India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த பழங்குடியின இளைஞகள் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சியை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து மேலும் அவா் தெரிவித்தது: ‘உங்கள் வெற்றி எங்கள் நோக்கம்’ எனும் தலைப்பின் கீழ், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி பாலக்கரை பிரசன்ன மஹால் மண்டபத்தில் ஜன.20-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.
திருச்சியை சேர்ந்த 40 பேர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு ரங்கநாதன் தனியார் பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை சித்தூர் அருகே நின்ற லாரி மீது பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி நான்கு பேர் பலியாகினர். இந்த நான்கு பேரும் திருச்சி சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. உடல்கள் அடையாளம் காணப்படாததால் போலீசார் திணறி வருகின்றனர்.
திருப்பூரிலிருந்து- திருச்சிக்கு வந்த பேருந்து, திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திற்கு வந்தபோது திடீரென்று இன்ஜின் கீழே தீ பற்றி எரிந்தது. பாதுகாப்பு கருதி உடனடியாக பேருந்தில் இருந்த 70க்கும் மேற்பட்ட பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டனர்.. பின்னர் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பொதுமக்களும் சேர்ந்து தீயை அணைத்தனர். அனைவரது முயற்சியாலும் பெறும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
திருச்சி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டில் நாளை (ஜன.18) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இதற்கான வாடிவாசல், தடுப்புகள் அமைத்தல், தேங்காய் நார் மூலம் மைதானத்தை நிரப்புதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை நவலூர் குட்டப்பட்டு ஜல்லிக்கட்டு கம்மிட்டி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பயணிகள் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் இங்கிருந்து பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 11-ந் தேதி மட்டும் 5,424 வெளிநாட்டு பயணிகள், 1,959 உள்நாட்டு பயணிகள் என மொத்தம் 7,383 பயணிகளை கையாண்டு திருச்சி விமான நிலையம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
திருச்சி மாவட்ட எஸ்.பி செ.செல்வநாகரத்தினம் இன்று முக்கிய அறிவிப்பை தெரிவித்துள்ளார். இதில் திருச்சி உள்ள பொதுமக்கள் தங்களது பிரச்சனைகள், பாலியல் தொடர்பான குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போக்குவரத்து இடையூறு பிரச்சனைகள் குறித்து திருச்சி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் பொதுக்களின் உதவி மையத்தை 8939146100என்ற எண்ணில் தெரிவிக்க கூறியுள்ளார்.
வையம்பட்டியைச் சேர்ந்த மனோகரன் மனைவி கலைவாணி என்பவர் நேற்று அவரது கணவர் மற்றும் மகனுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறியவர் இன்று காலை அருகாமையில் உள்ள தனி நபருக்கு சொந்தமான கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற வையம்பட்டி போலீசார் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சியில் இருந்து மதுரைக்கு 124 கி.மீ நீளத்தில் 4 வழிச்சாலை (NH .38) அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் நேரடியாக பராமரிக்கப்பட்ட இந்த சாலையானது மத்திய அரசின் டோல்- ஆப்பரேட்- டிரான்ஸ்பர் (டி.ஓ.டி) திட்டத்தின் கீழ் ஏலம் விடப்பட்டு, ரூ.1,629 கோடிக்கு அதானி போக்குவரத்து நிறுவனம் வசம் சென்றது. தமிழகத்தில் முதன் முதலாக தனியார் வசம் சென்ற நெடுஞ்சாலை இதுவே ஆகும். இதைப் பற்றிய உங்கள் கருத்து?
தைப்பொங்கல் – தமிழர் திருநாளையொட்டி புகழ்பெற்ற சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று விமரிசையாக நடைபெற்றது.அங்கு ஜல்லிக்கட்டு போட்டிக்கான நிரந்தர திடலுடன் கூடிய பல்வகை விளையாட்டுகளுக்கான அரங்கத்தை ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைத்திட திமுக அரசால் அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. அந்த அரசாணையை இன்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுமக்களிடம் காண்பித்து மகிழ்ந்தார்.
திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு விழா சிறப்புடன் நிறைவு பெற்றது. இந்த விழாவிற்கு பெரும் உதவியாக இருந்த காவல்துறையினர் பாதுகாப்பு பணி முடிந்து புறப்பட்டபோது காவல்துறையின் வாகனம் பள்ளத்தில் சிக்கி நகர முடியாமல் திணறியது. அதனை அந்த காவலர்களே வாகனத்தை தள்ளிவிட்டு கடந்து சென்றனர். சிறப்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கு விழா குழு சார்பாக நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.