India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மாவட்டத்தில் திமுக பிரச்சாரத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து திமுகவினர் மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகள் இன்று திருச்சியை நோக்கி படையெடுத்து வந்தனர். இதையடுத்து பிரச்சார திடலில் போடப்பட்டிருந்த நாற்காலிகள் அனைத்தும் தொண்டர்களால் ஆக்கிரமிப்பு செய்து சிறுகனூர் பகுதி முழுதும் மக்கள் வெள்ளத்தால் ஸ்தம்பித்தது.
திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் திருச்சி சிறுகனூரில் முதல்வர் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் அருண் நேரு , திமுக என்றென்றும் இளைஞர்களுக்கான வளர்ச்சியை ஏற்படுத்தும் இயக்கம் என்றும் பெரம்பலூர் தொகுதியின் வெற்றியை முதல்வருக்கு சமர்பிப்பேன் என உறுதியளித்தார். நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று திருச்சி மற்றும் பெரம்பலூர் தொகுதி வேட்பாளர்களை சிறுகனூரில் ஆதரித்து பேசுகிறார். இதை முன்னிட்டு பிரச்சார கூட்டத்திற்கு வருகை தரும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை ஈர்க்கும் விதமாக ஸ்டாலின் மற்றும் உதயநிதி படத்துடன் மயில் தோகை போன்ற இறக்கையுடன் பெண்கள் நடனம் ஆடி பொதுமக்களை கவர்ந்தனர்.
திருச்சியில் மார்ச் 24ஆம் தேதி அ.தி.மு.க (ம) கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி அவர்களால் சூறாவளி பிரச்சாரம் தொடங்க உள்ளது. இந்த பிரசார கூட்டத்தில் தமிழகம், புதுவையில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்து பேசுகிறார். இந்த பிரச்சாரம் திருச்சி வண்ணாங்கோவில் நவலூர் குட்டப்பட்டு பகுதியில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரும்,தேர்தல் அலுவலருமான பிரதீப் குமார் இன்று செய்தியாளர்களிடம் பேசுயது:திருச்சியில் 2547 வாக்குச்சாவடி மையம் உள்ளது.3053 வாக்குப்பதிவு இயந்திரம்,3053 கட்டுப்பாட்டு கருவிகள்,3037 விவிபேட் உள்ளன.மண்டல அலுவலர்களுக்கு நாளை பயிற்சி வழங்கப்படுகிறது. திருச்சியில் நேற்று மாலை வரை ரூ.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இன்று காலை ரூ15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
திருச்சி மாநகர காவல் துறை பொதுமக்களின் நலன் கருதி இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது அதில், சந்தேகத்திற்குரிய போலியான இணைப்புகள் மூலம் வரும் லிங்குகளில் இருந்து ஜாக்கிரதையாக இருக்கும்படி கூறப்பட்டுள்ளது. மேலும் இது இணையத்தில் மோசடி செய்பவர்கள் மூலம் உங்கள் எஸ் எம் எஸ் மற்றும் கேமரா போன்ற தொடர்புகளை அணுகி நிதி இழப்பை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது.
திருச்சியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பரப்புரை செய்கிறார். இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் முதலமைச்சர், திருச்சியில் துரை வைகோ மற்றும் பெரம்பலூர் வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார். கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வையம்பட்டியில் நேற்று தேர்தல் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏடிஎம்-ற்கு பணம் எடுத்துச் செல்லும் வாகனத்தை தணிக்கை செய்த போது உரிய ஆவணங்கள் இன்றி ரூ.38 இலட்சம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரி குணசேகர் தலைமையிலான பறக்கும் படையினர் பணத்தை வட்டாட்சியர் தனலட்சுமியிடம் ஒப்படைத்த நிலையில் வருமானவரித் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள மேல மாங்காவனம் மற்றும் கீழ மாங்காவனம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருவெறும்பூர் பகுதிக்கு வர வேண்டும் என்றால் ரயில்வே டிராக்கை கடந்து செல் வேண்டும், மக்கள் ஏதுவாக கடக்க சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று விடுத்துள்ளனர் இதனால் பாஜக மாநகர தலைவ சுரங்கபாதை அமைத்து தர வேண்டி நேற்று ரயில்வே அதிகாரியிடம் மனு கொடுத்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை 22.3.2024ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்து, தஞ்சாவூர் வழியாக திருவாரூர் மாவட்டத்திற்கு செல்ல உள்ளார். எனவே,இன்று 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.