Tiruchirappalli

News March 26, 2024

கொலை குற்றவாளிகளை பிடிக்க 2தனிப்படை

image

திருச்சியை அடுத்த ஜீயபுரத்தை சேர்ந்த வீரபத்திரன். இவர் நேற்று முன்தினம் பேரூர் பஸ் நிலையம் அருகே நின்றிருந்தபோது மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடினர். இதையடுத்து நேற்று மாலை வீரபத்திரன் உடல் உடற்கூராய்வு முடிந்த பிறகு அவர்களது உறவினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் ஜீயபுரம் போலிசார் வழக்கு பதிந்து 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

News March 26, 2024

திருச்சி அருகே விபத்து; நேற்று மேலுமொருவர் மரணம் 

image

பெட்டவாய்த்தலை அருகே காவல்காரப்பாளையத்தை சேர்ந்த ஜெகநாதன்.திருச்சிக்கு கடந்த 20-ந் தேதி தனது மனைவி பார்வதி மகன் கோகுல் ஆகியோருடன் பைக்கில் சென்ற போது எதிரே வந்த 108ஆம்புலன்ஸ் மோதியதில் ஜெகநாதன்,பார்வதி நிகழ்விடத்திலேயே இறந்தார்கள்.இந்நிலையில் திருச்சியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோகுல் நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பெட்டவாய்த்தலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்

News March 25, 2024

திருச்சி ரயில்வே எச்சரிக்கை

image

திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் இன்று மக்களின் நலன் கருதி முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ஹோலி பண்டிகையை முன்னிட்டு ரயிலில் பயணிக்கும் பயணிகள் சிலிண்டர், பெட்ரோல், டீசல், பட்டாசு ஆகியவற்றை எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தீப்பற்ற கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மீறுவது தண்டனைக்குரியது எனவும் எச்சரித்துள்ளது.

News March 25, 2024

திருச்சி மதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

image

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான பிரதீப் குமாரிடம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் திமுக மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மதிவாணன், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக. செயலாளர் கே.கே.செல்லப் பாண்டியன், இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.

News March 25, 2024

திருச்சி அருகே விபத்து;சம்பவ இடத்தில் மரணம்

image

திருச்சி ரயில்வே மேம்பாலம் அருகே வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதையறிந்த திருச்சி ரயில்வே போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். அதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் இறந்தவர் மணப்பாறை அண்ணாவி நகரை சேர்ந்த கார்த்தி (34) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை.

News March 25, 2024

தேர்தல் விழா: வேட்புமனு தாக்கல்

image

மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News March 25, 2024

திருச்சி:முன்னாள் முதல்வர் பரபரப்பு குற்றச்சாட்டு 

image

திருச்சி பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி கர்நாடகா தண்ணீர் தராததால் மூன்றரை லட்சம் ஏக்கர் பயிர் நிலம் கருகியது.ஆனால் அவர் தண்ணீர் கேட்டு தரவில்லை. ஸ்டாலினுக்கு அதிகாரம் தான் முக்கியம்.நாட்டு மக்கள் முக்கியமல்ல. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதி கூடவழங்கவில்லை.தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் ஸ்டாலினுக்கு வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என கூறினார்.

News March 24, 2024

திருச்சியில் வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

வண்ணாங்கோவிலில் இன்று 24-3-2024 அன்று நாடாளுமன்ற தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற இருப்பதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் திருச்சி மாநகரம் மன்னார்புரத்திலிருந்து பஞ்சப்பூர், மணிகண்டம், விராலிமலை, மணப்பாறை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது

News March 24, 2024

திருச்சியில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்

image

திருச்சி பாலக்கரை பகுதியில் அமைந்துள்ள புனித சகாயமாதா கிறிஸ்தவ பேராலயத்தில் இன்று குருத்தோலை ஞாயிறு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி சுமார் 250க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ பெருமக்கள் தென்னங்கீற்றால் செய்யப்பட்ட கிறிஸ்தவ சிலுவைகளை உயரே தூக்கி பிடித்தும், தோளில் சுமந்த படியும் வீதிகளில் ஊர்வலம் சென்றனர்.

News March 24, 2024

திருச்சியில் தயார் நிலையில்…

image

நாடாளுமன்றத் தேர்தல் – 2024 தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இதனை தொடர்ந்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் திருச்சியில் இன்று (24.03.2024) நடைபெற உள்ளது.

error: Content is protected !!