India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் ஜாமீனில் வெளியே வந்த ஆட்டுக்குட்டி சுரேஷ் என்பவர், நேற்று மாலை சுமார் 7.30 மணியளவில் அவரது மனைவி ராகினி ஆகிய இருவரும் வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத 5 நபர்களால் வெட்டப்பட்டார். இதில் ஆட்டுக்குட்டி சுரேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மனைவிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருச்சியில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்திய ஜனநாயக கட்சியின் நிர்வாகி திருவெறும்பூர் நத்தமாடிப்பட்டியை சேர்ந்த பிரபல ரவுடி பட்டறை சுரேஷ் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட 66 அசல் பத்திரங்களும், கட்ட பஞ்சாயத்து மூலம் மிரட்டி பெறப்பட்டவை என விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் பட்டறை சுரேஷை நேற்று இரவு குடும்பத்துடன் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில், அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயத்தின் வாழ்க்கை வரலாறு நூல் மறு வெளியீட்டு விழா நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் நூலை வெளியிட்டதை தொடர்ந்து மறு வெளியீடாக இன்று அமைச்சர் ஐ.பெரியசாமி நூலை வெளியிட, எம்.பி ஆ.ராசா, அமைச்சர்கள் சக்கரபாணி, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் நூல்களை பெற்றுக்கொண்டனர்.
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள உஸ்மான் அலி பகுதிகளில் உள்ள விடுதிகளில் இன்று காலை போலீசார் திடீர் விசிட் அடித்தனர். அந்த விடுதியில் கஞ்சா போதை மாத்திரைகள் இருப்பதாக பெறப்பட்ட தகவலை எடுத்து இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. திருச்சி கன்டோன்மென்ட் காவல் உதவி ஆணையர் தலைமையில் போலீசார் கொண்ட தனிப்படை இந்த ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
திருச்சி பன்னாட்டு நிலையத்திலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 145 பயணிகளுடன் சனிக்கிழமை மத்திய 2.40 மணிக்கு சார்ஜாவிற்கு புறப்பட தயாராக இருந்த நிலையில் திடீரென விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. பின்னர் பயணிகள் இறக்கி விடப்பட்டதால் விமானநிலைய அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பிறகு இரவு 11.45 மணிக்கு மாற்று விமான மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
துவரங்குறிச்சியை சேர்ந்த முகமது காசிம். இவரிடம் இதே பகுதியை சேர்ந்த கவியரசன் என்பவர் ரூ.7,00,000 பணத்தை கடந்த 6 மாதத்திற்கு முன்பு வாங்கி விட்டு பணம் திருப்பி தராமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முகமது காசிம் இன்று கவியரசன் மற்றும் குடும்பத்தினர் 3 பேரை கடத்தி முகமது காசிம் சொந்தமான லாட்ஜில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது. துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிறந்தநாளை முன்னிட்டு நாளை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதலில் பிறந்த 5 குழந்தைகளுக்கு,கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ கணையாழி அணிவித்து, அதன் பின் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் அன்பளிப்புகள் வழங்குகிறார், தொடர்ந்து இராயபுரம் அரசு மகப்பேறு மருத்துவ மனையில் பிறந்த மூன்று குழந்தைகளுக்கு கணையாழி அணித்தும், மற்ற குழந்தைகளுக்கு அன்பளிப்புகள் வழங்குகிறார்
திருச்சியில் குற்ற செயல்களில் ஈடுபடுவதாக சந்தேகப்படும் நபர்களான பிரபு என்ற பப்லு, ஜெயக்குமார் என்ற கொட்டப்பட்டு ஜெய், மைக்கேல் சுரேஷ் என்ற பட்டரை சுரேஷ், டேவிட் சகாயராஜ், பாலு என்ற பாலமுத்து, பிரதாப் என்ற சிங்கம் பிரதாப், ராஜகுமார், கருப்பையா, பல்பு பாட்ஷா, கரிகாலன், தாடி கோபால், சந்திரமௌலி, குருமூர்த்தி மற்றும் டி.டி.கிருஷ்ணன் வீடுகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆபரேசன் அகழி என்ற சிறப்பு சோதனையில் போலீசார் திருச்சி, எ.புதூர் சந்திரமவுலி என்பவரது வீட்டில் சோதனை செய்ய சென்றனர். அப்போதும் அவர் தப்பி ஓடிவிட்டார். இதை தொடர்ந்து வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. பின்னர் எல்லீஸ் சோதனை சாவடியில் வந்த காரை போலீசார் நிறுத்த முற்பட்டபோது அந்த கார் பூங்கா சுவரில் மோதியது. இதையடுத்து காரில் இருந்த சரித்திர பதிவு குற்றவாளி சந்திரமவுலி ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டார்.
திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சப்பூரில் சுமார் 350 கோடி ரூபாயில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், அங்கு 4 ஏக்கரில் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தப் பேருந்து நிலையம் ரூ.17 கோடியே 60 லட்சம் மதிப்பில் 2 நடைமேடைகளுடன் 82 பேருந்துகளைக் கையாளும் வசதியுடன் அமையவுள்ளது. ஷேர் செய்யவும்
Sorry, no posts matched your criteria.