India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று(நவ.,17) காலை 9.30 மணிக்கு பாளையங்கோட்டை ஐகிரவுண்ட் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.1.75 கோடி மதிப்பிலான புதிய கட்டட மற்றும் மருத்துவ பிரிவுகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைக்கிறார்.#இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர்அட்டை திருத்தம் பெயர் சேர்த்தல் முகாம் 2ஆவது நாளாக நெல்லை மாவட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது.
எல்லையில் பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை காக்கும் போரில் வீர மரணம் அடைந்த, நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வீர வரலாறுதான் அமரன் திரைப்படம். மக்களிடம் தேசபக்தியை விதைக்கும் இப்படத்திற்கு சில அடிப்படைவாத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டன. நெல்லையில் தியேட்டர் மீது வெடிகுண்டு வீசிய சம்பவத்திற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரை கோட்டம் ரயில்வே ஆலோசனை கமிட்டி உறுப்பினர் ராம் சிங் இன்று நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்தியோதயா அதிவிரைவு ரயிலில் பயணிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து பின்னர் உணவின் சுகாதாரம் மற்றும் பயணிகளுக்கு தேவையான குடிநீர் சுகாதாரத்தையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது ஏராளமானோர் உடன் இருந்தனர்.
மேலக்கருங்குளம் அருகே நேற்று மணிகண்டன் என்ற வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் இன்று நெல்லை நீதிமன்றத்தில் 3 பேர் சரண் அடைந்தனர். சரணடைந்த மூவரும் கோபாலசமுத்திரத்தை அடுத்த கொத்தன்குளம், முன்னீர்பள்ளத்தை அடுத்த மருதம் நகர், தருவையை அடுத்த ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆவர். அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நெல்லை மேலப்பாளையம் அலங்கார் திரையரங்கில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் ஓடிவரும் நிலையில் இன்று மர்ம நபர் தியேட்டருக்குள் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இது குறித்த சிசிடிவி காட்சி வெளியானது. சம்பவத்தை கண்டித்து இந்து முன்னணி நிர்வாகி ஜெயக்குமார் தலைமையில் தியேட்டர் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.
நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடை ஒன்று ஏலத்திற்கு வருகிறது. இந்த ஏலமானது மாநகராட்சி ஆணையாளர் அல்லது அதிகாரம் பெற்ற மாநகராட்சி அலுவலரால் மேலப்பாளையம் மன்ற அலுவலகத்தில் வைத்து டிசம்பர் 5ஆம் தேதி ஏலம் விடப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளுமாறு இன்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
நெல்லையில் இன்று நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் திருத்த முகாம், வாக்குச்சாவடிகளில் நடைபெறுகின்றன. மாலை 4 மணிக்கு நேரு கலையரங்கில் கூட்டுறவு வார விழா நடைபெறுகிறது. இதில் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்கிறார். மாணவர்கள் கலைத் திருவிழா போட்டிகள் காலை 10 மணி முதல் மாலை வரை சாப்டர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.
நெல்லை தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளைகளில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம் நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்து அதனை உறுதிப்படுத்தினர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. படிப்படியாக இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, கழிவுநீர் கலப்பது தடுக்கப்படும் என்றார்.
நெல்லையிலிருந்து சென்னை வரும் வந்தே பாரத் ரயிலில் இன்று(நவ.16) காலை வழங்கிய உணவில் வண்டுகள் இருப்பதை கண்டு பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட சாம்பாரில் இருந்த வண்டுகளை காண்பித்து ரயில்வே ஊழியர்களிடம் பயணிகள் முறையிட்டுள்ளனர். இதனை அறியாத பயணிகள் சிலர், கடுகு என நினைத்து உண்டதாக வேதனை தெரிவித்தனர். இதுதொடர்பாக ரயில்வே ஊழியர்கள் சார்பில் மன்னிப்பு கோரப்பட்டது.
மூலக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் சலூன் கடைக்கு நேற்று(நவ.15) 4 வயது சிறுமிக்கு முடி வெட்டுவதற்காக அவருடைய தந்தை அழைத்து வந்தார். சிறுமியை முடிவெட்டுமாறு கூறிவிட்டு தந்தை வெளியே சென்று உள்ளார். இதை வாய்ப்பாக பயன்படுத்திய கணேசன் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து கணேசனை தேடி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.