India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி ராஜம் கிருஷ்ணமூர்த்தி பப்ளிக் பள்ளி ஆண்டு விழா நேற்று நடந்தது. தேசியக் கல்லூரி செயலாளர் ரகுநாதன் தலைமை வகித்தார். விழாவில் தென்னக ரயில்வே வணிக மேலாளர் மோகனப்பிரியா, மாணவ மாணவிகளுக்கு பன்முகத்திறமை, வளர்ச்சி மட்டுமே மாணவர்களின் எதிர்காலத்தை சிறந்த முறையில் அமைக்க உதவுகிறது என்று கூறினார். குழந்தைகளிடம் பாலின கல்வி மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.
திருச்சி, திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அருண் நேருவிற்காக குளித்தலை ஒன்றியத்தில் உள்ள கோட்டைமேடு, குட்டப்பட்டி பகுதியில் பொதுமக்களிடம் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். உடன் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், தொகுதி பொறுப்பாளர்கள் எம்பி அப்துல்லா பரணிதரன், நன்னியூர் ராஜேந்திரன் கலந்து கொண்டனர்.
திருச்சி ரயில்வே கோட்டை மேலாளர் அன்பழகன், நேற்று செய்தியாளர்களிடம், தெரிவித்தது .2023-24 ஆம் ஆண்டில் திருச்சி ரயில்வே கோட்டம் சரக்கு அனுப்புவது பயணிகள் அனுப்புவது உள்ளிட்டவைகளில் அதிக அளவு வருவாய் ஈட்டி உள்ளது. 2024 ஆம் ஆண்டில் திருச்சி ரயில்வே கோட்டத்தில் 15.077 மில்லியன் டன்களுக்கு அனுப்பியதன் மூலம்,857. 04 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று கூறினார்.
பொன்மலைப்பட்டியை சேர்ந்த மரியமார்ட்டின் இருதயராஜ் (63). இவர் இணைய வழியில் ரூ.10,500 முதலீடு செய்து ஊக்கத்தொகை பெற்றுள்ளார். பின்னர் ரூ.16.51லட்சம் தொகையை இணைய வழியில் முதலீடு செய்துள்ளார். ஆனால் முதலீடு செய்த பணமும் திருப்பி வரவில்லை. அதற்குரிய சிறப்பு ஊக்க தொகையும் வரவில்லை. இதுகுறித்து கணினிசார் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார்கள்.
மக்களவைத் பொதுதேர்தல் 2024 முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு என்னும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான பிரதீப் குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்கு இருக்கும் அதிகாரிகளுக்கு தக்க ஆலோசனைகளை வழங்கினார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் நாளை 08.04.24 மற்றும் நாளை மறுநாள் 09.04.24 தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் 2021 ஆம் ஆண்டு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. கல்லூரி குழுமத் தலைவர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். கோயம்புத்தூர் டெக்ஸ்மோ அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத் துணைத் தலைவர் நரேந்திரன் 1044 மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசுகையில், எந்தத் துறையில் தோல்வி அடைந்தாலும் மன வருத்தம் அடைய கூடாது என்று உரையாற்றினார்.
திருச்சி மாவட்ட காவல் துறையில் இயங்கிவரும் வெடிகுண்டு துப்பறியும் (ம)அகற்றும் படையினர் மோப்பநாய் உதவியுடன் சமயபுரம், லால்குடி, முசிறி, தொட்டியம், திருவெறும்பூர், மணப்பாறை உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் இன்று தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும், வாக்குச்சாவடிகள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி, லால்குடி அருகே சிதம்பரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் திருச்சி நோக்கி காரில் பயணம் செய்தார். அப்போது தேர்தல் பறக்கும் படையினர் மஞ்சு வாரியரின் காரில் சோதனை மேற்கொண்டனர். இந்த தகவல் அறிந்த அவரது ரசிகர்கள் அப்பகுதியில் செல்பி எடுக்க குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சோதனையை விரைந்து முடித்து தேர்தல் பறக்கும் படையினர் அவரை அனுப்பி வைத்தனர்.
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இன்று மாலை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக, பாஜகவினர் அனுமதி கோரி இருந்த நிலையில், இதுவரை மாநகர காவல் துறை சார்பில் அனுமதி கொடுக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து நேற்று இரவு ஜே.பி நட்டா திருச்சி வருகை தந்தார். தற்போது அரியலூர் செல்ல உள்ள நிலையில் இன்று மாலை பேரணி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
Sorry, no posts matched your criteria.