India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாடு சுகாதார துறையில் (TN MRB) காலியாக உள்ள 999 Nursing Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளம் ரூ.15,700 – ரூ.58,100 வரை வழங்கப்படும். இதற்கு 10th, Nursing Assistants course முடித்தவர்கள் பிப்.8க்குள் இங்கு <

நெல்லை மாவட்த்தில் உள்ள சில துணை மின் நிலையங்களில் பராமரிப்பு காரணமாக நாளை(ஜன.21) மின்தடை செய்யப்படவுள்ளது. சேரன்மகாதேவி துணைமின் நிலையம், கரிசல்பட்டி துணைமின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும், பரப்பாடி மின் நிலையம், நவலடி துணை மின் நிலையம், சங்கன்குளம் துணை மின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின்தடை செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. *ஷேர் பண்ண மறக்காதீங்க

நெல்லை மாவட்டத்தின் முக்கியமான நகரங்களில் போக்குவரத்தை சீர் செய்யும் வகையில், ஊர்க்காவல் படையினரை அந்த பணிகளில் முழுமையாக ஈடுபடுத்தும் திட்டம் திருநெல்வேலி மாவட்டத்தில் முதன்முதலாக தொடங்கப்பட்டுள்ளது. நாங்குநேரி, ராதாபுரம், வள்ளியூர், சேரன்மகாதேவி, அம்பை, மானூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது முதல் முறையாக முழுமையாக இந்த பணிகளில் ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

நெல்லை மக்களே.., உங்களுக்கு ரூ.2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா’ திட்டம் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். இதற்கு யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை இங்கே<

திசையன்விளை அருகே சுவிசேஷபுரத்தைச் சேர்ந்த மந்திரம் மகன் கணேசன்(41), திசையன்விளை அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் பணியாளராக பணியாற்றுகிறார். பள்ளி வளாகத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு திரும்பி வந்தபோது, வாகனம் திருடப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

நெல்லை அஞ்சல் கோட்டை முதுநிலை கண்காணிப்பாளர் ராஜேஷ்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில்; முக்கூடல் அருகே உள்ள தாளார்குளம் கிராமத்தில் புதிய கிளை அஞ்சல் அலுவலகம் ஜன.23ம் தேதி திறக்கப்படுகிறது. இதை முன்னிட்டு இங்கு 23ம் தேதி சிறப்பு மொபைல் வேன் பாஸ்போர்ட் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பாஸ்போர்ட் புதுப்பித்தல் & திருத்த சேவைகளை, சேவை வாகனம் மூலம் எளிதாக பெறலாம். *SHARE

நெல்லை அஞ்சல் கோட்டை முதுநிலை கண்காணிப்பாளர் ராஜேஷ்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில்; முக்கூடல் அருகே உள்ள தாளார்குளம் கிராமத்தில் புதிய கிளை அஞ்சல் அலுவலகம் ஜன.23ம் தேதி திறக்கப்படுகிறது. இதை முன்னிட்டு இங்கு 23ம் தேதி சிறப்பு மொபைல் வேன் பாஸ்போர்ட் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பாஸ்போர்ட் புதுப்பித்தல் & திருத்த சேவைகளை, சேவை வாகனம் மூலம் எளிதாக பெறலாம். *SHARE

நெல்லை மக்களே; புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், <>eservices.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலாம். பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

நெல்லை வழியாக மதுரை கோவை இடையே இயக்கப்படும் விரைவு ரயில்(எண்:16321) 22ம் தேதி முதல் 29ஆம் தேதி வரை மதுரை வழியாக செல்லாமல் மாற்றுப் பாதையான மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் 22ம் தேதி முதல் 29ஆம் தேதி வரை மாற்று பாதையில் இயக்கப்படும். கூடல் நகர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. *SHARE

நெல்லை சந்திப்பு மேகலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார்(38). இவர் மது பழக்கத்திற்கு ஆளாகி சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அடைக்கலப்பட்டினத்தில் உள்ள மத போதகரை சந்தித்த அவர் போதகர் அறையில் நேற்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.