India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ் சினிமாவின் முக்கிய குணச்சத்திர நடிகரான டெல்லி கணேஷ் நேற்று(நவ.,10) இரவு 11 மணியளவில் காலமானார். 1944 ஆகஸ்ட் 1 ஆம் தேதி நெல்லை அருகே உள்ள வல்லநாட்டில் பிறந்தார். பல்வேறு திரைப்படங்களில் நடித்த இவர் 1994-ல் கலைமாமணி விருது பெற்றார். நெல்லை மைந்தனாகிய டெல்லி கணேஷ் உயிரிழந்ததை தொடர்ந்து திரைப்பிரபலங்கள் மற்றும் நெல்லையை சேர்ந்தவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்திற்கு கள ஆய்வு மேற்கொள்வதற்காக நேற்று வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மதுரை விமான நிலையத்தில் நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். இதேபோல் துணை மேயர் கே.ஆர்.ராஜு, பாளை., எம்எல்ஏ அப்துல் வஹாப், மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் டிபிஎம் மைதீன் கான் ஆகியோரும் முதல்வரை வரவேற்றனர்.
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க (CITU) நிர்வாகக் குழு கூட்டம் நெல்லை மாவட்ட குழு அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஞானாம்பாள் சங்கத்தில் நடைபெற்ற வேலைகள் குறித்து பேசினார். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்க கோரி நவ.14ல் மாநிலம் முழுவதும் வட்டார வாரியாக மனித சங்கிலி மனித சங்கிலி இயக்கம் நடத்திடவும் முடிவு செய்யப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்து வரும் 67வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் சபாநாயகர் அப்பாவுக்கு கலந்து கொண்டு நேற்று(நவ.,9) பேசியபோது, தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் நலனுக்காக ஒரு தனி துறையை உருவாக்கப்பட்டது. உலகின் எந்தப் பகுதியில் வசிக்கும் தமிழர்களானாலும் சிறு பிரச்னை என்றால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
பெண்களுக்கான மாநில அளவிலான சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி பாளை அண்ணா விளையாட்டு மைதானத்தில் இன்று (நவ.9) நடைபெற்றது. ஹாக்கி யூனிட் ஆப் நெல்லை சார்பில் நடைபெற்ற இந்த போட்டிகளில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஹாக்கி வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் சேவியர் ஜோதி சற்குணம், துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், இணைச்செயலாளர் சார்லஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதாக அளிக்கப்பட்ட புகாரை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதி அரசர்கள் இன்று தாமிரபரணி ஆற்றை மாநகர பகுதியில் நேரில் ஆய்வு செய்ய உள்ளனர். அவர்கள் 10 பாய்ண்டுகளில் ஆய்வு செய்ய உள்ளனர். தாமிரபரணி ஆறு மட்டுமின்றி பாளையங்கால்வாய், நெல்லை கால்வாய் பகுதிகளையும் ஆய்வு செய்ய உள்ளனர். இதற்கான வழித்தட நிகழ்ச்சி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் ரூபேஸ் குமார் மீனா உத்தரவின்படி பொதுமக்களின் உதவிக்காக இரவு ரோந்து காவலர்கள் நியமிக்கப்பட்டு தினமும் அட்டவணை வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (நவ. 9) காவலர்களின் பெயர், அவர்களின் தொடர்பு எண் விவரங்கள் அடங்கிய அட்டவணையை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று (நவ.,9) விடுத்துள்ள அறிக்கையில், மாவட்டத்தில் பதிவு செய்யாமல் இயங்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள், முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லங்கள், போதை மறுவாழ்வு இல்லங்கள் ஆகியவை சீல் வைக்கப்படும் என தெரிவித்துள்ளார். பதிவு செய்யாத இல்லங்கள் ஒரு மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள சென்றுள்ள நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸை ராஞ்சி விமான நிலையத்தில் ஜார்கண்ட் மாநில காங்., செயல் தலைவர் சுபாஷ் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்றனர். தொடர்ந்து அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அங்கு பிரச்சார பயண பணிகளை மேற்கொண்டார்.
நெல்லை, பாளை பகுதிகளில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பது குறித்த புகாரின் தொடர்பாக மதுரை ஹைகோர்ட் நீதிபதிகள் நாளை(நவ.,10) பல்வேறு இடங்களில் ஆய்வு செய்கின்றனர். இதனை முன்னிட்டு நெல்லை மாநகராட்சி சார்பில் குறிப்பிட்ட இடங்களில் நேற்று முதல் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பணியாளர்கள் முழு வீச்சில் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.