Tiruchirappalli

News April 25, 2024

திருச்சியில் விவசாயிகள் செயற்குழு கூட்டம்.!

image

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் இன்று தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மண்டல செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக தமிழகத்தில் உள்ள பொதுப்பணித்துறை, பஞ்சாயத்து ஏரி குளங்களையும், தூர்வாரி தடுப்பணைகளை புனரமைக்கப்பட வேண்டும். இலவச விவசாய மின் இணைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

News April 25, 2024

திருச்சி: மே-6 அன்று விடுமுறை 

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் சித்திரை தேர் திருவிழாவினை முன்னிட்டு, வருகின்ற 06.05.2024 திங்கட்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதிலாக வருகின்ற 29.6.2024 சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. மேலும் பள்ளி,கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது என தெரிவித்துள்ளார்.

News April 25, 2024

திருச்சி மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

திருச்சி மாவட்டத்தில் இன்று (ஏப்.25) வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் திருச்சி மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, திருச்சி மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 25, 2024

திருச்சி கலெக்டர் உட்பட 5 பேர் ஆஜர்.!

image

திருச்சி கொள்ளிடம் பகுதியில் உள்ள மணல் குவாரியில் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை செய்து, அதில் பல ஆவணங்களை எடுத்துச் சென்றனர். மேலும் மணல் எவ்வளவு ஆழம் அள்ளப்பட்டுள்ளது, எனவும் சோதனை நடத்தினர். இது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதன்படி இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்கள் சென்னையில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜராகிறார்கள் .

News April 25, 2024

திருச்சியில் அனல் காற்றால் வாகன ஓட்டிகள் தவிப்பு.

image

திருச்சியில், நேற்று 104 டிகிரி வெயில் வெளுத்து வாங்கியது. வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்ல முடியாமல் தவியாய் தவித்தனர். மேலும் சாலைகளில் செல்வோர், குடை பிடித்த படியும் துணிகளால் முகத்தை மூடிய படியும் சென்றனர். இதனால் பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர் .திருச்சி மாநகரின் சாலைகளில் போக்குவரத்து குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. அத்தியாவசிய தேவைக்கு மட்டும் மக்கள் வெளியில் வந்தனர்.

News April 25, 2024

திருச்சியில் அனல் காற்றால் வாகன ஓட்டிகள் தவிப்பு.

image

திருச்சியில், நேற்று 104 டிகிரி வெயில் வெளுத்து வாங்கியது. வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்ல முடியாமல் தவியாய் தவித்தனர். மேலும் சாலைகளில் செல்வோர், குடை பிடித்த படியும் துணிகளால் முகத்தை மூடிய படியும் சென்றனர். இதனால் பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர் .திருச்சி மாநகரின் சாலைகளில் போக்குவரத்து குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. அத்தியாவசிய தேவைக்கு மட்டும் மக்கள் வெளியில் வந்தனர்.

News April 25, 2024

ரயில்வே கேட் கீப்பர்களுக்கு சிறப்பு பயிற்சி.

image

திருச்சி ரயில்வே கோட்டத்தில், ஒப்பந்த அடிப்படையில் முன்னாள் ராணுவ வீரர்கள் ரயில்வே கேட் கீப்பர் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ரயில்வே கேட் களை இயக்குதல் மற்றும் பராமரித்தல் குறித்த அடிப்படை பயிற்சி வகுப்பு திருச்சி குட்செட் பகுதியில் உள்ள, ரயில்வே கேட் பகுதியில் ,நேற்று. நடைபெற்றது .அப்போது புதிதாக தேர்வானவர்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

News April 25, 2024

திருச்சி அரங்கநாதர் கோயிலில் உண்டியல் காணிக்கை

image

வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்நிலையில் இன்று தற்போது பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு வருகிறது.

News April 25, 2024

திருச்சி: கார் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

image

துவரங்குறிச்சி அருகே திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் யாகபுரம் என்ற இடத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மணப்பாறை யூனியன் அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணிபுரியும் விஜயலட்சுமி மற்றும் அவரது கணவர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News April 25, 2024

திருச்சியில் போதை மாத்திரை விற்றவர் கைது

image

திருவெறும்பூர் அருகே காட்டூர் அண்ணா நகர் குருவி மண்டபம் பகுதியில் போதை மாத்திரை இருப்பதாக திருச்சி எஸ்பி தனிப்படை போலீசருக்கு தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர், ரியாஸ்கான் தலைமையிலான போலீசார் நேற்று அப்பகுதியில் சோதனை நடத்தினர்.அப்போது அரியமங்கலத்தை சேர்ந்த நஸ்ருதீன் போதை மாத்திரைகளை விற்றது தெரிந்தது. அவரிடமிருந்து 26,250 மதிப்பிலான போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து, நஸ்ருதீனை கைது செய்தனர்.

error: Content is protected !!