India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (7 மணி வரை) லேசானது முதல் மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மணிக்கு 30 – 40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி லோக்சபா தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா போட்டியிடுகிறார். சட்டசபை தொகுதிகளில் தொகுதி பணிக்குழு பொறுப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தென்னூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் குமார் பரஞ்சோதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மணிகண்டம் அருகே உள்ள குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் அப்துல் சமது (60), இவரது மனைவி தாஜு நிஷா (53). நேற்று காலை 11 ரம்ஜான் பண்டிகையொட்டி கேஸ் அடுப்பில் பிரியாணி சமைத்துள்ளார். அப்போது திடீரென தீப்பிடித்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். காயமடைந்த தாஜூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று இரவு 9 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்காக ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
துவாக்குடி விஓசி நகரை சேர்ந்தவர் ராஜசேகர் மனைவி சித்திரா (26). இவருக்கு இன்று பிரசவ வலி ஏற்பட்டது. பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது மருத்துவமனை செல்லும் வழியிலேயே ஆண் குழந்தை பிறந்தது. ஆம்புலன்ஸ் பணியாளர்களான அவசர மருத்துவ உதவியாளர் ராஜ்குமார், அண்ணாதுரை ஆகியோரை அப்பகுதி மக்கள் பாராட்டினார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு மாநில சமரச தேர்வு மையம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி திருச்சி ஒருங்கிணைந்த கோர்ட்டில் நேற்று சமரச தீர்வு மையத்தின் சார்பாக 19வது ஆண்டு சமரச விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை திருச்சி மாவட்ட நீதிபதி பாபு தொடங்கி வைத்தார். ஊர்வலம் திருச்சி கோர்ட்டில் இருந்து திருச்சி மாநகராட்சி அலுவலகம் வழியாக மீண்டும் திருச்சி கோர்ட்டுக்கு வந்தடைந்தது.
திருச்சியைச் சேர்ந்த லாடிஸ் லாஸ் சின்னதுரை (101) திருச்சியில் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பட்டம் பெற்று, அதே கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர். இவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு ஆசிரியராக இருந்தவர். இயேசு சபையில் தனது 41வது வயதில் இணைந்து 1970 மார்ச் 13ல் பங்கு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். இந்நிலையில் அவர் நேற்று திண்டுக்கல் பெஸ்கி இல்லத்தில் காலமானார்.
மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று உண்டியல் எண்ணும் பணி கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் நடைபெற்றது. அதில், ரொக்க பணமாக ரூ.92 லட்சத்து 93 ஆயிரத்து 585, தங்கம் 1 கிலோ 296 கிராமும், வெள்ளி 2 கிலோ 579 கிராமும், அயல்நாட்டு ரூபாய் நோட்டுகள் 114 மற்றும் அயல் நாட்டு நாணயங்கள் 1288 காணிக்கையாக கிடைக்கப் பெறப்பட்டன.
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட மருதாண்டாகுறிச்சி , மல்லியம்பத்து பகுதியில் சாலையில் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் தெரு நாய்களால் தொல்லை ஏற்படுவதாகவும் எனவே அவற்றை பிடிக்கவும் பொதுமக்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில் இன்று மாநகராட்சி பணியாளர்கள் இப்பகுதியில் சாலைகளில் திரிந்த நாய்களைப் பிடித்து கருத்தடை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
பொன்மலைப்பட்டி,தெற்கு உக்கடை விறகு கடை தெருவை சேர்ந்த மாரியப்பன்(37), கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி, மகன் உள்ளனர். கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து மாரியப்பன் நேற்று காலை தேஜஸ் ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.