India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மருங்காபுரி அருகே திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் யாகபுரம் என்ற இடத்தில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் காயம் அடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் உயிரிழந்த இருவரின் உடல்களை உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் விசாரணை.
திருச்சியில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர்,திருச்சி,அரியலூர் மாவட்டங்களில் நேற்றும் இன்றும் வெப்ப அலை வீசக் கூடும் . எனவே பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் குடித்து பகல் 12 மணிக்கு மேல் வெளியில் செல்ல வேண்டாம் என்று திருச்சி மாவட்ட மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகர் மாவட்ட தலைவர் எல். ரெக்ஸ் தலைமை வகித்து பேசியதாவது, திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் கூட்டங்கள் மாநகர் பகுதியில் தனித்தனியாக வரும் ஜூன் 3ந்தேதிக்குள் நடத்த வேண்டும். இதில், பல்வேறு பிரிவுகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
சோமரசன் பேட்டை லிங்கம்(55). இவர் நாடார் சத்திரத்தில் பழக்கடை நடத்தி வருகிறார்.இவரது மனைவி கொடிமலர்(48). இவர்களுக்கு ராஜ குமரன் என்ற மகன் உள்ளார். நேற்று காலையில் பழம் வாங்க சென்று விட்டு, வீடு திரும்பியபோது கொடி மலர் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணையில் காதலுக்கு குறுக்கே நின்றதால் மகனே தாயை கொன்றது தெரியவந்ததையடுத்து போலீசார் ராஜகுமாரனை கைது செய்தனர்.
திருச்சி, பாலக்கரை ஸ்பெஷல் போலீசாக பணியாற்றி வருபவர் அஜ்மல் கான். நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கீழப்புதூர் பகுதியை சேர்ந்த பிரசாத்(25) என்பவர் போலீசிடம் ரகளையில் ஈடுபட்டார். இது குறித்து அஜ்மல்கான், பாலக்கரை
போலீஸ் ஸ்டேஷனில், புகார் செய்தார். போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த உதயகுமார் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.அதில் மருதூர் ஊராட்சியில் பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், உரிய விதிமுறைகளை அதிகாரிகள் கடைபிடிக்காமல் இறந்தவர்கள் பெயரிலும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களை பயனாளிகளாக காட்டியும் ஒரே வீட்டை இருவரது வீடாக காட்டியும்,70 வீடுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர் என்று கூறினார்.
திருச்சி திருவானைக்காவலை சேர்ந்த பழனியம்மாள் (45), நேற்று மதியம் தனது மகளுடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். டிவிஎஸ் டோல்கேட் அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி ஸ்கூட்டரில் மோதியது பழனியம்மாள் கீழே விழுந்தார். பின்னால் வந்த கான்கிரீட் கலவை லாரியில் சக்கரம் அவரது தலை மீது ஏறி, தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார், லாரி டிரைவர் தப்பி ஓடினார்.போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு.
திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த, ஜெயஸ்ரீ திருச்சியில் உள்ள கல்லூரியில் 1 ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த கிஷோரை காதலித்து வந்துள்ளார், கிஷோர் மீது பல வழக்குகள் உள்ளன. நேற்று, நண்பர் வீட்டு மாடியில் பேசிக் கொண்டிருந்தபோது, இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு ஜெயஸ்ரீ மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார், இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
வையம்பட்டி அடுத்த பஞ்சந்தாங்கி சொரூபம் வனப்பகுதியில் இன்று காலை ஆண் சடலம் ஒன்று தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளது. தகவலின் பேரில் வனத்துறையினர் மற்றும் வையம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மேற்கொண்ட விசாரணையில் அந்த நபர் மீனாட்சியூர் காளை எனவும், மனநலம் பாதிக்கப்பட்டவர்
என்றும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து இது குறித்து வையம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி கே.கே நகர் பகுதிக்கு உட்பட்ட டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இன்று சிமெண்ட் கலவை ஏற்றி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென டூவீலரில் எதிரே வந்த பெண் மீது மோதியது. இதில், கீழே விழுந்த பெண் லாரி டயரில் சிக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.