Tiruchirappalli

News March 31, 2025

ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

image

திருச்சி மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். (உடனே SHARE பண்ணுங்க)

News March 30, 2025

திருச்சி: மாதம் ரூ.30,000 சம்பளத்தில் வேலை!

image

அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவ படையில் ஆள்சேர்க்கும் அறிவிப்பை திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது. குறைந்தது 10-ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட, 21 வயதுக்குட்பட்ட திருமணமாகாத இளைஞர்கள் இதில் விண்ணப்பிக்கலாம். ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் joinindianarmy.nic என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பருக்கு பகிரவும்!

News March 30, 2025

மணப்பாறையில் எலக்ட்ரீசியன் மர்மமான முறையில் உயிரிழப்பு

image

மதுரை எம்கே புரத்தைச் சேர்ந்த முகேஸ்வரன் என்பவர் மணப்பாறையில் திண்டுக்கல் சாலையில் இயங்கி வரும் நகை கடையில் கடந்த ஆறு மாதங்களாக எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் இன்று ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மணப்பாறை போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 30, 2025

திருச்சியில் சுட்டெரித்த வெயில்-பரிதவித்த மக்கள்

image

தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக கடந்த 27ம் தேதி முதல் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று திருச்சி மாவட்டத்தில் அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் பதிவானது. எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க..

News March 30, 2025

துறையூர் அருகே வலிப்பு நோயால் கிணற்றில் விழுந்தவர் பலி

image

துறையூர் அருகே பொன்னுசங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்(38). இவர் இன்று காலை துறையூர் பெரிய ஏரி பகுதியில் விவசாய வேலைக்காக சென்றுள்ளார். அப்போது திடீரென அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கிணறு ஒன்றில் சரவணன் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

News March 29, 2025

துறையூர்: வலிப்பு நோயால் கிணற்றில் தவறி விழுந்து பலி

image

துறையூர் அருகே பொன்னுசங்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன்(38). இவர் இன்று காலை துறையூர் பெரிய ஏரி பகுதியில் விவசாய வேலைக்காக சென்றுள்ளார். அப்போது திடீரென அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கிணறு ஒன்றில் சரவணன் தவறி விழுந்து பரிதமாக உயிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

News March 29, 2025

டிவிஎஸ் டோல்கேட் பெயர் மாற்றம் இல்லை -மாநகராட்சி அறிவிப்பு

image

திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட TVS டோல்கேட் பகுதியில், “TVS டோல்கேட்” என அழைக்கப்படுவதனை மாற்றி, “கலைஞர் டோல்கேட்” எனப் பெயர் மாற்றம் செய்திட உத்தேசிக்கப்பட்டதை, மேற்படி இடம் தொன்று தொட்டு டி.வி.எஸ். டோல்கேட் என அழைக்கப்பட்டு வருவதால், மேற்படி இடம், தற்போதுள்ள “TVS டோல்கேட்” என்ற பெயரிலேயே தொடர்ந்து அழைக்கப்படும் எனத் மாநகராட்சி ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News March 29, 2025

திருச்சி மாவட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம்

image

திருச்சி அஞ்சல் கோட்டத்துக்குட்பட்ட தென்னூர், லால்குடி, ராஜாஜி நகர் அஞ்சலகங்கள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதையொட்டி, 3 அஞ்சலகங்களிலும் ஆதார் சிறப்பு முகாம் ஏப்.1-ம் தேதி முதல் ஏப். 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ள இந்த முகாமில் பொது மக்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என திருச்சி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. SHARE NOW!

News March 29, 2025

திருச்சி வேலை வாய்ப்பு அறிவிப்பு

image

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கடல் அறிவியல் துறையில் திட்ட உதவியாளர் ஒரு காலி பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.04.25க்குள் கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரியில்: rajaramdms@bdu.ac.in விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 29, 2025

திருச்சி: ராணுவத்தில் சேர வாய்ப்பு

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். உங்கள் பகுதி இளைஞர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க…

error: Content is protected !!