India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் கோகிலா. இவர் கொண்டயம்பேட்டையில் உள்ள இரும்பு பட்டறை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த போது அவர் மீது எந்திரம் ஒன்று மோதி நேற்று காயமடைந்தார். பின்னர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
புத்தாநத்தம் அடுத்த மெய்யம்பட்டியைச் சேர்ந்த தங்கப்பாண்டியன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, சமத்துவபுரம் என்ற இடத்தில் எதிர் திசையில் வந்த தனியார் பள்ளி வேன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற சிறுவன் படுகாயம் அடைந்த நிலையில், மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து புத்தாநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளிக்கான முதல் விற்பனையை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என்.நேரு இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் அன்பழகன், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
லால்குடி அருகே ஆதிகுடி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் இவரது மனைவி அனுசுயா. இவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இரவு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கணவன் ராஜேஷ் மனைவி அனுசியாவை அரிவாளால் வெட்டி உள்ளார். இதில் காயம் அடைந்த அனுசியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜர் அளித்த பேட்டியில், அக்.6ஆம் தேதி காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை இலவச சித்த மருத்துவ முகாம் சங்கிலியாண்டபுரத்தில் உள்ள சித்த மருத்துவமனையில் நடைபெற உள்ளது. இதனை மேயர் அன்பழகன் தொடங்கி வைக்கிறார். இதில் ஆஸ்துமா, சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள் மற்றும் பல வகையான நோய்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHAREIT
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரையின்படி, திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சுயதொழில் செய்ய விரும்பும் முன்னாள் படைவீரர்கள்/படைப்பணியின் போது மரணம் அடைந்த படைவீரர்களின் கைம்பெண்கள் தங்களது விருப்ப விண்ணப்பத்தினை திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துணை இயக்குனர் அலுவலகத்தில் வரும் 15.10.2024க்குள் சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர் நேற்று தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மனுக்கள், குடும்ப அட்டை தொடர்பான மனுக்கள், நில ஆக்கிரமிப்பு தொடர்பான மனுக்கள் என மொத்தம் 616 மனுக்கள் பெறப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவி தொகை பெற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் திருச்சி மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று அறிவித்துள்ளார். இதற்கான விண்ணப்ப படிவத்தை திருச்சி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துணை இயக்குனர் அலுவலகத்திலேயே நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்த ஒன்றிய அமைச்சர் குமாரசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது உரிய காலத்தில் மழை பெய்யும் பொழுது காவேரி விவகாரத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. மழை பொழிவு குறைவாக இருக்கும் போது தான் பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் காவேரி விவகாரத்தில் சட்ட போராட்டங்கள் உதவாது என தெரிவித்தார்.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி எம்பி அருண் நேரு நேற்று துணை முதலமைச்சராக பதவி ஏற்று கொண்ட உதயநிதி ஸ்டாலினை இன்று அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். உடன் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு இருந்தார்.
Sorry, no posts matched your criteria.