Tiruchirappalli

News March 18, 2024

திருச்சி தொகுதியில் மதிமுக போட்டி

image

மக்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவிற்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி திருச்சி தொகுதியில் மதிமுக போட்டியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த தேர்தலில் திருச்சி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர் வெற்றி பெற்றார்.

News March 18, 2024

பயணிகளுக்கு திருச்சி ரயில்வே அறிவுரை!

image

திருச்சி ஜங்ஷன் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் ரயில் பயணிகளின் நலன் கருதி இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் ரயிலில் பயணிகளின் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள நேரங்களில் இளைஞர்கள் படியில் தொங்கிக்கொண்டு செல்வது வாடிக்கையாக உள்ளது.இது போன்ற நேரங்களில் அடுத்து வரும் ரயிலில் பயணிக்க அறிவுறுத்தியுள்ளது.மேலும் இது போன்ற செயல்களை தவிர்த்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள கூறப்பட்டுள்ளது.

News March 18, 2024

திருச்சி மக்களே இதை மிஸ் பண்ணாதீங்க 

image

திருச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும் துரித உணவுகள் தயாரித்தல் குறித்த இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் முடித்தவுடன் சான்றிதழ் வழங்கப்படும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கும் முன்பதிவிற்கும்
8903363396 என்ற எண்ணை அழைக்க கூறப்பட்டுள்ளது.

News March 18, 2024

திருச்சி அருகே பயங்கர விபத்து; இருவர் சம்பவ இடத்தில் மரணம் 

image

துவரங்குறிச்சி அடுத்த முக்கன் பாலம் அருகே இன்று மாலை திருச்சி நோக்கி சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த துவரங்குறிச்சி காவல்துறையினர் மற்றவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

News March 17, 2024

திருச்சியில் அதிரடி சோதனை

image

திருச்சி மாவட்டத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்கவும் , அரசியல் கட்சிகள் பரிசு பொருட்களை தடுக்கவும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர் இந்நிலையில் திருச்சி குடமுருட்டி சோதனை சாவடியில் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகன ஓட்டிகளிடம் வாகனங்களில் முன்புறமுள்ள கட்சி கொடிகளை அகற்ற அறிவுறுத்தினர்.

News March 17, 2024

திருச்சி பயணிகள் உடைமைகளில் தீவிர சோதனை

image

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் கடத்தல் சம்பவங்களை தடுக்கும் வகையில் இன்று ரயில்வே பாதுகாப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதையொட்டி சுமார் 15க்கும் மேலான போலீசார் இந்த ரோந்து பணியில் ஈடுபட்டு, ரயில் நிலையத்தில் சந்தேகப்படும் படியாக நபர்களை விசாரித்தும், அவர்கள் உடைமைகளை வாங்கி பரிசோதனை செய்தனர்.

News March 17, 2024

திருச்சி மாநகராட்சி ஆணையர் முக்கிய அறிவிப்பு

image

திருச்சி மாநகராட்சி ஆணையர் பொதுமக்களுக்கு இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்தில் அரக்குழாயில் மண் துகள்கள் மூலம் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றை சரி செய்ய 2 மாத காலம் தேவைப்படுவதால் இந்த ஏரியாவை சுற்றியுள்ள 35 நீர் தேக்க மேல்நிலைத் தொட்டிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் நீர் வினியோகம் செய்யப்படும் என்றார்.

News March 17, 2024

திருச்சி ரயில்வே முக்கிய அறிவிப்பு

image

திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் ஏற்றுக்கொள்ளப்படாத காரணங்களுக்காக தொடர்ந்து அபாய சங்கிலியை இழுப்பதாக புகார் வருகிறது. மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும், சங்கிலி இழுப்பு சம்பவங்கள் ஏற்றுக்கொள்ளப்படாத பட்சத்தில் அது தண்டனைக்குரியதாக கருதப்படும் என எச்சரித்துள்ளது.

News March 17, 2024

திருச்சி அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம் 

image

திருச்சி பேட்டை வாய்த்தலையை சேர்ந்த
ப. பெரியசாமி (38).இவர் தனது டூவீலரில் பெருகமணி பகுதியில் வந்து கொண்டிருந்தார்.அப்போது, சாலை தடுப்பில் மோதி கீழே விழுந்த போது அவ்வழியே வந்த டூவீலர் மோதியதில், படுகாயமடைந்த பெரியசாமி நிகழ்விடத்திலேயே இறந்தார்.இதையறிந்த பேட்டைவாய்த்தலை போலீஸார் சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்கு ஶ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பதிந்து விசாரணை நடத்தினார்கள்.

News March 17, 2024

திருச்சி: தேர்தல் பணிக்காக 2118 காவலர்கள்.!

image

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 8 காவல்துறை காவல் கண்காணிப்பாளர்கள்,36 காவல் ஆய்வாளர்கள், 263 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1424 காவல் ஆளிநர்கள்,383 ஊர்காவல் படையினர் என மொத்தம் 2118 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர், என்றார்.

error: Content is protected !!