India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இன்று (நவ.22) மற்றும் நாளை (நவ.23) ஆகிய தினங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மாவட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருநெல்வேலி மக்களே..! உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <

விகேபுரம் அருகே காக்காநல்லூரைச் சேர்ந்த முத்துக்குமாருக்கும் அங்குள்ள யூனியன் கவுன்சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் முத்துக்குமார் கடந்த 19ம் தேதி விஷம் குடித்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை பலனின்றி நேற்று காலை முத்துக்குமார் உயிரிழந்தார். இது குறித்து விகே புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <

நெல்லை மாவட்டத்தில் தீவிரமாக வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி நடைபெற்று வரும் இந்த பணிகளில் முந்தைய சிறப்பு தீவிர திருத்தத்தில் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ள விபரங்கள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள பல்வேறு இணைய சேவைகள் வழங்கப்பட்டாலும் திருநெல்வேலி மாவட்டம் நிர்வாகம் புதிய QR கோர்டு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. மக்கள் பயன் பெறலாம்.

தச்சநல்லூரைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (19) கல்லூரி 2ம் ஆண்டு படித்த நிலையில் நேற்று நண்பருடன் கரையிருப்பில் உள்ள கிணற்றுக்கு சென்றபோது நீச்சல் தெரியாத நிலையில் விக்னேஸ்வரன் கிணற்றில் விழுந்து விட்டதாக நண்பர்கள் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்புத் துறையினர் கிணற்றுக்குள் விக்னேஸ்வரனை மூன்று மணி நேரமாக தேடிய நிலையில் தற்போது சடலமாக மீட்கபட்டார்.

நெல்லை மாநகர காவல் துறையில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு பாளை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நாளை காலை 7:00 மணி முதல் 10 மணி வரை நடைபெறுகிறது. இதில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்கலாம். 18 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். மாநகர எல்லையில் வசிக்க வேண்டும். பாஸ்போர்ட் சைஸ் போட்டா கல்வி சான்று போன்ற ஆவணங்களை கொண்டு வர வேண்டுமென மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.

சுத்தமல்லியை சேர்ந்தவர் சுரேஷ் இவரது மனைவி செல்வி இவரது வீட்டுக்கு உறவினரான கங்காதேவி என்பவர் தனது ஆண் நண்பர் ஐயப்பன் என்பவருடன் வந்துள்ளார். திடீரென இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர். அதே நேரத்தில் பீரோவில் இருந்த 16 பவுன் நகை திருடு போனது. இது குறித்து சுத்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி கேரளாவில் பதுங்கி இருந்த ஐயப்பனை கைது செய்து அவரிடமிருந்து தங்க நகையை மீட்டனர்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி விஜயாபதி ஊராட்சியில் நேற்று (நவ. 21) காலை 10.45 மணிக்கு ரூபாய் 14.77 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மையம் அமைப்பதற்காக தமிழக சட்டபேரவை தலைவர் அப்பாவு மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும் நெல்லை பாராளுமன்ற உறுப்பினருமான C.ராபர்ட் புரூஸ் இணைந்து அடிக்கல் நாட்டினர். உடன் கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் லெவிஞ்சிபுரம் ஊராட்சி, கூட்டப்புளி மீனவ கிராமத்தில், 1 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பில், மீனவப் பெண்களுக்கான, கடல் பொருட்கள் மதிப்புக்கூட்டல் மையம் மற்றும் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகியவை அமைப்பதற்காக, திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் சி.ராபர்ட் புரூஸ் முன்னிலையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் நேற்று (நவ 21) காலை அடிக்கல் நாட்டினார்.
Sorry, no posts matched your criteria.