India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் ரூபேஸ் குமார் மீனா உத்தரவின்படி காவல்துறையினர் பொதுமக்களிடமும் மாணவர்களிடமும் போதை பொருட்கள் குறித்து பல்வேறு கட்ட விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று(டிச.06) வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில் ‘போதை உனக்கும் வேண்டாம் நமக்கும் வேண்டாம், போதையில்லா தமிழகம் படைப்போம்’ என தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின்படி தினம்தோறும் பொதுமக்களுக்கு பல்வேறு குற்ற செயல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று(டிச.06) வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில், அவசர தேவைக்காக ஆன்லைனில் லோன் வாங்கி ஆபத்தில் சிக்க வேண்டாம். ஒரு வேளை நீங்கள் பாதிக்கப்பட்டால் https://cybercrime.gov.in/ ல் புகார் அளிக்கவும் என தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே பெருங்குடியில் செயல்படும் தனியார் கல்குவாரி 5 ஆண்டுகளில் எடுக்க வேண்டிய கனிம வளத்தை ஒன்றரை ஆண்டுகளில் எடுத்து முடித்து விட்டதால், அறப்போர் இயக்க புகாரின் பேரில் அந்த குவாரி செயல்பட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று(டிச.06) தடை விதித்துள்ளார். ஆட்சியரின் இந்த அதிரடி நடவடிக்கை கனிம வளத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நாடாளுமன்றத்தில் நடந்த கேள்வி நேரத்தின் போது கூடங்குளம் அணு உலையில் பயன்பாட்டு எரிபொருளை பாதுகாப்பாக வெளியேற்ற எத்தகைய வழிமுறைகள் கையாளப்படுகின்றன என கனிமொழி சோமு கேள்வி எழுப்பினார். கழிவுகள் மீண்டும் எடுக்கப்பட்டு அணு உலை உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்றன. இந்த நடைமுறையின் போது எந்தவித கதிர்வீச்சு கசிவோ அணுக்கழிவு கசிவோ துளியும் வாய்ப்பில்லை என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் நாள்தோறும் மாவட்ட முழுவதும் பதிவாகும் மழை அளவு வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று(டிச.06) காலை 8 மணி முதல் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சம் சேரன்மகாதேவி பகுதியில் 5 மில்லி மீட்டர் மழை, அம்பாசமுத்திரத்தில் மூன்று மில்லி மீட்டர் மழை, கன்னடியின் கால்வாயில் 3 மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கைப்பந்து போட்டி நாளை(டிச.07) கல்லிடைக்குறிச்சி எஸ்டிஏடி விளையாட்டு மைதானத்தில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதில் மாவட்ட அளவில் பல்வேறு ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் கலந்து கொள்கின்றனர். நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்குகிறார்.
திருநெல்வேலி தென்காசி மாவட்ட கூட்டுறவு நிறுவன பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் பேரவை கூட்டம் சங்க அலுவலகத்தில் வைத்து வரும் 19ஆம் தேதி அன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதால் அனைவரும் கலந்து கொள்ளுமாறு செயலாளர் கோவில் மணி இன்று தெரிவித்துள்ளார்.
இன்று(டிச.06) பாபர் மசூதி இடிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு அமைப்புகள் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி மாநகரப் பகுதியில் ஆயிரம் போலீசாரும் மாவட்ட பகுதியில் ஆயிரம் போலீசாரும் என மொத்தம் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்கள் கூடும் முக்கிய இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மாநில அளவிலான பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் திருநெல்வேலி மாவட்ட மாணவர்கள் 2 மற்றும் 3ஆம் இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர். சாதனை மாணவர்கள் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் நேரில் அழைத்து பாராட்டி பரிசு சான்றிதழ்கள் வழங்கினார். சாதனை படைத்த மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கவும், வீரதீர செயல் செயல்புரிந்த 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 இல் மாநில அரசு விருது வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் https://awards.tn.gov.in என்ற தளத்தில் டிச.25க்குள் விண்ணப்பிக்கலாம் என நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.