India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [ஆக.12] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் சரவணன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட்.12) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
நெல்லை மாவட்டத்தில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி முகாம்கள் நாளை 13ம் தேதி ஆரம்பமாகிறது. ஜப்பானிய மூளைக் காய்ச்சல் நோய் என்பது குழந்தைகளுக்கு கை கால் மற்றும் மூளை செயலிழப்பு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும். மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சத்து 99 ஆயிரத்து 593 குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்படுகிறது என கலெக்டர் சுகுமார் தெரிவித்தார்.
நெல்லை எஸ்.பி சிலம்பரசன் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், இந்தாண்டு நெல்லை ஊரக மாவட்டத்தில் இதுவரை 18 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. 2024ம் ஆண்டு பதிவான கொலை வழக்குகளை விட 10 %, 2023ல் பதிவான கொலை வழக்குகளை விட 22%, 2022 -ம் ஆண்டு பதிவான கொலை வழக்குகளை விட 42% குறைவாகும். கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு கொலை சம்பவங்கள் பெருமளவு
குறைந்துள்ளது என கூறியுள்ளார். (உங்கள் கருத்து என்ன?)
தமிழக காவல்துறை சார்பில் காவல் உதவி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் நெல்லையில் உள்ள இடங்களில் ஏதேனும் சிக்கலில் மாட்டிக்கொண்டாலோ அல்லது அவசர காலங்களில் செயலியில் உள்ள சிவப்பு நிற பொத்தானை அழுத்தினால், உங்கள் விவரம், இருப்பிடம் ஆகியவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும். இதன் மூலம் துரிதமாக உதவி கிடைக்கும். இங்க <
ஆகஸ்ட் 17 மாலை 4.20க்கு திருநெல்வேலியில் புறப்படும் சிறப்பு ரயில், அம்பாசமுத்திரம் தென்காசி, சிவகாசி, மதுரை, திண்டுக்கல் வழியாக மறுநாள் 18ம் தேதி மதியம் 12.20க்கு பெங்களூரு சிவமொக்கா நிலையம் அடையும். ஆகஸ்ட் 18 மதியம் 2.15க்கு பெங்களூருவில் புறப்பட்டு, 19ம் தேதி காலை 10.15க்கு திருநெல்வேலி வரும். 3 ஏ.சி. பெட்டிகள் உட்பட 18 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.
அம்பை அருகே, ‘வாழிய நிலனே’ என்ற புறநானூறு பாடல் வரியை மனதில் கொண்டு, விவசாயி லட்சுமி தேவி இயற்கை விவசாயத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். பாரம்பரிய நெல் ரகமான ‘சின்னார்’ வகையை தனது வயலில் பயிரிட்டு, இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்தி வருகிறார். லட்சுமி தேவியின் இந்த முயற்சி, நவீன விவசாய முறைகளுக்கு மத்தியில் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்க உதவுவதாக அமைந்துள்ளது. *SHARE IT
விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய வழக்கு பொதுவாக மாதத்திற்கு ஒரு வாய்தா என்ற அடிப்படையில் நீதிமன்ற விசாரணை நடந்து வந்தது. ஆனால் கடந்த ஜூலை மாதத்தில் 2 வாய்தாக்களும், நடப்பு மாதத்தில் இதுவரை 2 வாய்தாக்களும் நடந்துள்ளன. மேலும் ஒரு வாய்தா விசாரணை இதே மாதத்தில் நடைபெற உள்ளது. ஆனால் பல்வீர்விங் 4வது முறையாக நேற்று நெல்லை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லை மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. இந்த <
நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் நெல்லையில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் நாளை மறுநாள் (ஆகஸ்ட்.14) வெளியாகிறது. இதற்கான முன்பதிவும் நம் நெல்லை மாவட்டத்தில் துவங்கி உள்ளது. தமிழக அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகம் கட்டணம் வசூலித்தால் அதற்கான தகுந்த ஆதாரத்துடன் நெல்லை தாசில்தார் (0462-2333169) அல்லது இங்கு <
Sorry, no posts matched your criteria.