Tiruchirappalli

News November 14, 2024

சாலை விபத்தில் இரண்டு சிறுமிகள் பரிதாப பலி

image

நாமக்கலை சேர்ந்த பிரதீஷா, நிதிஷா, தங்கள் தோழி டயானா உடன் நேற்று திருச்சிக்கு மொபட்டில் வந்துவிட்டு மீண்டும் திரும்பிய போது பாரதிபுரம் என்ற இடத்தில் சாலையோர தடுப்புச் சுவரில் வாகனம் மோதி வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில் நிதிஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் டயானா உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News November 14, 2024

வாகனம் மோதி கல்லூரி மாணவர் பலி

image

திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர் உசேன். இவர் தனது நண்பர்களுடன் துவரங்குறிச்சி அடுத்த டெப்போ அருகே டூவீலரில் வந்த போது அவ்வழியே சென்ற டூவிலர் மோதியதில் உசேனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உசேனை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதையறிந்த துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 14, 2024

இளம் பெண்ணுக்கு பாலியல் சீண்டல்: வாலிபருக்கு சிறை

image

மருங்காபுரி அடுத்த கை.மேட்டுப்பட்டியைச் சேர்ந்த வெங்கட்ராமன் 2018ஆம் ஆண்டு முதல், 19 வயதுள்ள பெண்ணிடம் திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தி, பாலியல் தொந்தரவு செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்துள்ளார். மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயா புகாரின் பேரில் அவரை நேற்று போலீசார் கைது செய்து, குற்றவியல் மகிளா நீதிமன்ற நடுவரிடம் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

News November 13, 2024

சமயபுரம் கோவில் உண்டியலில் 84 லட்சம் ரொக்கம்

image

பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் 15 நாளில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணியதில் 84 லட்சத்து 75 ஆயிரத்து 052 ரூபாய் ரொக்கமும், 2 கிலோ 222 கிராம் தங்கமும், 2 கிலோ 680 கிராம் வெள்ளியும், 215 அயல் நாட்டு நோட்டுகள், 538 அயல் நாட்டு நாணயங்கள் காணிக்கைகள் கிடைக்கப்பெற்றது என கோவில் இணை ஆணையர் பிரகாஷ் தகவல் தெரிவித்தார்.

News November 13, 2024

திருச்சியில் 4 நாட்கள் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும், வரும் 16,17,21,24 ஆகிய சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுவாக நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் 2025ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம்கள் நடத்தப்பட உள்ளது. எனவே,பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கவோ,பெயர் சேர்க்கவோ, இதர பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

News November 13, 2024

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்: மூவர் படுகாயம்

image

துவரங்குறிச்சி டெப்போ அருகே இன்று மாலை எதிரெதிர் திசையில் வந்த இரு சக்கர வாகனங்கள் நேரெதிராக மோதி விபத்துக்குள்ளானது. இதில் சிறுவன் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த துவரங்குறிச்சி போலீசார் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 13, 2024

நாளை முதல்வர் ஸ்டாலின் திருச்சி வருகை

image

திருச்சி மேயரும், மாநகர திமுக செயலாளருமான அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நாளை(வியாழன்) மாலை 5.30 மணியளவில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி வருகை தர இருப்பதாக தெரிவித்துள்ளார்.

News November 13, 2024

விழுப்புரம் திருச்சி விரைவு ரயில் பொன்மலை வரை மட்டுமே

image

திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் சில ரயில்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம்-திருச்சி மெமு விரைவு ரயில் நவம்பர் 12 முதல் 21 வரை பொன்மலை வரை மட்டுமே இயக்கப்படும். இதேபோன்று ஈரோடு திருச்சி இடையே இயக்கப்படும் பயணிகள் விரைவு ரயில் நவம்பர் 12 முதல் 21 வரை திருச்சி கோட்டை வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 13, 2024

முதலமைச்சர் வருகை: திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை

image

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நாளை (வியாழக்கிழமை) விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளார். மீண்டும் நாளை மறுநாள் விமானம் மூலம் சென்னைக்கு செல்ல உள்ளார். எனவே முதலமைச்சர் செல்லும் சாலைகளில் இந்த இரண்டு நாட்களும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார்.

News November 13, 2024

திருச்சியில் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்

image

திருச்சி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமா திருச்சி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதனையடுத்து, மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.SHARE NOW.