India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லையில் இசை கச்சேரிக்காக முகாமிட்ட இசைஞானி இளையராஜாவை நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேச ராஜா நேற்று(ஜனவரி 17) இரவு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து, அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். நாதஸ்வர சக்கரவர்த்தி காருக்குறிச்சி அருணாச்சலம் வாரிசையும் சந்தித்து பேசினார். இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் உடன் சென்றனர்.

கேரளாவில் வேலை செய்து வந்த தேவர்குளம், வடக்கு புளியம்பட்டி பகுதியை சேர்ந்த சேதுபதி(30), பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று(ஜன.17) மாலை இவரும், இன்னோரு நபரும் பைக்கில் சென்றபோது தேவர்குளம் அருகே விலை உயர்ந்த பைக்கில் வந்த 3 பேர் திடீரென சேதுபதியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். சம்பவம் குறித்து போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

நெல்லை வடக்கு மாவட்ட பாஜக தலைவர் தயா சங்கரின் பேஸ்புக் பதிவு பாஜகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் ‘இத்துடன் பாரதிய ஜனதா கட்சியில் எனது அரசியல் பயணம் நிறைவடைகிறது. என்னுடன் பயணித்த அனைத்து சகோதர, சகோதரிக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என நேற்று(ஜன.17) குறிப்பிட்டுள்ளார். மாவட்ட தலைவரின் இந்த முடிவால், என்ன பிரச்னை? என தெரியாமல் பாஜகவினர் குழப்பம் அடைந்துள்ளனர்.

முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் குளிக்க வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் 5 பேர் தண்ணீரில் மூழ்கியதில் 3 பேர் பொதுமக்களால் மீட்கப்பட்டனர். வைஷ்ணவி என்ற சிறுமியின் உடல் அம்பாசமுத்திரம் தீயணைப்பு மீட்பு படையினரால் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டது. மேலும் ஒருவரது உடல் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரால் தேடப்பட்டு வருகிறது.

தாமிரபரணி நீர் வழித்தடங்களில் வெளிநாட்டு பறவைகள் கணக்கெடுப்பு 24ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை நாரணம்மாள்புரம் உள்பட பல்வேறு இடங்களில் நடைபெறும். கணக்கெடுப்பில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட கூகுள் படிவத்தில் https://forms.gle/J3mVGSbENUMwPqVF6 22 5 பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் தகவலுக்கு 95244 25519 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கணக்கெடுப்பு குழுவினர் இன்று அறிவித்துள்ளனர்.

தமிழக பகுதியில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடரும் மழை பெய்தது. இன்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை தொடரும் என தென்காசி வெதர்மேன் அறிவித்துள்ளார். அதேபோல் நெல்லை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னீர் பள்ளம் தருவை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் தனது மனைவி வேளாங்கண்ணியுடன் பைக்கில் ஆரைகுளம் பாலம் அருகில் நேற்று சென்று கொண்டிருந்தார்.அந்த வழியாக வந்த மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக வேளாங்கண்ணியின் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு உயிரிழந்தார்.

நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் ரயில் நிலையத்திற்கு நேற்று (ஜன.16) 1,332 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் வந்து இறங்கியது. இந்த உரங்களை சுமை தூக்கும் தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி அனுப்பி வைத்தனர். உர மூட்டைகள் அனைத்தும் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் இளையராஜாவின் இசை கச்சேரிக்கு வருபவர்கள் குறுகிய சாலை வழியாக வரவேண்டி உள்ளதாகவும், அதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கச்சேரிக்கு வரும் வாகனங்களுக்கு போதுமான இட வசதி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தற்போது தெரிவித்தார்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக மாலை இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று (ஜனவரி 16) மாநகரப் பகுதியில் வானம் மேகமூட்டமாக இருந்தது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை நீடிப்பதால் வருகிற 19 மற்றும் 20ஆம் தேதிகளில் நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மீண்டும் பரவலாக மழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா கணித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.