India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், அமமுக சார்பில் 2 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை டிடிவி தினகரன் இன்று அறிவித்துள்ளார். அதன்படி, திருச்சியில் செந்தில்நாதன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் நடைபெற்ற திமுக பிரச்சாரக் கூட்டம் குறித்து திருச்சி கிழக்கு எம்எல்ஏ இனிகோ நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, பாஜக எனும் தீய சக்தியை வேரோடு பெயர்த்து எறிவதற்காக களப்பணியை திருச்சி மண்ணிலிருந்து போர் முரசு கொட்டி தொடங்கியிருக்கிறது. எனவே வெற்றி பெற்று இந்தியா கூட்டணி தலைமையிலான அரசுக்குப் பட்டாபிஷேகம் நடக்கும் என்றார்.
தமிழக அமைச்சர் பொன்முடி தொடர்பான வழக்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்டது உயர் பண்பு என்ற போதிலும், அவரது மரபு மீறல்கள் தமிழகத்தை அவமானப் படுத்துகிறது. என திருச்சி கிழக்கு எம்எல்ஏ இனிகோ இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் இதையே சாதகமாக வைத்துக்கொண்டு ஒருவர் தொடர்ந்து தவறுகள் செய்வது ஏற்கத்தக்கதல்ல எனவும், இனிமேலாவது சரியான நபரை ஆளுநராக பாஜக தேர்ந்தெடுக்க கூறியுள்ளார்.
மக்களவை பொது தேர்தலில் மூத்த குடிமக்கள் பார்வை, இயக்க குறைபாடு கொண்டவர்கள்,வாக்களிக்கும் நாளில் பொது போக்குவரத்தை பயன்படுத்த இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.போக்குவரத்து வசதி இல்லை என்றால்,அவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு இலவசமாக அழைத்துச் செல்லவும்,இறக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தகுதி உள்ள வாக்காளர்கள் இசிஐ ஆப்-ஐ பயன்படுத்த திருச்சி ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
திருச்சியில் கடந்த 17.2.2024ம் தேதி 23 1/2பவுன் தங்க நகைகள் திருடிய வழக்கில் சூசை ராஜ், ஷேக் தாவூத், யாசர் அராபத் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்கள் மூவரின் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் 15 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்ததால், இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி நேற்று இரவு உத்தரவிட்டார்.
திருச்சி தில்லைநகர் பகுதியில் இருந்து சத்திர பேருந்து நிலையம் செல்லும் வழியில் மாரிஸ் தியேட்டர் அருகே மேம்பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலம் சேதமடைந்துள்ளதால் அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே இந்த பிரதான சாலை வழியாக நேற்று வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மாறாக கரூர் பைபாஸ் சாலை மற்றும் ராமகிருஷ்ண பாலம் வழியாக மாற்றுப்பாதையில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்டம் கல்லக்குடி சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.ஒரு முறை பயணம் செய்ய, ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.5 முதல் 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் 100 முதல் 400 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கும் , சென்னைக்கும் தனியாக வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் என்று மக்களிடையே கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் திருச்சி ரயில்வே கோட்டம் சார்பில் வந்தே பாரத் இயக்க மத்திய ரயில்வே வாரியத்துக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது. இதன் எதிரொலியாக இன்னும் சில நாட்களில் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக நேற்று தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு இன்று நம் பெருமாள் உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் சென்றடைந்தார். இதனை அடுத்து கோவிலில் இன்று வருடத்திற்கு ஒருமுறை நிகழும் சேர்த்தி சிறப்பு சேவை நடைபெற்றது. இதனை ஒட்டி நம் பெருமாள் மற்றும் கமலவல்லி நாச்சியார் இருவரும் இணைந்து கோவில் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளித்தனர்.
திருச்சி சிறுகனூர் பகுதியில் திருச்சி மக்களவை தொகுதி மற்றும் பெரம்பலூர் மக்களவை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். இதை முன்னிட்டு உரையை தொடங்குவதற்கு முன்பாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, மற்றும் முன்னாள் நிதியமைச்சர் அன்பழகன், பெரியார் மற்றும் அண்ணா உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் உரை நிகழ்த்தினார்.
Sorry, no posts matched your criteria.