Tiruchirappalli

News March 28, 2024

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சிறப்பு வரவேற்பு

image

திருச்சியில் பல்வேறு அதிமுக கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முன்னாள் அமைச்சர் தங்கமணி இன்று திருச்சி வந்தார். அவருக்கு முன்னாள் அமைச்சர்கள், விஜயபாஸ்கர், பரஞ்சோதி, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், மற்றும் திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கருப்பையா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

News March 28, 2024

திருச்சி: 38 மனுக்கள் ஏற்பு: 10 நிராகரிப்பு!

image

திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்காக அதிமுக, மதிமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி, உட்பட சுயேச்சை வேட்பாளர்கள் மொத்தம் 48 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில், 10 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, மீதமுள்ள 38 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டதாக திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News March 28, 2024

ஜனநாயக முறையில் தேர்தல் நடக்குமா?

image

துறையூரில் இன்று மாலை பாலக்கரை கலைஞர் திடலில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் நடைபெற்ற மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு திமுக வேட்பாளர் அருண் நேருவிற்கு வாக்குகள் சேகரித்தார்.
அப்போது தேர்தல் ஆணையம் மோடியின் உத்தரவுக்கு செயல்படுகிறதா? தேர்தல் ஜனநாயக முறையில் நடக்குமா? என கேள்வி எழுப்பினார்.

News March 28, 2024

திருச்சி: அதிகமாக கஞ்சா மதுபானம் பறிமுதல்

image

திருச்சி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க சட்டமன்ற தொகுதிக்கு 9 குழுக்கள் கண்காணிக்கபடுகிறது . இந்த நிலையில் மொத்தமாக திருச்சி மாவட்டத்தில் மட்டும் அதிகமாக போதைப்பொருள் பிடிபட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லோக்சபா தேர்தல் காரணமாக தேர்தல் விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்டவை இன்று வரை வரும் போதை பொருட்கள் மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News March 28, 2024

திருச்சி அருகே கோர விபத்து

image

தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் தொட்டியம் சாலையில் சுருட்ட பாளையம் பேருந்து நிலையம் அருகே இன்று டூவீலர், கார் மோதி விபத்துக்குள்ளானது. தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் சம்பவம் குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 28, 2024

திருச்சி மக்களவை தொகுதியை முன்மாதிரியாக மாற்றுவேன்

image

திருச்சி அதிமுக வேட்பாளர் தன்னுடைய பிரச்சாரத்தின் போது ருச்சி தொகுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.திருச்சி தொகுதி மக்களின் குரலாக பாராளுமன்றத்தில் ஒலித்து மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவேன் என தெரிவித்தார். இந்தியாவில் முன்மாதிரியான தொகுதியாக திருச்சியை மாற்ற நடவடிக்கை நிச்சயம் எடுப்பேன் என வாக்குறுதிகள் கொடுத்து தீவிர பிரச்சாரம் செய்கிறார்.

News March 27, 2024

திருச்சி: கத்தியை காட்டி மிரட்டல், 7 ஆண்டு சிறை

image

திருச்சி கேகே நகர் அருகே மன்னார்புரம் பகுதியில் கடந்த 15.5.2022 அன்று அதிகாலை 4:30 மணிக்கு மளிகை கடைக்காரர் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000 பணம் திருடிய ராஜேஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் இருந்து வந்தார். இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணையில் குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை விதித்து திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

News March 27, 2024

திருச்சியில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

image

வரும் நாடாளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு வாக்காளர்கள் திருச்சிக்கு வந்துள்ள மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் இணைந்து ஊர்க்காவல் படையினரின் வாத்திய குழு இசையுடன் இன்று கொடி அணி வகுப்பு நடைபெற்றது. திருச்சி சமயபுரம் ரெட்டியார் மஹால் அருகே நடந்த இந்த அணிவகுப்பை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

News March 27, 2024

திருச்சியில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு

image

பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு, திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு இந்திய தேர்தல் ஆணையத்தினால் நியமிக்கப்பட்ட, தேர்தல் பார்வையாளர் தினேஷ் மற்றும் தேர்தல் பார்வையாளர் அமித் குமார் விஸ்வகர்மா ஆகியோர் மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப் குமார் முன்னிலையில், மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

News March 27, 2024

திருச்சி: ரயில்வே ஊழியர்களுக்கான வாலிபால் போட்டி

image

திருச்சி ஜங்ஷன் கல்லுக்குழி அருகே உள்ள ரயில்வே விளையாட்டு மைதான ஸ்டேடியத்தில், ரயில்வே ஊழியர்களுக்கான மாபெரும் வாலிபால் சாம்பியன்ஷிப் (ஆண்கள்) போட்டி இன்று நடைபெற்றது. இதனை திருச்சி ரயில்வே கோட்டத் துணை மேலாளர் செல்வன் தொடங்கி வைத்தார். இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட ஆறு மண்டல ரயில்வே ஊழியர்கள் பங்கேற்றனர்.

error: Content is protected !!