Tiruchirappalli

News September 21, 2024

திருச்சிக்கு முதன்முறையாக ஆம்னி பேருந்து நிலையம்

image

திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சப்பூரில் சுமார் 350 கோடி ரூபாயில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், அங்கு 4 ஏக்கரில் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தப் பேருந்து நிலையம் ரூ.17 கோடியே 60 லட்சம் மதிப்பில் 2 நடைமேடைகளுடன் 82 பேருந்துகளைக் கையாளும் வசதியுடன் அமையவுள்ளது. ஷேர் செய்யவும்

News September 20, 2024

புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகளை ஆட்சியர் ஆய்வு

image

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள புனித ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில் அங்கு புத்தகத் திருவிழாவிற்கு நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை இன்று மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தக்க அறிவுரைகளை வழங்கினார்.

News September 20, 2024

திருச்சி ஆட்சியர் அறிவிப்பு

image

மணிகண்டம் பகுதியில் அமைந்துள்ள கள்ளிக்குடி காய்கறிகள், பழங்கள்(ம) மலர்களுக்கான மத்திய வணிக வளாகத்தில் செப்டம்பர்-2020 முதல் கடைகளை வாடகைக்கு பெற்றுள்ள வியாபாரிகள், விவசாயிகள் கடைகளை பயன்படுத்தாமலும், வாடகை, மின்கட்டணம் செலுத்தாமல் உள்ளனர். எனவே தொகையினை செலுத்தி ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்ளுமாறும், தவறினால் கடைகள் அனைத்தும் வேறு நபர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 20, 2024

திருச்சியில் விடிய விடிய தேடுதல் வேட்டை

image

திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமாரின் தனிப்படையினர் நேற்று விடிய விடிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதில் திருச்சியைச் சேர்ந்த பிரபல ரவுடிகள் பட்டறை சுரேஷ், கொட்டப்பட்டு ஜெய், சந்திரமௌலி, பிரதாப், டேவிட் சகாயராஜ் உள்ளிட்ட 15 ரவுடிகளின் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தினர். அதில் பல கோடி மதிப்புள்ள போலி பத்திரங்கள், நில ஆவணங்கள் மற்றும் பயங்கர ஆயுதங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 20, 2024

திருச்சி விமான நிலையத்திற்கு கூடுதல் பேருந்து சேவை

image

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம் பழைய முனையத்திலிருந்து வெகு தொலைவில் இருப்பதாகவும் 2 கி.மீக்கு மேல் செல்ல வேண்டியதாகவும் புகார் இருந்தது. இதனையடுத்து புதிய விமான நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு 6 நடைகள் சேவை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கூடுதலாக 16 நடைகள் சேர்க்கப்பட்டு 22 நடைகள் என்ற வகையில் இயக்கப்படுகிறது. ஷேர் செய்யவும்

News September 20, 2024

சிறு கனிம குத்தகைதாரர்களுக்கு ஆட்சியர் தகவல்

image

திருச்சி மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள சிறு கனிம குவாரி குத்தகைதாரர்கள் இணையதளத்தில் பதிவு செய்து, உரிய கட்டணங்கள் செலுத்தி விண்ணப்பித்த மொத்த இசைவாணி சீட்டினை இணையதளம் வாயிலாகவே பதிவிறக்கம் செய்யும் நடைமுறை செப்டம்பர் 16 முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. எனவே திருச்சியைச் சேர்ந்த சிறு கனிம குத்தகைதாரர்கள் சீட்டினை பெற்றுக்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். ஷேர் செய்யவும்

News September 19, 2024

சிறு கனிம குத்தகைதாரர்களுக்கு ஆட்சியர் தகவல்

image

திருச்சி மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள சிறு கனிம குவாரி குத்தகைதாரர்கள் இணையதளத்தில் பதிவு செய்து, உரிய கட்டணங்கள் செலுத்தி விண்ணப்பித்த மொத்த இசைவாணி சீட்டினை இணையதளம் வாயிலாகவே பதிவிறக்கம் செய்யும் நடைமுறை 16.09.2024 முதல் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே திருச்சியைச் சேர்ந்த சிறு கனிம குத்தகைதாரர்கள் சீட்டினை பெற்றுக்கொள்ள மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

News September 19, 2024

ஸ்ரீரங்கத்தில் கட்டுமானம் கட்ட இடைக்கால தடை

image

ஸ்ரீரங்கம் நடைமேடையில் கழிப்பிடம் கட்டுவதற்கு அனுமதி கூறி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் கழிப்பிடம் கட்ட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்ரீரங்கம் நகரில் நடைமேடை, சாலைகளை ஆக்கிரமித்து கழிப்பிடம் உள்ளிட்ட எந்த கட்டுமானங்களையும் கட்டுவதற்கு தடை விதித்து இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

News September 19, 2024

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியலில் 526 கிலோ தங்கம்

image

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய தங்கத்தை பிரித்தெடுக்கும் பணி, ஓய்வு பெற்ற நீதியரசர்கள் தலைமையில், கடந்த மாதம் 7 ஆம் தேதி துவங்கி நேற்று வரை நடைபெற்றது. இதில் தங்கத்தை உருக்கி தனியே பிரிக்கின்ற பணியில் மொத்தம் 526 கிலோ 436 கிராம் 24 காரட் சுத்த தங்கம் பெறப்பட்டுள்ளது.

News September 19, 2024

ஸ்ரீ ரங்கத்தில் மனைவியை கொல்ல முயற்சி; 7 ஆண்டுகள் சிறை

image

கடந்த ஏப்ரல் மாதம் தனது மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை நேற்று விசாரித்த திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் குற்றவாளி சுரேஷுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 11,500 ரூபாய் அபராதமும் விதித்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.50,000 நிவாரணத் தொகை வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது.