India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்கக்கடலில் உருவாக்கியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து, திருச்சி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், காலை 10 மணி வரை திருச்சி மாவட்டத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. SHARE NOW.
திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் திருச்சி மேற்குவட்டம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 16ம் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் திருச்சி மேற்கு வட்டத்திற்கு உட்பட்ட எரிவாயு நுகர்வோர்கள், நுகர்வோர் அமைப்புகள் கலந்து கொண்டு எரிவாயு உருளை விநியோகம் தொடர்பான குறைகளை தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்தார்.
திருச்சி மாநகராட்சி நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்2 மெயின் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. பயிற்சி வகுப்புகள் நாளொன்றுக்கு காலை 8:00 மணி, மதியம் 1 மணி, மாலை 6:00 மணி என 3 நேரங்களில் நடைபெறுகின்றன. வார இறுதியில் பாடத்திட்டம் குறித்த மாதிரி தேர்வும் நடத்தப்பட உள்ளது. தேர்வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையர் இன்று தெரிவித்துள்ளார்.
திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2 ஆண்டுகளில் திருச்சியில் 46 ஆயிரத்து 549 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சம் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நாய்க்கடிக்கு 20ARV மருந்து குப்பிகள் வைக்கப்பட்டுள்ளன. நாய் கடியால் வருவோருக்கு உடனே சிகிச்சை அளிப்பதுடன்,உரிய மருந்துகளும் வழங்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.
திருச்சி ரயில்நிலையத்தில் பராமரிப்புபணி மேற்கொள்ள இருப்பதால்,சில ரயில் மாற்றுப்பாதையிலும்,சில ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,காரைக்குடியில் இருந்து13 முதல் 21ஆம் தேதி வரை காலை 9.40 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும் பயணிகள் ரயில் ரத்து செய்யப்படும். இதே,தேதிகளில் மயிலாடுதுறையில் இருந்து காலை 8.05மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு வரும் ரயில் பொன்மலை வரை இயக்கப்படும்.
தமிழகத்தில் வக்பு திருத்தச் சட்டம் குறித்து பல்வேறு கருத்துக்களும் எதிர்ப்புகளும் உள்ள நிலையில், திருச்சி பாலக்கரை பகுதியில் வக்பு திருத்தச் சட்டம் என்கிற பெயரில் இஸ்லாமியர்களின் சொத்துக்களை அபகரிக்க திட்டமிடும் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் திருச்சி பாலக்கரை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆண்கள் பெண்கள் இளைஞர்கள் என 400 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று உயர் கல்வித்துறை பங்களிப்போர் கலந்தாய்வுக் கூட்டம் அமைச்சர் கோவி செழியன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உயர் கல்வித் துறை அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் கோபால், கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி, தொழில்நுட்ப கல்வி ஆணையர் ஆபிரகாம், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் உயர் கல்வித் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பாரதிதாசன் பல்கலையில் உயர்கல்வி படிப்பிற்கான வழிகாட்டுதல்கள், சேர்க்கை விவரங்கள் போன்ற படிப்பினைகள் சம்பந்தப்பட்ட தகவல்களை உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்கள் பெறுவதற்காக புதிதாக உதவி மையம் ஏற்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகளை தொடங்கி வைத்து பல்கலைகழக நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்
இனாம் சமயபுரம் பகுதியைச் சேர்ந்த விக்கி (என்ற )விக்னேஷ் 21 ஈச்சம்பட்டி சேர்ந்த செல்லத்துரை 22 வடக்கு ஈச்சம்பட்டியில் சரக்கு அடிப்பதில் பிரச்சனை. கோவிந்தராஜ் மகன் வெங்கடேஷ் 23 வாக்குவாதம் ஏற்பட்டது. வாலிபர்கள் இரண்டு பேரும் கத்தியால் வெங்கடேஷை குத்தினார். மண்ணச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் ரகுராமன் வழக்கு பதிவு செய்து வாலிபர்களை கைது செய்தனர்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாணவர்களுக்கு சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் பட்டய கணக்காளர், நிறுவன செயலாளர் உள்ளிட்ட போட்டி தேர்வில் தேர்ச்சி பெற பயிற்சி அளிக்கப்பட உள்ளது. திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த பயிற்சியில் சேர தாட்கோ இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.