India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சியில் பாஜக கூட்டணி கட்சியான அமமுக வேட்பாளர் செந்தில் நாதனுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரப்பரை மேற்கொண்டார். அப்பொழுது, திருச்சி இழந்த பெருமையை மீட்டெடுக்க தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் செந்தில்நாதனுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்றா. தேஜகூ வேட்பாளர் வெற்றி பெற்றால் திருச்சி வளர்ச்சியடைவது உறுதி எனக் கூறினார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் 25 நபர்களுடன் சட்ட விரோதமாக ஒன்று கூடி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தினர். மேலும், அனுமதி பெறாத வாகனங்களில் ஊர்வலமாக சென்று சட்டவிரோதமாக வாக்குகள் சேகரித்ததாக வேட்பாளர் ராஜேஷ், தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் பிரபு உள்ளிட்ட 25 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி இந்திய மேலாண்மை கழகத்தின் (ஐஐஎம்) 12ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு, ஐஐஎம் திருச்சியின் தலைவர் ஜலஜ் தானி தலைமை வகித்தார். இதில், இந்திய எரிவாயு ஆணையத் தலைவர் சந்திப் குமார் குப்தா மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினார். அப்போது, இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் பட்டம் பெறும் நீங்கள் அனைவரும் சவால்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
திருச்சியில் உள்ள பிரபலமான இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் எனப்படும் கல்வி நிறுவனத்தில் இன்று 12வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நிறுவன முதல்வர் பட்டங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார். விழாவை சிறப்பிக்கும் விதமாக இந்நிறுவனத்தின் பயின்ற மாஜி மாணவர்களும் பங்கேற்றனர்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் 4, வார்டு 60, அம்மன் நகர் பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு நடைபெறும் பணிகளின் நிலை குறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் வே.சரவணன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடிக்க பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார். மதிமுக சின்னம் கோரியிருந்த நிலையில் அவருக்கு சற்றுமுன் இன்று தீப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
வருமான வரி கணக்கில் முரண்பாடு இருப்பதாகக் கூறி காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1823 கோடி அபராதம் விதித்து இருக்கிறது. வருமானவரித்துறை இது குறித்து திருச்சி எம்எல்ஏ இனிகோ இன்று கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இச்செயலை கண்டித்து காங்கிரஸ், போராட்ட களத்திலும் இறங்கி இருக்கிறது. இதனால் தேர்தல் வரும் முன்பே எதிரியின் முதுகெலும்பை உடைத்துக் களம் காண்பது கோழைத்தனம் என்று
விமர்சித்துள்ளார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களுக்கு திருமாவளவன் பேட்டி அளித்தார். அதில், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் இந்திய மக்களுக்கும், பாஜகவிற்கும் நடக்கும் இரண்டாம் சுதந்திரப் போர். இதில் இந்திய மக்கள் தான் வெற்றி பெறுவார்கள். மேலும், பாஜக பட்டியலின மக்களுக்கு எதிரானது என்பதை தற்போது உணர்ந்து அந்த கட்சியில் இருந்து வெளியேறி இருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது என்றார்.
திருச்சி மாவட்டம் சிங்காரத்தோப்பு பகுதியில் மத்வ சித்தாந்த சபாவில் நாளை 31.1.2024 திருச்சி மாவட்ட எலக்ட்ரிஷன் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் நியமனம் மற்றும் உறுப்பினர்கள் சேர்த்தல் குறித்த ஆலோசனை நடைபெற உள்ளது. எனவே எலக்ட்ரீசியன், டெக்னீசியன் நிர்வாகிகள் ஒன்று திரண்டு உரிமைகளை மீட்போம் என சங்க குழு சார்பில் இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி அருணாச்சலம் மன்றம் அருகில் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டமானது, காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் நடைபெற்றது. இதில், பாராளுமன்ற பொது தேர்தலை காங்கிரஸ் கட்சி எதிர்கொண்டு வரும் வேளையில், காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை சட்டவிரோதமாக முடக்கிய பாஜக அரசை கண்டித்து, பதாகை ஏந்தி கண்டன கோஷம் எழுப்பினர்.
Sorry, no posts matched your criteria.