India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையில் 19 வயதினருக்கான, கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான திருச்சி மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் தேர்வு வரும் ஏப்.,21 அன்று சாரநாதன் பொறியியல் கல்லூரியில் காலை 6 :30 மணிக்கு நடைபெறுகிறது. மேலும், தகவலுக்கு 7010757073 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணப்பாறை திருச்சி மாவட்டம் வளநாடு அருகே உள்ள தோப்புப்பட்டியைச் சேர்ந்தவர் மோகன் ( 50) இவர், நேற்று தனது வீட்டிற்கும் அருகாமையில் வசிக்கும், 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் மணப்பாறை மகளிர் போலீசில் கொடுத்த புகாரில், போக்சோ சட்டத்தின் கீழ் மோகன் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாநகரில் ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்து வரும் புழுக்கமான வானிலைக்கு மத்தியில், குடியிருப்பாளர்கள் குளிரூட்டிகள் மற்றும் பிற மின்சாதனங்களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், மின்சார நுகர்வு 30% அதிகரித்துள்ளது.
இது குறித்து மின்வாரிய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், தேர்தல்-தேர்வுகள் முடிந்ததும் பராமரிப்பு பணி மீண்டும் துவக்கப்படும் என்றார்.
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் கடந்த 6ம் தேதி ரூ.50 லட்சமும், கடந்த 7ம் தேதி ரூ.1கோடியே 50 லட்சமும், திருச்சி மேற்கு தொகுதியில் ரூ.1,29,09,850 வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதுவரை திருச்சியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் ரூ.3 கோடிக்கு மேல் பிடிபட்டிருப்பதாகவும்,
இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் திருச்சி மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
சிவகாசியிலிருந்து நேற்று இரவு தீப்பெட்டி பண்டல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை திருச்சி- துவரங்குறிச்சி அருகே வந்தபோது, லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில் சுமார் 5 லட்சம் மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்களில் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. தகவலின் பேரில் துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.
பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு, திருச்சி ரயில் நிலையத்தில் அஞ்சலக ஊழியர்களால் வரையப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி கோலத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சி தலைவருமான பிரதீப் குமார் அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அந்த ரங்கோலி கோலத்தில் “என் வாக்கு என் உரிமை வாக்களிப்போம்”என்ற வாசகமும் இடம்பெற்று இருந்தது.
திருச்சி நாவலர் நாடு உலகநாத புரத்தைச் சேர்ந்த மோகன் குமார் 40. எலக்ட்ரிஷன் ஆக வேலை பார்த்து வருகிறார் .நேற்று மோகன் உறையூர் காசிசெட்டி தெருவில், வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டார்.அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமணையில் சேர்த்தனர், சிகிச்சை பலனின்றி இறந்தார். மோகன் மனைவி கீதா கொடுத்த புகாரின்பேரில் உறையூர் போலீஸ் வழக்கு பதிவு.
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு, இன்று சிவனடியார் அகோரிகள் தலையில் சிவ லிங்கத்தை சுமந்து நடனம் ஆடிக்கொண்டு சிறப்பு வேண்டுதலில் ஈடுபட்டனர். மேலும் 30க்கும் மேற்பட்ட ருத்ராட்சம் மாலைகளை கழுத்தில் அணிந்து பக்தர்கள் அனைவருக்கும் ஆசி வழங்கினர்.
திருச்சியில் வெப்பம் 40.7டிகிரி செல்சியஸை தொட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்காத நிலையில், கோடையின் கடுமையான வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிகளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும், வரும் நாட்களில் 2 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
திருச்சி ராஜம் கிருஷ்ணமூர்த்தி பப்ளிக் பள்ளி ஆண்டு விழா நேற்று நடந்தது. தேசியக் கல்லூரி செயலாளர் ரகுநாதன் தலைமை வகித்தார். விழாவில் தென்னக ரயில்வே வணிக மேலாளர் மோகனப்பிரியா, மாணவ மாணவிகளுக்கு பன்முகத்திறமை, வளர்ச்சி மட்டுமே மாணவர்களின் எதிர்காலத்தை சிறந்த முறையில் அமைக்க உதவுகிறது என்று கூறினார். குழந்தைகளிடம் பாலின கல்வி மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.
Sorry, no posts matched your criteria.