India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாகனூர் அருகே உள்ள பூங்குடி பகுதியைச் சேர்ந்தவர் சடையாண்டி (69). இவர் விவசாய பணிக்கு சென்று வீடு திரும்பும் வழியில் பூங்குடியில் உள்ள குளத்தில் தண்ணீர் எடுக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கால் சறுக்கி தண்ணீருக்கு மூழ்கி மாயமானார். தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரவு தேடி கிடைக்காத நிலையில் நேற்று தீயணைப்புத்துறையினர் முதியோர் உடலை மீட்டனர்.
திருச்சி மாவட்டம் உணவு பாதுகாப்பு துறையில் கடந்த மூன்று வருடங்களாக சுமார் 460 சிவில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்குகளை முடிப்பதற்கு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட நியமனர் ரமேஷ்பாபு தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் 900 பேர் கலந்து கொண்டனர். இதில் மொத்தம் 257 வழக்குகள் முடிக்கப்பட்டது. இதில் மொத்தம் 20 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழ்நாடு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு இன்று முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெற்றது. திருச்சியில் மொத்தம் ஐந்து தேர்வு மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வில் 1827 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் இன்று நடைபெற்ற தேர்வில் 1024 நபர்கள் தேர்வு எழுதியதாகவும் 803 பேர் தேர்வு எழுதவில்லை எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்ற தனியார் பேருந்து இன்று அவ்வழியாக சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் டூவீலரில் சென்ற கண்ணம்மாள் என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வாகனத்தை இயக்கிய அவரது மகன் கோவிந்தராஜ் சிறுகாயங்களுடன் உயிர்தப்பினார். இதுகுறித்து கண்டோன்மென்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் திமுக கழக முதன்மைச் செயலாளர் கே என் நேரு தனது பிறந்த நாளை முன்னிட்டு இன்று திமுக தலைவர் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் உடன் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே என் அருண் நேரு மற்றும் இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
திமுக கழக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே என் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அமைச்சர் கே என் நேருவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார் உடன் திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
மனச்சநல்லூர் வட்டம், மேல சீதேவி மங்கலம் கிராமத்தில் நத்தம் நிலவாரி திட்டத்தின் கீழ் ரயத்துமனை பட்டா பெறுவதற்கு புல எண் 104-ல் வசித்து வரும் நில உரிமை தாரர்களோ (அ) அவரால் நியமிக்கப்படும் நியமனதாரர்களோ நில அளவை அதிகாரிகள் நில அளவை செய்யும் போது உடனிருந்து அவரவர் இடங்களை காண்பித்தும், புல பரிசீலனை மேற்கொண்டும் பட்டாக்களை பெற்று பயனடைய மாவட்ட ஆட்சியர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திருச்சியில் இருந்து மணப்பாறை மாரியம்மன் கோவில் பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த பேருந்தில் மோதியதில் வேங்கைகுறிச்சியை சேர்ந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், வீரமலை பாளையத்தில் உள்ள துப்பாக்கி சூடும் இடத்தில் வரும் 13ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையும், ஆர்.டி.சி, சி.ஆர்.பி.எஃப் பயிற்சியாளர்களால் துப்பாக்கி சூடு பயிற்சி நடைபெற உள்ளது. எனவே சமயம் அப்பகுதியில் கால்நடைகள் மற்றும் மனிதர்கள் நடமாட்டம் இருக்க கூடாது என ஆட்சியர் பிரதீப் குமார் இன்று அறிவித்துள்ளார்.
திருச்சி குண்டூர் பகுதியைச் சேர்ந்த இரு சிறுவர்கள் ஆம்னி வேன் ஒன்றில் பள்ளி மற்றும் தனிவகுப்பு சென்று வருவது வழக்கம். அந்த வேனை ராஜேஷ்கண்ணா என்பவர் ஓட்டி வந்துள்ளார். ஒரு சிறுவனை மாலை தனிப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றபோது, நூறடி சாலையில் வைத்து சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பெற்றோர் திருவெறும்பூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
Sorry, no posts matched your criteria.