Tiruchirappalli

News March 27, 2024

திருச்சி வேட்பு மனு தாக்கல் அறை மூடல்

image

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்று இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி அதிமுக, அமமுக,மதிமுக, நாம் தமிழர் கட்சி, மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு வேட்பாளர்கள் இன்று 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்தனர். மேலும் இதற்கான நேரம் முடிந்த நிலையில் திருச்சிராப்பள்ளி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வேட்பு மனு தாக்கல் செய்யும் அறை மூடப்பட்டது.

News March 27, 2024

திருச்சி: அதிமுக தேர்தல் அலுவலகப் பணி ஆய்வு!

image

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கான அதிமுக தலைமை தேர்தல் அலுவலகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளின் நிலை குறித்து இன்று அதிமுக வேட்பாளர் கருப்பையா, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். உடன் இப்பகுதி அதிமுகவினர் இருந்தனர்.

News March 27, 2024

திருச்சியில் மதிமுக வேட்பாளர் துரைவைகோ பேட்டி.!

image

திருச்சியில் இன்று செய்தியாளர்களுக்கு மதிமுக வேட்பாளர் துரைவைகோ பேட்டி அளித்தார்: அதில், தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் கொடுக்க மறுத்தாலும், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வரும்போது, அவர்கள் பம்பரம் சின்னம் ஒதுக்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. பாஜகவை எதிர்க்கும் இயக்கங்களை முடக்கவே , இதுபோன்று வருமான வரித்துறை, அமலாக்கத்துறை  தேர்தல் ஆணையத்தை பாஜக அரசு பயன்படுத்துகிறது என்றார்.

News March 27, 2024

திருச்சியில் மாணவி செய்த விபரீத காரியம்

image

திருச்சி கீழ அம்பிகாபுரம் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகள் யுவஸ்ரீ (23). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் எம். ஏ முதுகலை ஆங்கில பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே மனமுடைந்த யுவஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் விசாரணை

News March 27, 2024

சென்னைக்கு இணையாக மாறும் திருச்சி

image

சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ பணிகள் தொடங்க உள்ளன.அதாவது திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மெட்ரோ தொடங்கப்பட உள்ளது. இதில் திருச்சியில் தொடங்கப்பட உள்ள மெட்ரோவில் மேப் வெளியாகி உள்ளது.அறிக்கையில், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் சேலம் மாநகரில் பெருந்திரள் மற்றும் துரித போக்குவரத்திற்கான விரிவான சாத்தியக்கூறு ஆகும்.

News March 27, 2024

திருச்சியில் சீமான் பிரச்சாரம் அறிவிப்பு

image

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் வரும் ஏப்ரல் 2-ம் தேதி பிரச்சாரம் செய்ய உள்ளார். மேலும் அன்றையதினம் காலை கரூர் நாடாளுமன்ற தொகுதி மணப்பாறை பகுதியில் வேன் பிரச்சாரம் செய்கிறார். மாலை ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, பகுதியில் வாகன பிரச்சாரம் மேற்கொள்கிறார். மேலும் இரவு மலைக்கோட்டை பகுதியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் எனது தகவல் வெளியாகி உள்ளது.

News March 26, 2024

தேர்தல் பிரச்சார பேரணியில் கலந்து கொண்ட ஆட்சியர்

image

திருச்சி, திருவெறும்பூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், நடைபெற்ற தேர்தல் பிரச்சார பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான பிரதீப் குமார் அவர்கள் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ,துண்டு பிரசுரங்களை வழங்கி, பேரணியில் கலந்து கொண்டு சென்றார்.

News March 26, 2024

திருச்சி தொகுதியில் இதுவரை 12 வேட்பு மனுக்கள் தாக்கல்

image

திருச்சியில் ஒரே நாளில் முக்கிய அரசியல் கட்சிகளான திமுக கூட்டணியின் மதிமுக வேட்பாளர், அதிமுக, அமமுக., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மற்றும் இந்த அரசியல் கட்சிகளின் மாற்று வேட்பாளர்கள், சுயேச்சைகள் என ஒரே நாளில் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி திருச்சி தொகுதியில் இது வரை 12 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

News March 26, 2024

திருச்சியில் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை.!

image

திருச்சியில் கடந்த 2019ம் ஆண்டு ஏர்போர்ட் பகுதியில் டிபன் கடை நடத்தி வந்த உமா சத்தியா என்பவர் சிவசண்முகம் என்பவரை தனது கடைக்கு வரக்கூடாது என்று சொன்னதால், ஆத்திரமடைந்த சிவசண்முகம் உமாவை கத்தியால் குத்தி படுகொலை செய்தார். இதுகுறித்த வழக்கு, இன்று திருச்சி 3வது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சிவசண்முகத்திற்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

News March 26, 2024

திருச்சி எஸ்.பி-யின் முக்கிய அறிக்கை

image

தமிழ்நாட்டில் வருகின்ற 19.4.2024 நடைபெற உள்ள பாராளுமன்ற பொது தேர்தல் பணிக்காக முன்னாள் ராணுவ வீரர்கள், முன்னாள் காவல்துறையினர், முன்னாள் தீயணைப்பு துறையினர், முன்னாள் சிறை துறையினர் ஆகியோர் வருகின்ற 17/4/2024 முதல் 19/4/2024 வரை 3 நாட்கள் தேர்தல் பணியாற்ற விரும்புவோர், தங்கள் அருகாமையில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு விருப்பத்தினை தெரிவிக்க திருச்சி மாவட்ட எஸ்பி இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!