Tiruchirappalli

News April 20, 2024

வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் பேக்கிங்

image

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரம் நிறைவானதையடுத்து
திருச்சியில் உள்ள ஒரு வாக்குக்சாவடியில்
வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி நடைபெற்றது. வாக்கு பதிவு எந்திரங்கள் பத்திரமாக சீல் வைக்கப்பட்டு காவல்துறை பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணும் மையத்துக்கு அனுப்பும் பணியும் முடிந்தது.

News April 19, 2024

திருச்சி:வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகள்

image

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் இன்று காலை முதல் நடைபெற்ற வந்த வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. இதனை அடுத்து திருச்சி வெஸ்ட்ரி பள்ளியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் தொடங்கியது. வாக்குப்பதிவு மையங்களின் மேற்பார்வையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டனர்.

News April 19, 2024

வாக்களிக்காமல் சென்ற முன்னாள் எம்பி

image

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் இன்று திருச்சி ஏர்போர்ட் அருகே உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்றார். அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுக்க புகைப்படக்காரர்கள் பின் தொடர்ந்த போது தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் வாக்களிக்காமல் முன்னாள் எம்பி ப.குமார் திரும்பி சென்றார். இதனால் அந்த வாக்குச்சாவடியில் நீண்ட நேரம் பரபரப்பு நிலவி வந்தது.

News April 19, 2024

வாக்குப்பதிவு மையத்தில் திடீர் ஆய்வு

image

திருச்சிராப்பள்ளி காஜாமலை குழந்தை ஏசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையத்தில் பொதுமக்கள் வாக்களிப்பதை இன்று மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரதீப் குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதையும் பார்வையிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கலந்து கொண்டனர்.

News April 19, 2024

‘இந்தியா கூட்டணி வெற்றி பெறும்’

image

திருச்சியில் காதர் மொய்தீன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில்,
இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40-க்கு 40 இடங்களில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெறும். மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெறுவார் என்றார்.

News April 19, 2024

இயந்திர பழுது காரணமாக காத்திருந்த மக்கள்

image

திருச்சி கிராப்பட்டி தனியார் பள்ளியில் வாக்கு சாவடி எண் 212ல் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தனது வாக்கினை செலுத்தினர். அருகில் உள்ள 214, 215வது வாக்கு சாவடியில் இயந்திர பழுது காரணமாக அரை மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மேலும் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை, எவ்வளவு நேரம் ஆகும் எனக் கூறுங்கள் என தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.

News April 19, 2024

திருச்சி ஆட்சியர் ஜனநாயக கடமை 

image

திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தேர்தலில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மா.பிரதீப்குமார் காஜாமலை ஜம்லியாதஸ் சாதிக் மெட்ரிகுலேசன் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் அங்கிருக்கும் வாக்காளர்களை சந்தித்து வாக்கு பதிவு மையத்தில் ஏதும் குறைபாடு உள்ளதா என கேட்டறிந்தார். ஆட்சியர் வாக்குப்பதிவு செய்து பின்பு பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.

News April 19, 2024

திருச்சி எம்பி சிவா ஜனநாயக கடமை

image

திருச்சி மக்களவைத் தொகுதியில் இன்று தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில், திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி எம்பி சிவா தனது வாக்கை பதிவு செய்தார். மேலும் பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்து சென்றார்.

News April 19, 2024

தனது வாக்கினை பதிவுசெய்த அமைச்சர் நேரு

image

திருச்சியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறும் நிலையில், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று காலையிலேயே தனக்கு வாக்குள்ள திருச்சி பாராளுமன்ற தொகுதி, திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியான தில்லைநகரில் உள்ள மக்கள் மன்றத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

News April 18, 2024

திருச்சி தொகுதி வேட்பாளர்கள் பற்றி தெரியுமா?

image

திருச்சி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது செய்தியின் தலைப்பையோ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.

error: Content is protected !!