India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
16 ஆம் நூற்றாண்டில் கிடைத்த ஒரு பாறையில் உள்ள கல்வெட்டில் திருச்சிராப்பள்ளியை ‘திரு-சிள்ள-பள்ளி’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு ‘புனித-மலை-நகரம்’ என்று பொருள். சில அறிஞர்கள் இந்நகரத்தின் பெயரானது சிறிய புனித நகரம் என்று பொருள்படும் ‘திரு-சின்ன-பள்ளி’ என்ற பெயரில் இருந்து வந்திருக்கலாம் என்று நம்புகின்றனர். புனித நகரம் என்னும் திருச்சி பெயர் காரணத்தை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
திருச்சியில் தமிழ்நாடு அரசு சார்பில் இலவச மொபைல் ஆப் டெவலப்பர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கு பின்னர் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும். பயிற்சியில் சேர மார்ச் 24ஆம் தேதிக்குள் <
திருச்சி, வாளசிராமணி பகுதியைச் சேர்ந்த பெரியம்மாள் (76) முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று அவர் இருந்த குடிசை வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில், பெரியம்மாள் மீதும் தீப்பிடித்து அதிகமாக காயமடைந்து நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார். இது குறித்து தா.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்சி – ஈரோடு பயணிகள் ரயில் (வண்டி எண்: 56809) நாளை (மார்ச் 18) மற்றும் மார்ச் 20, 23, 25, 28, 31 ஆகிய தேதிகளில் காலை 7.20 மணிக்கு புறப்பட்டு கரூர் வரை மட்டும் இயங்கும் என்றும், பின்னர் கரூரில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயிலாக ஈரோடு வரை இயங்கும் என்றும் திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியை அடுத்த கம்பரசம்பேட்டையைச் சேர்ந்த தீபக்(33) என்பவர். நேற்று முன்தினம் பிரசவத்திற்காக திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தன்னுடைய மனைவியை பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் கம்பரசம்பேட்டை நோக்கி சென்றபோது, கார் ஒன்று மோதி தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இது தொடர்பாக காரில் வந்த கோயமுத்தூரைச் சேர்ந்த பெட்ரிக்ஸ் ஜான்(49) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம் சார்பில் டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 4 போட்டி தேர்வுக்கான மாதிரி தேர்வு, மாவட்ட மைய நூலகத்தில் நாளை (மார்ச் 17) காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற உள்ளது. இதில் 2025 ஜூலை மாத நடப்பு நிகழ்வுகள், கணிதத்தில் நேரம் மற்றும் வேலை ஆகியவற்றிலிருந்து வினாக்கள் இடம்பெறும். இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்வோர் குறித்து திருச்சி மாவட்ட காவல்துறை இன்று எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், அதிவேகம், கடுமையான காயங்கள் அல்லது மரணத்தை ஏற்படுத்தும் எனவும், சாலை விதிகளை மீறுவோர் குறித்தும், சாலை விபத்துகள் குறித்து தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் அலுவலக உதவி எண் 8939146100 -க்கு அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த செய்தியை பகிருங்கள்..
இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு <
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் “திருச்சி – சென்னை” மற்றும் “சென்னை – திருச்சி” வழியில் வரும் மார்ச் 22 முதல் தொடங்கவிருக்கும் விமான சேவையில் புத்தம் புதிய போயிங் 737 மேக்ஸ் 8 வகை விமானத்தை பயன்படுத்த உள்ளது. இதில் பிஸினஸ் க்ளாஸ் 8 ஆயிரத்தில், கூடுதல் லக்கேஜ், சூடான சிற்றுண்டி மற்றும் பலவித சலுகைகளுடன் 7 வருடங்களுக்கு பின்னர் உள்நாட்டு சேவையில் பிசினஸ் கிளாஸ் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
திருச்சி மிளகு பாறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட செயற்குழு கூட்டம், நேற்று, விவசாயி அயிலை சிவசூரியன் தலைமையில் நடைபெற்றது. இதில் வரும் 20ஆம் தேதி காலை சத்திரம் பேருந்து நிலையம் லலிதா ஜுவல்லர்ஸ் அருகில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Sorry, no posts matched your criteria.