India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் அருகில் இன்று மாலை திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் துரை வைகோவை ஆதரித்து திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்கு கேட்டு பொதுமக்களிடம் உரையாற்றினார். இந்நிகழ்வில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிக்கோ இருதயராஜ், இந்திய கூட்டணியின் தோழமை இயக்க நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் எஸ் ஆர் எஸ்.இப்ராஹிம் இன்று திருச்சியில் பேட்டியளித்தார்.அதில், கச்சத்தீவு விவகாரத்தில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது எதையும் செய்யாமல், தற்பொழுது தேர்தல் நேரத்தில் கையில் எடுத்திருப்பது, அரசியல் உள்நோக்கம் கொண்டது. காங்கிரஸ் கட்சியிடம் வருமான வரியை கட்ட சொல்வது, தேர்தல் நேரத்தில் நெருக்கடியை கொடுப்பதற்காக செய்யப்படுகிறது என்றார்.
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுக்கு தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது கூட்டத்திற்கு தேர்தல் பார்வையாளர் தினேஷ்குமார் மற்றும் மாவட்ட கலெக்டர் பிரதீப், குமார் பேசியதாவது ,இலவச பொருட்களை வழங்குவது தண்டனைக்குரியது என்று அறிவித்தார்.
திருச்சி அதிமுக வேட்பாளரை ஆதரித்து இன்று மாலை ஆறு மணிக்கு தென்னூர் மரக்கடை அருகே மறைந்த விஜயகாந்த் அவர்களின் மனைவி, பிரேமலதா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதையடுத்து திருச்சி வந்த அவருக்கு பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சந்திரமோகன் அவருக்கு பொன்னாடை அளித்து சிறப்பு வரவேற்பளித்தனர். உடன் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, சிவபதி, மற்றும் மோகன் இருந்தனர்.
நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது. இதனை தேர்தல் அலுவலர் பறக்க விட்டார். உடன் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மற்றும் தேர்தல் அலுவலர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர்.
திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதய ராஜ் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திமுக பிரச்சாரம் செய்யும் இடங்களில் பொதுமக்கள் சிறப்பு வரவேற்பு அளிப்பதாக கூறியுள்ளார். மேலும் 2.73 லட்சம் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டமும், வெளிநாட்டு முதலீடு இருக்கும் மூலம் 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகி, அதன் வெளிப்பாடு இந்த வரவேற்பு என்றார்.
நாடாளுமன்றத் தேர்தல் 2024 முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப் குமார் மற்றும் திருச்சி பாராளுமன்ற தேர்தல் பார்வையாளர் தினேஷ்குமார் ஆகியோர் இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், 2ம் கட்டமாக வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்புவதற்காக குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணியை தொடங்கி வைத்தனர்.
புத்தானத்தம் மேற்கு தெருவில் உள்ள அருள்மிகு ஶ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா நடத்திட போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து நடந்த பேச்சு வார்த்தை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 23 பேரை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
தாமினாட்டில் கல்லக்குடி உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மார்ச் 23ஆம் தேதி அறிவித்தது. அதன்படி இந்த கட்டண உயர்வு இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த கட்டண உயர்வு முடிவைத் திரும்பப் பெற்றது தேசிய நெடுஞ்சாலை ஆணையம். இது தொடர்பான உத்தரவு அனைத்து திட்ட இயக்குநர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
புத்தனா நத்தம் மேற்கு தெருவில் உள்ள காளியம்மன் கோவில் அருகில் மாநில நெடுஞ்சாலை உள்ளதால் சாலை விரிவாக்க பணிகளுக்காக கோயிலை நெடுஞ்சாலை துறை சார்பில் அகற்றிக் கொள்ள கூறப்படுவதாக தெரிய வருகிறது இந்நிலையில் இந்த ஆண்டு திருவிழா நடத்த போலீஸ் மற்றும் வருவாய் துறையில் அனுமதிக்கவில்லை இதை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர். போலீஸ் பேச்சு வார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
Sorry, no posts matched your criteria.