் படிக்கும்போது வகுப்பறையை சுத்தப்படுத்துதல், தண்ணீர் எடுத்தல் போன்ற பணிகளை குழு சுழற்சி அடிப்படையில் செய்வோம். மாணவர்கள் அன்பாக இருப்பதற்கு 100% பணியாற்றுகிறவர்கள் ஆசிரியர்கள். எனவே உள்ள சிறு சிறு விஷயங்களுக்கு ஆசிரியர்களை தண்டிக்கும் நிலையை மாற்றுங்கள் என்றார். SHARE IT.
திருநெல்வேலி மாவட்டத்தில் 2025 ஜனவரி 14-ஆம் தேதி வரை குழந்தை பிறக்கும் நாள் உள்ள 5797 கர்ப்பிணிகள் கனமழை எச்சரிக்கை வழங்கப்படும் நேர்வுகளில் முன்கூட்டி மருத்துவமனைகளில் சேர்ந்துகொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக குடும்பநல இணை இயக்குனர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று தெரிவித்துள்ளார்.
போதை பொருள்களால் இளைஞர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை சரகத்தில் 256 கல்லூரிகள் உள்ளன. கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதை பழக்கத்தை தடுக்க மூன்று கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நெல்லை சரக டிஐஜி மூர்த்தி தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (அக்.15) இரவு நேர ரோந்து பணி அதிகாரிகள் விபரங்களை வெளியிட்டுள்ளனர். அதன்படி துணை காவல் கண்காணிப்பாளர் மீனாட்சி நாதன் தலைமையில் காவலர்களின் பெயர் மற்றும் அவர்களின் தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு நேர உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடாக மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு 3 மாத தேவைக்கான ரேசன் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (அக்.15) தெரிவித்துள்ளார்.
சேரன்மகாதேவி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய எல்கைக்குட்பட்ட முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் இன்று (அக்.15) ஒருவர் தண்ணீரில் மூழ்கி விட்டதாக தகவல் கொடுக்கப்பட்டது. தகவலையடுத்து சேரன்மகாதேவி கூடுதல் பொறுப்பு அலுவலர் பலவேசம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு தண்ணீரில் மூழ்கி இறந்த வாலிபர் உடலை மீட்டனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மாவீரர் மருதநாயகம் கான்சாகிப் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு நெல்லை புறநகர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சமூக ஊடக அணி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவிற்கு சீர்மிகு நிர்வாகத்தை தந்து வளம் கொழிக்கும் நல்லாட்சி வித்திட்ட மாவீரன் மருதநாயகம் கான்சாகிப்பை நினைவு கூறுவோம் என புகழ்ந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.