Tirunelveli

News January 19, 2026

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (ஜன.19) இரவு ரோந்து பணிகளில் செந்தாமரை ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் கணேசன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

News January 19, 2026

நெல்லையின் முக்கிய பகுதிகளில் மின்தடை

image

மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.20) பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேலப்பாளையம், கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குல வணிகர்புரம், மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹமீபுரம், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகர், தருவை, ஓமநல்லூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. ஷேர் பண்ண மறக்காதீங்க

News January 19, 2026

நெல்லை: G Pay / PhonePe பயன்படுத்துபவரா நீங்கள்?

image

நெல்லை மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். இந்த பயனுள்ள SHARE பண்ணுங்க.

News January 19, 2026

நெல்லை: Spam Calls-க்கு இனி ‘END கார்டு’!

image

நெல்லை மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 19, 2026

நெல்லை: ஆசையை தூண்டி ரூ.30 லட்சம் மோசடி செய்த பெண்

image

நெல்லையைச் சேர்ந்த 37 வயதான இளைஞரிடம் தர்ஷினி என்ற பெண் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு ஷேர் மார்க்கெட்டிங் முதலீடு செய்ய ஆசையை தூண்டினார். முதலில் ரூ.6000 முதலீடு செய்து, அந்த பணத்தை எடுக்க விதிக்கப்பட்ட நிபந்தனைகளின் படி மேலும் மேலும் வெவ்வேறு வங்கி கணக்குகளில் ரூ.30 லட்சம் செலுத்தி மீட்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் படி சைபர் க்ரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 19, 2026

நெல்லை: நாய் குறுக்கே பாய்ந்ததால் ஒருவர் பலி!

image

கீழகோவிலான்புரத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (45). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சவலைக்காரன் குளம் அருகே பைக்கில் சென்றபோது நாய் குறுக்கே பாய்ந்தது. இதனால் தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைக்கு பலன் இன்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். விபத்து குறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.

News January 19, 2026

நெல்லை: 12th போதும்., ஆதாரில் வேலை! தேர்வு இல்லை..

image

நெல்லை மக்களே, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) காலியாக உள்ள 282 ஆதார் சூப்பர்வைசர் /ஆபரேட்டர் பணியிடங்ளுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 வயது பூர்த்தியடைந்த ஐடிஐ, டிப்ளமோ, 12ம் வகுப்பு முடித்தவர்கள் ஜன 31.க்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு இல்லை, நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News January 19, 2026

நெல்லை: இளம்பெண் வெட்டிக்கொலை

image

தேவர்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராம்ராஜ் இவரது மகள் ராதிகா (28). இவர் நேற்றிரவு சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்டார். அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். ராதிகா தனது உறவினருடன் செல்போனில் அடிக்கடி பேசியதை கண்டித்து அவரது தம்பி கண்ணன் வெட்டியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே கண்ணன் தேவர்குளம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இன்ஸ்பெக்டர் மாரி செல்வி விசாரித்து வருகிறார்.

News January 19, 2026

நெல்லை: இளம்பெண் வெட்டிக்கொலை

image

தேவர்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராம்ராஜ் இவரது மகள் ராதிகா (28). இவர் நேற்றிரவு சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்டார். அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். ராதிகா தனது உறவினருடன் செல்போனில் அடிக்கடி பேசியதை கண்டித்து அவரது தம்பி கண்ணன் வெட்டியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே கண்ணன் தேவர்குளம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இன்ஸ்பெக்டர் மாரி செல்வி விசாரித்து வருகிறார்.

News January 19, 2026

நெல்லை இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின்படி இன்று இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் விபரத்தை மாநகர காவல் துறை இன்று இரவு வெளியிட்டுள்ளது. அவரது கைபேசி எண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!