India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட நபர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் ஔவையார் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தன்று சென்னையில் முதலமைச்சரால் இந்த விருது வழங்கப்பட உள்ளது . ஆர்வமுள்ளவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் & அவருடைய உதவியாளர், டிரைவர் ஆகியோருக்கு பாஜகவை சேர்ந்த வெங்கடேஷ் நேற்று(டிச.06) கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி மாநகராட்சி துணை மேயர் ராஜு தலைமையில் கவுன்சிலர்கள் இன்று(டிச.07) நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் விஜயகுமாரிடம் புகார் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட காவல் அதிகாரி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட நபர்களுக்குஆண்டு தோறும் வழங்கப்படும் ஔவையார் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தன்று சென்னையில் முதலமைச்சரால் இந்த விருது வழங்கப்பட உள்ளது . https://awards.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.
நெல்லையில் இன்று(டிச.07) நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள் விபரம்: காலை 9.30 மணிக்கு கொக்கிரகுளம் ரோஸ் மஹாலில் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. மாலை 4:30 மணிக்கு மேலப்பாளையம் ரவுண்டானா அருகே தவ்ஹீத் ஜமாத் சார்பில் சுகாதாரமான குடிநீர் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மாலை 6:00 மணிக்கு தியாகராஜ நகர் மின் அரங்கில் என் பூமி என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.
வரும் ஜனவரி 1ம் தேதி முதல் தென்னக ரயில்வேயில் பல ரயில்களின் எண்கள் மாற்றப்படுகின்றன. இதன்படி நெல்லையிலிருந்து திருச்செந்தூருக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் எண் 6673 லிருந்து 56728 ஆகவும் 6675லிருந்து 56729 ஆகவும் 6677லிருந்து 56733 ஆகவும் மாறுகிறது. திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் 6405ல் இருந்து 56727 ஆகவும் 6676 ரயில் 56730 ஆகவும் 6678 ரயில் 56734 மாறுகிறது.
நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் நேற்று(டிச.,6) வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி-ஃபார்ம், டி-ஃபார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்கள் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க டிச.,5ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் அறிவித்திருந்த நிலையில், தற்போது டிச.,10 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மீட்டர் கேஜ் பாதையில் தென்காசி வழியாக சென்ற நெல்லை-கொல்லம் பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து பாண்டியராஜா மற்றும் நிர்வாகிகள் தென்னக ரயில்வே அதிகாரியை சந்தித்து மனு அளித்துள்ளனர். மேலும், ஞாயிற்றுக்கிழமை தோறும் நெல்லையிலிருந்து பாவூர்சத்திரம், தென்காசி, மதுரை வழியாக சென்னைக்கு சிறப்பு இயக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்ரமணியன் நேற்று(டிச.,6) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட1048 திமுகவினரை கௌரவிக்கும் விழா வருகிற 12ஆம் தேதி மாலை 3 மணி அளவில் நெல்லை டவுன் கண்ணன் சாலையில் நடக்கிறது. இதில் அமைச்சர் கே.என்.நேரு, நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன் கான் கலந்துகொள்ள உள்ளனர் என்றார்.
விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா எழுதிய“எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்ற புத்தக வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், தவெக தலைவர் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.தொடர்ந்து, நாங்குநேரியில் பள்ளி மாணவர்களால் வெட்டுப்பட்ட சின்னத்துரை, அவரது தங்கை சந்திரா செல்வி, தாய் அம்பிகா ஆகியோருக்கு புத்தகத்தை வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்
நெல்லை மாவட்டம் தேவர்குளம் பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட சொக்கலிங்கம்(28) என்பவர் கைதாகி சிறையில் உள்ளார். இவர் பல வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கிடைத்த தகவலில் படி எஸ்பி சிலம்பரசன் பரிந்துரையின் படி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சொக்கலிங்கம் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.