Tiruchirappalli

News April 15, 2024

லால்குடி: காங்கிரஸ் தலைவருக்கு வாழ்த்து

image

தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம்.சரவணன் சிறுகனூர் பகுதியில் அவரை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அவருடன் எல்.ரெக்ஸ், தேர்தல் பொறுப்பாளர் பஜார் மைதீன் கலை பிரிவு ராஜீவ் காந்தி சிந்தை ஸ்ரீராம் வினோத் புருஷோத்தமன் மற்றும் பலர் உள்ளனர்.

News April 15, 2024

‘அலோபதி மருத்துவத்தை அழிக்க திட்டம்’

image

சமூக சமத்துவத்திற்கான டாக்டர் சங்க பொது செயலாளர் ரவீந்திரநாத் செய்தியாளரிடம் நேற்று பேசுகையில், அலோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி ஆகியவற்றை இணைத்து மிக்சோபதி எனும் மருத்துவ முறையை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது அலோபதி எனும் நவீன அறிவியல் சிகிச்சை முறையை ஒழித்துக் கட்டும் செயலாகும். மூடநம்பிக்கையும், ஆன்மீகத்தையும், மருத்துவத்துறையில் நுழைக்க கூடாது என்று வன்மையாக கண்டித்தார்.

News April 15, 2024

திருச்சி: வானதி சீனிவாசன் பிரச்சாரம்

image

கரூர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து வேலுச்சாமிபுரத்தில் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் நேற்று வாக்கு சேகரிக்கும்போது, கரூரில் இருந்தவர் இப்போது சிறையில் இருக்கிறார். கரூரைச் சேர்ந்த பெரிய தம்பி, அண்ணாமலை கோவையில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அவரை நாங்கள் வெற்றிபெறச் செய்து விடுவோம். சின்னத்தம்பி செந்தில்நாதனை நீங்கள் வெற்றி பெறச் செய்யுங்கள் என்று கூறினார்.

News April 14, 2024

திருச்சி: செல்போனில் அழைத்து மிரட்டும் கும்பல்

image

திருச்சி ஸ்ரீரங்கம் கீழ அடையவளஞ்சான் வீதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 23 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த குடியிருப்பு வாசிகளுக்கு 40க்கும் மேற்பட்ட செல்போன் எண்களில் இருந்து இரவு பகல் என எந்நேரமும் மர்ம நபர்கள் அழைத்து பேசுவதாகவும் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதாகவும், பாலாஜி குடியிருப்பு உரிமையாளர் நலச்சங்கம் நேற்று ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் நிவேதா லட்சுமி இடம் புகார் அளித்தனர்.

News April 14, 2024

திருச்சி: உளவுத்துறை காவலர் பலி

image

திருச்சி பெட்டவாய்த்தலை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் திருச்சி சிபிசிஐடி தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் மராமத்து வேலை நடைபெற்று வருகிறது. இதனால்,  இன்று காலை சிமெண்ட் பூச்சிக்கு தண்ணீர் விடும் பொழுது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

News April 14, 2024

திருச்சி: தீ குளித்த இளைஞர்

image

மணப்பாறையை அடுத்த காட்டுப்பட்டியில் வசித்து வருபவர் தமிழ்குடிமகன் (28). இவருக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியில் இருந்த அவர் நேற்று மதுபோதையில் வீட்டுக்கு வந்து தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 14, 2024

கி வீரமணி அமைச்சர் நேரு சந்திப்பு

image

திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்துள்ள திராவிட கழக தலைவர் வீரமணியை திருச்சி புத்தூர் நால்ரோடு அருகே உள்ள பெரியார் மாளிகையில் அமைச்சர் கே என் நேரு இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். மேலும் இந்நிகழ்வில் திமுக மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, மாநகராட்சி மேயர் அன்பழகன், மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரணி குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

News April 14, 2024

திருச்சி:  தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு

image

திருச்சி கோட்டத்தில் ஈரோடு- திருப்பூர் இடையே ஈங்கூர்- ஊத்துக்குளி ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ள விஜயமங்கலம் ரயில்வே யார்டில் இன்ஜினியரிங் பணிகள் நடைபெறுவதால் திருச்சி- பாலக்காடு டவுன் இடையே இயக்கப்படும் முன்பதிவு இல்லாத, பாலக்காடு எக்ஸ்பிரஸ் (16843) ரயில் நாளை 15,4.24. மதியம் 1மணிக்கு திருச்சியில் இருந்து ஈரோடு வரை தான் செல்லும். பாலக்காடு செல்லாது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

News April 14, 2024

மலைக்கோட்டையில் சித்திரை திருவிழா

image

திருச்சியின் அடையாளமான மலைக்கோட்டை சாமி கோயிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கொடிமரத்திற்கு வந்தார். அதன் பின்பு தீப ஆரத்திகள் நடைபெற்றது. பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர்.

News April 14, 2024

திருச்சி: கலெக்டர் எச்சரிக்கை

image

திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் நேற்று விடுத்த அறிக்கையில், மக்களவை தேர்தலில் , வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும், என்றும். மேலும் வீட்டின் உரிமையாளரின் அனுமதி பெறாமல் வீட்டிற்கு முன் கட்சியின் சின்னத்தின் ஸ்டிக்கர் ஒட்டுவது வரைவது போன்ற செயல்களில் ஈடுபடும் அரசியல் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

error: Content is protected !!