India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்டத்தில் இன்று (நவ.4) காலை 8:00 மணி முதல் மாலை 4 மணி வரை மொத்தம் 69.20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக அம்பாசமுத்திரம் பகுதியில் 25.40 மில்லி மீட்டர் மழை பதிவானது. மணிமுத்தாறு, ராதாபுரம் பகுதியில் தலா 11 மில்லி மீட்டர் மழை பெய்தது. பாளையங்கோட்டையில் 6மி.மீ, சேரன்மகாதேவியில் 5 மில்லி மீட்டர் மழை பெய்தது.
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் ஆறாம் தேதி நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றுள்ள தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மலேசிய நாட்டின் துணை அமைச்சர் குணசேகரனை மரியாதை நிமித்தமாக கோலாலம்பூரில் இன்று (நவம்பர் 4) சந்தித்து பேசினார். அவருடன் முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை மூலைக்கரைப்பட்டியில் இன்று அரசு பஸ்சில் லக்கேஜ் உடன் ஏற சென்ற பயணி ஒருவரை நடத்துநர் கன்னத்தில் அறைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதையடுத்து போக்குவரத்து கழக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பயணியை தாக்கிய நடத்துநர் பெயர் சேதுராமலிங்கம் என்பது தெரியவந்துள்ளது. எனவே சேதுராமலிங்கத்தை சஸ்பெண்ட் செய்து நெல்லை போக்குவரத்து கழக பொதுமேலாளர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை ஜல் நீட் அகாடமியில் அரங்கேறிய மனித உரிமை மீறல் தொடர்பான விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணையத்தில் தற்போது வழக்கு பதிவானது. நெல்லை மாவட்ட ஆட்சியர், நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளருக்கு மாநில மனித உரிமை ஆணையத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது. ஆட்சியர் மற்றும் காவல்துறை ஆணையர் விளக்கம் அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மலேசியா நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஜோஹார் அப்துல் அவர்களை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் அப்பாவு மரியாதை நிமித்தமாக இன்று கோலாலம்பூரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது மலேசியா நாட்டின் துணை அமைச்சர் குலசேகரன், மலேசியா நாட்டிற்கான இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தின் கூடுதல் செயலாளர் சுப்பிரமணியம் ஆகியோர் உடனிருந்தனர்.
நெல்லையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதை எதிர்கொள்ள பேரிடர் காலங்களில் ஏற்படும் இடர்பாடுகளில் இருந்து மக்களை மீட்பது தொடர்பாக ஒத்திகை பயிற்சி நாளை காலை 9 மணி முதல் 10.30 மணி வரை பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் காவல் துறை மற்றும் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர்கள் ஆகியோர்களால் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு பட்டய கணக்காளர், நிறுவன செயலாளர், இடைநிலை மேலாண்மைக் கணக்காளர் ஆகிய போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற தாட்கோவில் ஒரு வருடத்திற்கான பயிற்சி இலவசமாக வழங்க உள்ளது. விருப்பமுள்ளவர்கள் www.tahdco.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என இன்று (நவ.4) கேட்டுக்கொள்ளப்பட்டது.
திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் நேற்று (நவ.3) கேரள மாநிலம் வயநாடு மலப்புரம் கத்தோலிக்க மறை மாவட்டத்திற்கு உட்பட்ட கல்பட்டா பகுதியில் அமைந்துள்ள புனித தாமஸ் தேவாலயத்தில் ஞாயிறு வழிபாட்டுக்காக வந்திருந்த ஆயர் பெருமக்கள் மற்றும் இறை மக்களிடம் வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தார்.
ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரில் நடைபெறும் 67வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக செல்லும் வழியில் கீழ்த்திசை நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர் சென்றடைந்த தமிழக சபாநாயகர் அப்பாவுக்கு, அங்குள்ள திமுக அயலக அணி நிர்வாகிகள் நேற்று (நவ.3) உற்சாக வரவேற்பு அளித்தனர். தமக்கு அளித்த அன்பான வரவேற்புக்கு அயலக அணி நிர்வாகிகளுக்கு சபாநாயகர் நன்றி தெரிவித்தார்.
ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி சார்பில் 9.11.2024 முதல் 11.11.2024 வரை பாளையங்கோட்டையில் பெண்களுக்கான சப்ஜூனியர் மாநில சேம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்வதற்கு திருநெல்வேலி மாவட்ட அணிக்கான தேர்வு 5.11.2024 அன்று காலை 8.30 மணி முதல் சாராள்டக்கர் கல்லூரியின் ஹாக்கி மைதானத்தில் வைத்து நடைபெறவுள்ளது. 1.1.2008 அன்றோ அதற்குப் பின்னரோ பிறந்த ஹாக்கி வீராங்கனைகள் பங்கேற்கலாம்.
Sorry, no posts matched your criteria.