India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மணப்பாறை ராக்கம்பட்டி கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த குழந்தையை கடத்திச்சென்று பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சண்முகசுந்தரம் என்கிற கோபால் என்பவர் மீது மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.இந்நிலையில் இன்று இந்த வழக்கின் விசாரணை,திருச்சி கோர்ட்டில் நடைபெற்றது.இதில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.15,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்
தமிழகத்தின் 4-ஆவது பெரிய நகரமாக விளங்கும் திருச்சியை தலைமையகமாக கொண்ட திருச்சிராப்பள்ளி மாவட்டம் வரலாறு, கலாச்சாரம், ஆன்மீகம், தொழில் என பல்வேறு வகைகளில் தமிழகத்தின் மிக முக்கிய மாவட்டமாக விளங்குகிறது. சுமார் 31 லட்சம் மக்கள் தொகை கொண்ட திருச்சி மாவட்டத்தில், ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கையே அதிகமாகும். மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு விகிதம் 85 சதவீதமாக உள்ளது. SHARE NOW!
‘பெல்’ நிறுவனத்தில் உதவி பொறியாளர் பிரிவில் மெக்கானிக்கல் 12, எலக்ட்ரானிக்ஸ் 8 என மொத்தம் 20 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பி.இ., / பி.டெக்., முடித்த 18-28 வயதுடையவர்கள் <
துவரங்குறிச்சியை அடுத்த லிங்கம்பட்டி அருகே உள்ள கிளாமரத்துக்குட்டு எனும் மலைப்பகுதியில் நேற்று இரவு சுமார் 11:30 மணி அளவில் தீப்பற்றி எரிய தொடங்கி, சுமார் 2மணி நேரத்திற்கும் மேலாக மலையில் காய்ந்த சருகு, லெமன் வகை புற்கள் தீப்பிடித்து எறிந்தன. இத்தகைய நிலையில் இப்பகுதியில் அடிக்கடி தீப்பற்றி எரிவதாகவும், ஆகையால் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாளாடி மற்றும் ஸ்ரீரங்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று (மார்ச் 26) ஸ்ரீரங்கம் கீழவாசல் ரோட்டிலுள்ள ரயில்வே லெவல் கிராசிங் கேட்டில் பராமரிப்பு பணி மற்றும் சாலையில் வேகத்தடை அமைக்கும் பணி நடைபெற உள்ளதால் அங்குள்ள ரயில்வே கேட் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்படும். ஆகவே பொதுமக்கள் யாத்ரிநிவாஸ் அருகேயுள்ள சுரங்கப்பாதையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்ங்க.
திருச்சி, வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில், மார்ச் 26 முதல் ஏப்ரல் 10 ஆம் தேதி வரை காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை, Madras Engineering Group & Centre பயிற்சியாளர்களால் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. எனவே இப்பகுதியில் கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டத்தை தவிர்க்குமாறு ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். SHARE செய்யவும்..
திருச்சி பாலக்கரை போலீசார் நேற்று முதலியார் சத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் 4 பேர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டறியப்பட்டது. உடனே போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.3,75,000 மதிப்புள்ள 12,500 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் ரவுடிகளின் நடவடிக்கையை முற்றிலுமாக தடுக்க தனிப்படைகள் உருவாக்கி சிறப்பு தீவிர வேட்டை மேற்கொண்டதில் முதற்கட்டமாக குற்றவாளிகளின் குற்ற செயல்களை கண்டறிந்து திருச்சி மாவட்டத்தில் 43வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 57 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட எஸ்.பி செ.செல்வநாகரத்தினம் நேற்று தகவல் தெரிவித்தார்.
TAHDCO சார்பில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் ( JEE Mains) தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. உணவு, தங்குமிடம் மற்றும் 11 மாதங்கள் பயிற்சிக்கான செலவை CPCL ஏற்கும் . இப்பயிற்சிக்கு www.tahdco.com இணையத்தில் பதிவு செய்து பயிற்சியில் கலந்து கொள்ளலாம். 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இந்த செய்தியை பகிரவும்.
திருச்சி காவல்துறை பணியிடைப் பயிற்சி மையத்தில் நேற்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாள பெண் காவல் புலன் விசாரணை அதிகாரிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சிக்கு துணை காவல் கண்காணிப்பாளர் சுதர்சன் தலைமை தாங்கினார். இந்த பயிற்சியில் நூற்றுக்கணக்கான திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த ரயில்வே காவலர்களும் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.