Tiruchirappalli

News February 17, 2025

மன அமைதி தரும் திருச்சி தாயுமானசுவாமி கோயில்

image

திருச்சியில் அமைந்துள்ள தாயுமானசுவாமி கோயில், பண்டைய பாண்டியர்களால் கட்டப்பட்டது. இங்கு இறைவன் தாயுமானசுவாமி என்ற பெயரில் வழிபடப்படுகிறார். கோயிலின் அற்புதமான கட்டிடக்கலை மற்றும் சிவனின் தாயுமானசுவாமி வடிவம் பற்றிய புராணக்கதைகளால் இத்தலம் பெரும் புகழ் பெற்றுள்ளன. மன அமைதி, நோய் தீர பக்தர்கள் இங்கு வழிபட்டு செல்கின்றனர்.

News February 17, 2025

எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளன. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த <>லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்

News February 17, 2025

வேகமாக வளரும் மலைக்கோட்டை நகரம்!

image

இந்தியாவின் Tier-2 நகரங்கள் பட்டியலில், வேகமாக வளர்ந்து வரும் நகரமாக திருச்சி இடம்பெற்றுள்ளது. இந்த லிஸ்டில் கோவை, சேலம், மதுரை நகரங்கள் இருப்பினும், ‘Emerging City’ என தமிழ்நாட்டில் திருச்சி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியளவில் சூரத், வாரங்கல், நாசிக் நகரங்கள் இடம்பெற்றுள்ளன. IT கன்சல்டிங் நிறுவனம் Zinnov இந்த Ranking-ஐ வெளியிட்டுள்ளது. உங்க திருச்சி நண்பருக்கு இதை ஷேர் பண்ணுங்க.

News February 16, 2025

தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும் – வேல்முருகன்

image

திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் MLA பேசியது.. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணியில் நீடித்து வருகிறோம். தொடர்ந்து வரும் காலங்களிலும் அதே கூட்டணியில் நீடித்து தேர்தலை சந்தித்து மாபெரும் வெற்றி பெறுவோம். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் என தெரிவித்தார்.

News February 16, 2025

புதிய பேருந்து நிலையம் திறப்பு – ஆட்சியர் தகவல் 

image

திருச்சி, பஞ்சப்பூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் பெரும்பாலான பணிகள் முடிந்து, இறுதிக் கட்டப் பணிகளே நடைபெறுகின்றன. பிப்ரவரி இறுதிக்குள் பணிகள் நிறைவு பெறும். இதையடுத்து முதல்வரின் ஒப்புதல் பெற்று மார்ச் முதல் வாரத்தில் பேருந்து முனையத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

News February 16, 2025

திருச்சி ரயில்வே எச்சரிக்கை அறிவிப்பு

image

திருச்சி ரயில்வே டி ஆர் எம் நிர்வாக அலுவலகம் பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், ரயிலில் உறவினர்களை ஏற்றி விட வருகை தரும்போது பிளாட்பாரத்திற்குள் பிளாட்பார்ம் டிக்கெட் இல்லாமல் நபர் நடமாடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, டிக்கெட் கட்டாயம் என அறிவித்துள்ளது. டிக்கெட் இல்லாத பட்சத்தில் ரயில்வே சட்டப்படி ரூ.250 அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரித்துள்ளது.

News February 15, 2025

எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் அணுகுமுறை கருத்தரங்கு

image

திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தோல் நோய்மருத்துவம், வெனரோலாஜி மற்றும் தொழுநோய் துறை, ஐகியுஏசி மெடிக்கல் கல்வி சார்பில் தோல் நோய்களுக்கான நடைமுறை அணுகுமுறை குறித்த கருத்தரங்கம் நடைப்பெற்றது. கோவை மருத்துவக்கல்லுாரி ஓய்வு பெற்ற பேராசிரியரும், தலைவருமான பைரவ ரத்தினம் கலந்து கொண்டு தோல்நோய் வகைகள், அதன் அறிகுறிகள், அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து விளக்கிப் பேசினார்.

News February 15, 2025

பெண் போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சி

image

திருச்சி ஆர்.எம்.எஸ்.காலனி பகுதியைச் சேர்ந்த ராதிகா (40). திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் நிலையில், வீட்டில் விஷம் குடித்ததாக அவரது குடும்பத்தினர், அவரை கோரிமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இவருடைய தற்கொலை முயற்சிக்கு பணிநெருக்கடி காரணமா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமா? என்பது குறித்து செசன்சு கோர்ட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 14, 2025

திருச்சி: இலவச கண் பரிசோதனை முகாம்

image

திருச்சி இந்து மிஷன் மருத்துவமனை மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம், திருச்சி இந்து மிஷின் மருத்துவமனையில் நாளை 15.02.2025 நடைபெற உள்ளது. இம்முகாமில் கண் சம்பந்தமான அனைத்து நோயாளிகளுக்கும் கண்புரை சிகிச்சை (IOL), லென்ஸ் அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்படுகின்றது. முகாமில் கலந்து கொள்பவர்கள் ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News February 14, 2025

திருச்சி : பேட்மிட்டன் விளையாடிய ஆட்சியர்

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியில் ரூபாய் 8.56 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள உள் விளையாட்டரங்கை திறந்து வைத்தார். இந்த விழா நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கலந்துக்கொண்டார். பின்பு மாணவர்களுடன் பேட்மிடன் விளையாடினார்.

error: Content is protected !!